Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
டயட் இருக்கிறீங்களா? அதுக்கு முன்னாடி இருபாலரும் தெரிஞ்சுக்க வேண்டியது என்ன?
பொதுவாக டயட் இருக்கும்போது ஆண், பெண் இருவருமே செய்யக் கூடிய தவறுகள் மற்றும் அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் இங்கே சொல்லப்பட்டுள்ளன.
ஆண் பெண் இருபாலர்களுக்கும் உடல் அமைப்பில் மாற்றம், மரபணு வேறுபாடுகள், இனப்பெருக்க செயல்பாடுகள் போன்றவற்றால் ஊட்டச்சத்துக்கள்களின் தேவை இருவருக்கும் மாறுபடுகின்றன. இதன் காரணமாக ஒரு ஆணுக்கு சராசரியாக தினமும் 2500 கலோரிகளும், பெண்ணிற்கு 2000 கலோரிகளும் தேவைப்படுவதாக தெரிய வருகிறது.
பொதுவாக ஆண் பெண் இருபாலரின் உடல் மற்றும் தசைகளின் அடர்த்தியை கொண்டே கலோரிகள் தீர்மானிக்கப்படுகிறது. பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களின் தசை 30 - 40 % அதிகமாகும். அதன் அடிப்படையில் தான் ஆண் பெண் இருவருக்கும் தேவையான கலோரிகள் தீர்மானிக்கப்படுகின்றன.

சரி இந்த ஊட்ட சத்துகள் எவ்வாறு பெறப்படுகின்றன? பொதுவாகவே கார்போ ஹைட்ரேட் மூலமாகவே அதிக கலோரிகள் நமக்கு கிடைக்கின்றன. அது நமது உணவில் 45% - 65% இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த கார்போ ஹைட்ரேட்கள் அரிசி சம்மந்தப்பட்ட உணவுகளில் அதிகம் நிறைந்திருக்கின்றன. அதைத் தவிர பாஸ்தா மற்றும் தானியங்களிலும் கலோரிகள் நிறைந்திருக்கின்றன.
இருந்தாலும் இவைகளை அளவுக்கு அதிகம் உட்கொள்வதால் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு மன சோர்வு வருவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பாஸ்டா மற்றும் தானியங்களை அதிகம் உண்பதால் ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதாலேயே இது போன்ற மன சோர்வு வருவதாக ஒரு டாக்டர் குறிப்பிட்டார்.
மேலும் ஆண் பெண் இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால், பெண்களுக்கு ஏற்படும் மாததவிடாய், பிள்ளைப்பேறு ஆகியவற்றால் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களின் எலும்பு தன்மை முதலியவற்றால் கால்சியம் அதிகமாகவே தேவைப்படுகிறது. ஆண்களுக்கு தினமும் 700 மிகி கால்சியம் போதுமானது. ஆனால் அதுவே பெண்களுக்கு 1200 மிகி தேவைப்படுகிறது.
இந்த கால்சியம் சத்தானது பால் பொருட்களில், குறிப்பாக பாலடை கட்டியில் அதிகம் நிறைந்திருக்கிறது. அதை உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் கால்சியம் தேவையை நிறைவு செய்து கொள்ளலாம்.
ஆண் பெண் இருவரும் தினமும் கோகோ நிறைந்த சாக்லேட் எடுத்துக்கொள்வது மூலம் ரத்த ஓட்டம் சீராக்கப்படுவதால் எதிர் காலத்தில் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயங்கள் குறைக்கப்படுகின்றன.
மேலும் ஜிங்க் ஆண்களுக்கு தினமும் 9.5 மில்லி கிராமும் பெண்களுக்கு 7 தில்லி கிராமும் தேவைப்படுகிறது. மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களில் ஜிங்க் அதிகம் உள்ளது. பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளிலும் ஜிங்க் நிறைந்துள்ளது.
மதுவைப் பொறுத்தவரை பொதுவாக இருபாலருமே குறைவாக எடுத்துக்கொள்வது இதயத்திற்கு நல்லது. அதே சமயம் மது பழக்கத்தால் பெண்களுக்கு மார்பு புற்று வரும் வாய்ப்பு இருப்பதால் அதை எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது அதைவிட மிக நல்லது. இறுதியாக முக்கியமான தாதுக்கள் வைட்டமின்கள் நிறைந்ததொரு சமநிலை உணவு இருபாலருக்குமே தேவை; அதைவிட முக்கியமானது நல்லதொரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறை. எனவே, அதை நாம் தவறாமல் கடைப்பிடிப்போம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

