Latest Updates
-
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
Diabetes: சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்.. ஏன் என்று விளக்கும் டாக்டர் ஃபரூக்..
Diabetes And Sugar Free: உலகிலேயே இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 77 மில்லியன் மக்கள் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் லான்செட் ஆய்வில் இந்தியாவில் 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 11.4 சதவீதம் ஆகும்.
சர்க்கரை நோய் ஒரு கோளாறாக இருந்தாலும், இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டால், முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. மாறாக வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களை செய்வதன் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.

முக்கியமாக சர்க்கரை நோய் இருந்தால், சர்க்கரை நிறைந்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் பலர் சர்க்கரைக்கு மாற்றாக சுகர் ப்ரீ மாத்திரைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். உண்மையிலேயே சர்க்கரை நோயாளிகளுக்கு சுகர் ப்ரீ நல்லது தானா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
இதுக்குறித்த பதிவு ஒன்றை சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "நீரிழிவு குறைபாடு இருப்பவர்கள் பலரும் "இனிப்பு" சேர்க்க வேண்டாம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் பக்கத்து வீட்டுகாரர் கூறினார், என்றும் வாக்கிக் நண்பர் கூறினார் என்றும் சீனி சேர்ப்பதை நிறுத்தி விட்டு தங்களுக்கு தோதாக நாட்டு சர்க்கரை சேர்க்க ஆரம்பிக்கிறார்கள். இது தவறென்று அவர்கள் உணர வேண்டும்
நீரிழிவு நோயர்களைப் பொருத்தமட்டில் சீனி, நாட்டு சரக்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி, தேன், இனிப்பான பழங்கள் என்று அனைத்தும் ரத்த சர்க்கரை அளவுகளை அதிகமாக உயர்த்துபவையே. இதில் சீனியும், நாட்டு சர்க்கரையும் கரும்பில் இருந்து வருபவையே. எனவே இரண்டும் நீரிழிவு நோயரின் ரத்த க்ளூகோஸ் அளவுகளை உயர்த்துவதில் ஒன்று தான் என்று உணர வேண்டும்.
இதற்கடுத்த படியாக சுகர் ஃப்ரீ எனும் மாத்திரையை பொடியை பலர் பயன்படுத்தி வருகிறார்கள். சுகர் ஃப்ரீ தீவிரமாக ரத்த க்ளூகோஸ் அளவுகளை உயர்த்துவதில்லை என்றாலும் நமது மூளையில் இனிப்பு சுவை உருவாக்கும் போதை என்பது தொடர்ந்து சுகர் ஃப்ரீ உபயோகப்படுத்துபவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும்
என்ன? இனிப்பு சுவை போதையை உருவாக்குமா? ஆம்... ஒவ்வொரு முறை நாம் இனிப்பு சுவையை சுவைக்கும் போதும் மூளையின் ஊக்கமளிக்கும் மண்டலம் தூண்டப்பட்டு மறுமுறை இனிப்பு சுவையை விரும்பி உண்ணச் செய்கிறது. இதனால் நாம் இனிப்பு சுவை தரும் போதைக்கு அடிமையாகிறோம். எப்படி மது அருந்துபவர், கொகைன் கஞ்சா போன்றவற்றை எடுப்பவர் அந்த விசயங்கள் தரும் போதைக்கு அடிமையாகிறாரோ, அதே போல் தான் இந்த இனிப்பும் செய்கிறது.
இதனால் தான் சீனியை நிறுத்தச் சொன்னால் நம் மனம் நாட்டு சர்க்கரைக்குத் தாவுகிறது. நாட்டு சர்க்கரையை நிறுத்தச் சொன்னால், பனங்கருப்பட்டிக்குத் தாவுகிறது. அதையும் நிறுத்தச் சொன்னால் இறுதியில் சுகர் ஃப்ரீக்கு வருகிறது. இப்படி சுகர் ஃப்ரீ போட்டு பருகுபவர்களுக்கு இந்த இனிப்பு சுவை மீது மூளைக்கு போதையும் அடிமைத்தனமும் இருந்து கொண்டே இருக்கும். எனவே எப்போதெல்லாம்
இனிப்பான ஸ்வீட் (இனிப்புப் பண்டங்கள்)
சாக்லேட்( இனிப்புக் கட்டி)
ஐஸ்க்ரீம்( பனிக்கூழ்)
அல்வா ( இனிப்புக் களி)
போன்றவற்றைக் காணுங்காள் நாக்கு ஊறி மூளையில் உள்ள போதை மையம் தூண்டப்பட்டு அதை உண்பார்கள். கூடவே தேவைக்கு மீறியும். அரிசி கோதுமை போன்ற தானியங்களினால் செய்யப்பட்ட உணவுகளைக் குறைத்து உண்டாலும் நொறுக்குத் தீணி விசயத்தில் எல்லை மீறுபவர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு மாவுச்சத்து சார்ந்த இனிப்பு சார்ந்த விசயங்களை தொடர்ந்து அதிகமாக உண்ணச் சொல்லி மூளை உந்திக் கொண்டே இருப்பதை தான் "க்ரேவிங்" ( அடங்காத அவா) என்று அழைக்கிறோம். இத்தகைய க்ரேவிங்கை மனதால் கட்டுப்படுத்துவது கடினம். இந்த க்ரேவிங்கை வெகுவாகக் கட்டுப்படுத்திட முதன்முதலில் செய்ய வேண்டியது இனிப்பு சுவை கொண்ட அனைத்தையும் ஒதுக்குவதாகும். எனவே நீரிழிவு நோயர்கள் இன்றிலிருந்து தாங்கள் பருகும்
தேனீரையோ ( டீ)
கொட்டை வடிநீரையோ ( காபி)
சீனி
நாட்டு சர்க்கரை
பனங்கற்கண்டு
கருப்பட்டி
சுகர் ஃப்ரீ
தேன்
என்று எதையும் கலக்காமல் பருகலாம். பாலில் கூட லாக்டோஸ் எனும் இயற்கையான இனிப்பு இருப்பதால் அடங்காத நீரிழிவு இருப்பவர்கள் பால் டீ பால் காபி பருகுவதை, தற்காலிகமாக நிறுத்திவிட்டு, இனிப்பு சேர்க்காத ப்ளாக் டீ, இனிப்பு சேர்க்காத ப்ளாக் காபி, இனிப்பு சேர்க்காத க்ரீன் டீ என்று பருகுவது அவர்கள் ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்கும் மந்திரமாகும். இதைக் கூற எனக்குத் தகுதி இருப்பதாகவே நினைக்கிறேன் காரணம் நான் கடந்த எட்டு வருடங்களாக இனிப்பு சுவை சேர்ப்பதில்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே நண்பர்களே! உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்து, இதுவரை சுகர் ப்ரீ எடுத்துக் கொண்டிருந்தால், இனிமேல் அதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications