Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தூங்கி எழும்போது உங்க தொப்பை காணாம போனா எப்படியிருக்கும்? இத குடிங்க நிச்சயம் நடக்கும்...
ஒரே நாளில் உங்க ஒட்டுமொத்த தொப்பையையும் கரைக்கிற அருமையான ஜூஸ் டயட்டைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அதற்காக ஒரு நாள் முழுக்க நீங்கள் கடைபிடிக்க வேண்டிய பழச்சாறு டயட் முறை பற்றிய
ராத்திரி படுத்து தூங்கிவிட்டு காலையில் எழுந்து பார்க்கும் போது நம்முடைய தொப்பை காணாமல் போயிருந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு மேஜிக் யாருக்காவது நடக்குமா? அப்படியே நடந்தால் அந்த சந்தோஷத்தை அடக்கிக் கொள்ள முடியுமா?

குதித்து கும்மாளம் போடுவோம். அப்படி நடக்குமா என்று சந்தேகப்படறீங்களா? இந்த ஒரு நாள் ஜூஸ் மற்றும் க்ரீன் டயட்டை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணா போதும். நிச்சயம் ஒரே ராத்திரியில உங்க தொப்பை காணாம போயிடும்.

ராத்திரியே தொப்பை கரையுமா?
அப்படி எப்படி ஒரே ராத்திரியில தொப்பை குறையும். அப்படி எப்படி ஒரு மேஜிக் நடக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த க்ரீன் டீ, ஜூஸ் டயட் இருக்கிறதல்லவா இதை முறையாக ஒரு நாள் முழுக்க சாப்பிட்டு வந்தால் மேஜிக் ஏதும் இல்லாமல் அறிவியல் முறைப்படியே உங்களுடைய தொப்பையை எளிதாகக் குறைத்து விட முடியும்.

சராசரி இடுப்பளவு
ஆரோக்கியமான நபர்களுக்கு சராசரியாக இடுப்பளவு எவ்வளவு இருக்க வேண்டும்? எவ்வளவு இருந்தால் அது ஆரோக்கியமானது என்பது பற்றி நிறைய சந்தேகங்களும் குழப்பங்களும் உண்டு. அது தெரியாமலேயே எனக்கு இடுப்பளவு குறைவு, அதிகம் என்று மாறிமாறி புலம்பிக் கொண்டிருக்கிறோம். சராசரி ஆரோக்கிய பெண்களுக்கான இடுப்பளவு 35 செ.மீ வரையும் ஆண்களுக்கு 40 செ.மீ அளவு வரையிலும் இருக்கலாம்.

ஜூஸ், க்ரீன் டீ டயட்டும்
இந்த ஜூஸ் சாப்பாட்டுக்கு முன்பா? பின்பா? என்று நீங்கள் கேட்பது காதுகளில் கேட்கிறது. அட! ஒரு நாள் சாப்பாடே இந்த க்ரீன் டீயும் ஜூஸ் மட்டும் தான் சாப்பாடே. சரி. இந்த ஜூஸையும் க்ரீன் டீயையும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறையும் முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தெந்த நேரத்தில் என்னென்ன ஜூஸை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
அப்படி எடுத்துக் கொள்வதால் நம்முடைய உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை எரிக்க உதவும்.

காலை எட்டு மணி
இந்த டயட்டை தூங்கி எழுந்ததும் காலை எட்டு மணிக்குத் தொடங்க வேண்டும். எட்டு மணிக்கு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதில் கலந்து சிறிது உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.

பத்து மணி
எலுமிச்சை சாறு குடித்து முடித்து இரண்டு மணி நேரம் கழித்து, முன்பைப் போல ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை ஆரஞ்சு பழத்தின் சாறு அல்லது ஆப்பிள் சாறு பிழிந்து உப்பு சேர்த்தோ அல்லது அப்படியேவோ குடிக்கலாம்.

மதியம் 12 மணி
ஆரஞ்சு ஜூஸ் குடித்து இரண்டு மணி நேரம் கழித்து, ஒரு கப் க்ரீன் டீயில் எலுமிச்சை சாறும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகுங்கள்.

மதியம் 1 மணி
க்ரீன் டீ குடித்து ஒரு மணி நேரம் கழித்து, மதியம் ஒரு மணி அளவில், முக்கால் கிளாஸ் குளிர்ந்த நீரில் கால் டம்ளர் அளவுக்கு கேரட் ஜூஸைக் கலந்துக் குடியுங்கள்.

மதியம் 3 மணி
கேரட் ஜூஸ் குடித்து இரண்டு மணி நேரம் கழித்து, உங்களுக்கு விருப்பமான (புதினா டீ, இஞ்சி டீ, மசாலா டீ, மூலிகை) என பால் சேர்க்காத உங்களுக்கு விருப்பமான டீயில் ஒன்றை மூன்று மணி அளவில் குடியுங்கள்.

மாலை 5 மணி
உங்களுக்கு விருப்பமான டீயைக் குடித்து இரண்டு மணி நேரம் கழித்து, மாலை 5 மணியளவில் உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு பழத்தின் ஜூஸைப் பருகலாம். (மாதுளை, ஆரஞ்சு, பேரிக்காய், திராட்சை, ஆப்பிள்) என எந்த பழமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

மாலை ஏழு மணி
அப்பாடா! ஒருவழியா மிண ஏழாகிடுச்சு. சிக்கன், சோறு, சப்பாத்தி என ஏதாவது பித்ததை வயிறுமுட்ட ஒரு ஃபுல் கட்டு கட்டலாம் என்று தானே நினைக்கிறீர்கள். அதெல்லாம் இந்த டயட்ல முடியாதுங்க. ஏழு மணிக்கும் இன்னைக்கு ஒரு நாள் க்ரீன் மட்டும் தான் குடிக்கணும்.

இரவு 9 மணி
9 மணி ஆச்சு. இப்பவாச்சும் ஏதாவது சாப்பிடலாமா? என்று உங்க வயிறும் சத்தமா கேட்கறது புரியுது. ஒன்பது மணி ஆனதுக்குப் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை கிரேப் ஃப்ரூட் சாறெடுத்து கலந்து குடிக்க வேண்டும்.

இரவு 10 மணி
இரவு பத்து மணியோடு டயட்டை முடித்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. ஒரு டம்ளர் தண்ணீரோடு இந்த நாள் டயட்டை முடித்துக் கொள்ளுங்கள். நன்கு பெரிய கிளாஸில் தண்ணீரைக் குடித்து விட்டு, படுத்து நன்கு தூங்குங்கள்.

அளந்து பாருங்கள்
படுத்து இரவு முழுக்க தூங்கிவிட்டு, காலையில் தூங்கி எழுந்ததும், ஒரு டேப்பை எடுத்து அளந்து பாருங்கள். கண்ணாடி முன்னால் நின்று பாருங்கள். உங்களிடம் இருந்த உங்கள் தொப்பை உங்களுடைய கண்முன்னே காணாமல் போயிருக்கும்.



Click it and Unblock the Notifications