For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடிகர் குணால் கெமு இவ்ளோ ஃபிட்டா இருக்க என்ன செய்றார் தெரியுமா? இத ட்ரை பண்ணுங்க...

நடிகர் குணால் கெமு இவ்ளோ ஃபிட்டா இருக்க என்ன செய்றார் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் மிக விளக்கமாகப் பார்க்கலாம்.

|

பாலிவுட் நடிகரான குணால் கெமு கோல்மால் தொடரின் மூலம் ரசிகர்களிடையே புகழை பெற்றவர். தன்னுடைய நிறைய படங்களுக்கு நடுவே அவர் சோஷியல் மீடியாவையும் விடுவதில்லை. அதிலும் அவர் சுறுசுறுப்பாக இறங்கி கலக்கி வருகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தான் இன்ஸ்ட்டாகிராமில் டாப் ரேட்டிங்கில் வலம் வருகிறது. இதில் அவர் தன்னுடைய பிட்னஸ் ரகசியம் பற்றி மனம் திறந்து பேசி உள்ளார். எப்படி தன் பாடியை கட்டுக்கோப்பாக வைத்துள்ளேன் என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

குணால் உடற்பயிற்சி டிப்ஸ்கள்

இவர் தன்னுடைய உடலை மெருகேற்ற எந்த வித தனி உடற்பயிற்சியும் மேற்கொள்ளவில்லையாம். என்னுடைய ஒவ்வொரு படத்தின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப என் உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து வருகிறேன். எலும்பு அடர்த்தியை மேம்படுத்துதல் உடலுக்கு நன்மை அளிக்கும். மேலும் ஒரு மெலிந்த தோற்றத்தை அளிக்கிறது. கொழுப்பை எரிக்கிறது. மனச் சோர்வை எதிர்த்து போரிடுகிறது. டயாபெட்டீஸ் வருவதை குறைக்கிறது. முதுகு வலியை தடுக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இவருடைய மெட்டா பாலிசம் அதிகமாக இருப்பதால் உடல் எடை போடுவது தடுக்கப்படுகிறது.

MOST READ: உலகத்துல அதிகமாக பயன்படுத்தற இமோஜி எது தெரியுமா? அதோட அர்த்தங்கள் என்ன தெரியுமா?

சில உடற்பயிற்சிகள்

புஷ் அப்

தரையில் கைகளை ஊன்றி கொண்டு, தோள்பட்டையை அகலமாக்கி கொண்டு கைகளை மடக்கி மடக்கி புஷ் அப் எடுங்கள்.

உங்கள் மார்பு தரையிலிருந்து சற்று மேலே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடவும். இதை திரும்பவும் செய்யவும்.

10 நிமிடங்கள் இந்த மாதிரி செய்து வாருங்கள்.

மார்பு அழுத்தம்

மார்பு அழுத்தம்

தரையில் மல்லாக்கு படுத்து கொள்ளுங்கள்.

இப்பொழுது டம்பல்ஸ்யை எடுத்து உங்கள் கைகளால் வரை இழுக்கவும்.

அடிவயிற்றை உள்ளே இழுத்து தாடையை மார்பை நோக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது டம்மல்யை கீழே வைத்து விட்டு முழங்கைகள் தோள்பட்டைக்கு கீழே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

10 - 15 தடவை இதை திரும்பவும் செய்யுங்கள்.

இது போக நீங்கள் ட்ரைசெப்ஸ் நீட்டிப்பு, டம்ப்பெல், முழங்கால் நீட்டிப்பு, லெக் பிரஸ், தொடை சுருட்டு,காஃப் ரைஸ், ஸ்க்வாட்ஸ் போன்ற உடற்பயிற்சிகளைக் கூட செய்து வரலாம் என்கிறார்.

குறிப்பு : இந்த உடற்பயிற்சிகளை ஏரோபிக் உடற்பயிற்சியுடன் சேர்த்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

டயட் பிளான்

டயட் பிளான்

டயட் பிளானை பொருத்த வரை நான் எந்த ஒன்றையும் ரெம்ப தீவிரமாக பின்பற்றவில்லை என்று கூறியுள்ளார். இவருக்கு உணவு என்றால் மிகவும் பிடிக்கும். எல்லா விதமான உணவுகளையும் விரும்பி சாப்பிடுகிறார். இருப்பினும் நான் சீஸ் வைத்த உணவுகள், பேக்கிங் உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. காலை, மதியம் மற்றும் இரவு என்று மூன்று வேளை உணவையும் கண்டிப்பாக சாப்பிடுங்கள் என்கிறார்.

பழ ஜூஸ்கள், காய்கறிகள் ஜூஸ் மற்றும் பாகற்காய் ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார்.

MOST READ: விமானத்துல போய்ட்டு இருக்கும்போது 6 மாத குழந்தை இதயத்துடிப்பு நின்று மரணம்...

பாகற்காய் ஜூஸ் ரெசிபி

பாகற்காய் ஜூஸ் ரெசிபி

தேவையான பொருட்கள்

ஒரு மீடியம் வடிவ பாகற்காயை எடுத்துக் கொள்ளுங்கள்

ஒரு கிளாஸில் லெமன் ஜூஸ் மற்றும் ஆப்பிள் ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள்

பயன்படுத்தும் முறை

பாகற்காய், ஆப்பிள் அல்லது லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக அரைக்கவும்

நன்றாக வழுவழுப்பாக அரைக்கும் வரை அரைக்கவும்.

இப்பொழுது ஜூஸை குடியுங்கள்.

ஆரோக்கியமான ஜூஸூடன் உங்கள் உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kunal Khemu's Fitness And Diet Tips

Kunal Khemu, the Bollywood actor, is known for his role in the Golmaal series. In addition to movies, he is also very active on social media.
Desktop Bottom Promotion