Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
'சிக்'கென்று மாறிய சோனாக்ஷியின் 'வெயிட் லாஸ்' ரகசியங்கள்!!!
உடல் எடை அதிகரித்துவிட்டால், அதனை குறைக்க நாம் நிறைய அவஸ்தைப்பட்டிருப்போம். ஆனால் சினிமா பிரபலங்களுக்கு அது மிகவும் ஈஸி. அவர்களால் மட்டும் எப்படி தான் திடீரென்று குண்டாகவோ அல்லது ஒல்லியாகவோ முடிகிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவருக்குமே ஆவல் இருக்கும்.
அதில் இதுவரை குண்டாக அமுல் 'பேபி' போன்று இருந்து, தற்போது உடல் எடையை குறைத்து சிக்கென்று மாறிய சோனாக்ஷி சின்ஹாவின் உடல் எடை குறைப்பின் இரகசியத்தை தெரிந்து கொள்ள பலர் விரும்புவார்கள். ஏனெனில் இவர் ஆரம்பத்தில் மிகவும் குண்டாக இருந்தால், பின் இந்தி படமான தபாங் படத்திற்காக 30 கிலோ எடையை குறைத்து தன் அழகான உடல் வடிவமைப்பால் பல ரசிகர்களைக் கவர்ந்தார்.
காதைக் கிட்ட கொண்டு வாங்க... இதுதாங்க சூர்யாவின் ஃபிட்னஸ் ரகசியம்!
அதுமட்டுமின்றி, சமீபத்தில் கூட படம் ஒன்றிற்காக 10 கிலோ எடையை குறைத்துள்ளார். இப்படி எடையை குறைக்க இவர் என்ன தான் மேற்கொள்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படித்து பாருங்கள்.

உடற்பயிற்சி
சோனாக்ஷியின் அழகான உடல் வடிவமைப்பு மற்றும் எடை குறைப்பிற்கு முக்கிய காரணம், தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சியை செய்வது தான். அதிலும் அவர் வாரத்திற்கு 4-5 நாட்கள் வெயிட் லாஸ் ட்ரெயினிங்கை மேற்கொள்கிறார்.

டயட்: காலை உணவு
சோனாக்ஷி காலையில் செரில் மற்றும் பால் அல்லது கோதுமை பிரட் டோஸ்ட் தான் சாப்பிடுவார். சில நேரங்களில் சோளத்தை சாப்பிடுவார். இதில் புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால், அதனை சாப்பிட்டால் வயிறு நிறைந்துவிடும்.

காலை ஸ்நாக்ஸ்
காலை 11 மணியளவில் 1 கப் க்ரீன் டீ மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவார். பொதுவாக க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறைவதுடன், அழகும் அதிகரிக்கும்.

மதியம்
எடையை குறைக்க மதிய வேளையில் சோனாக்ஷி வீட்டில் சமைக்கும் ரொட்டி மற்றும் சப்ஜியை தான் சாப்பிடுவார். சில நேரங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களால் ஆன சாலட் கூட சாப்பிடுவார்.

மாலை
மாலை வேளையில் 1 கப் பழங்கள் அல்லது 1 கப் க்ரீன் டீ மட்டும் குடிப்பார்.

இரவு
இரவில் செரிமானம் சீராக நடைபெற, சோனாக்ஷி சின்ஹா படுக்கைக்கு செல்லும் 3-4 மணிநேரத்திற்கு முன்பே சாதம், தால், சப்ஜி மற்றும் சாலட்டுகளை சாப்பிடுவார்.

யோகா
உடல் எடையை குறைக்க யோகாவும் மிகவும் சிறந்த வழி என்பதால், சோனாக்ஷி வாரத்திற்கு மூன்று முறை தவறாமல் யோகாவை மேற்கொண்டு வருவார். இதனால் மனம் அமைதி அடைந்து, உடல் ஆரோக்கியமாகவும் பிட்டாகவும் இருக்கும்.

தண்ணீர்
தினமும் அதிக அளவில் தண்ணீர் குடித்து வருவார். இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் தண்ணீர் அடிக்கடி பசி எடுப்பதை தடுக்கும்.

க்ரீன் டீ
உடல் எடையை குறைக்க க்ரீன் டீ தான் அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அவை அவருக்கு எடையை குறைத்து, செரிமானத்தை அதிகரித்து, நல்ல பொலிவான சருமத்தைப் பெற உதவியாக உள்ளது.



Click it and Unblock the Notifications
