Latest Updates
-
மணமணக்கும்.. ஆட்டுக்குடல் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்படப் போறாங்களாம் -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெற்று ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹைதராபாத் சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டல் சுவையில் அட்டகாசமாக இருக்கும் -
வார ராசிபலன் (12 July 2026-18 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சட்டையில் ஏன் பாக்கெட் எப்போதும் இடதுபுறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? காரணம் தெரிஞ்ச ஷாக் ஆகிருவீங்க -
1 கப் பாஸ்மதி அரிசி இருந்தா இந்த காஷ்மீரி புலாவை செஞ்சு பாருங்க - பைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
இந்த 4 நபர்களுடன் சண்டையிடுவது உங்கள் நிம்மதியை காணாமல் போகச்செய்யுமாம் - சாணக்கிய ரகசியம் -
கீரை வாங்குனா அடுத்தமுறை இந்த ஆந்திரா கீரை வேப்புடுவை செய்யுங்க - கீரை பிடிக்காதவர்களும் ஆசையா சாப்பிடுவாங்க -
கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14-ல் வரப்போவதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
கருப்பை புற்றுநோய் இருக்கா? கவனமா பாத்துக்கங்க !!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின்னர் புற்று நோய்க்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது. தற்போது 30 வயதிலேயே பலர் பாதிப்புக்கு ஆளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் முதலே கருப்பை பகுதியில் புற்று நோய்க்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை ஆண்டு தோறும் சோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
புற்றுநோய் அறிகுறிகள்
கருப்பை புற்று நோய் இருக்கும் பட்சத்தில் சில அறிகுறிகள் தென்படலாம். உறவின் போதோ அல்லது அதற்குப் பின்னரோ ரத்தம் வெளிப்படுதல், வெள் ளைப் படுதல் அதிகம் இருக்கலாம். வெள்ளைப்படுதலுடன் சிறிது ரத்தம் கலந்து வரலாம். இரண்டு மாதவிடாய்க்கு இடையில் அடிக்கடி ரத்தம் வெளிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கருப்பைப் புற்று நோய்க்கான பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். கருப்பை புற்றுநோய் இருப்பின் அதிக ரத்தப்போக்கு, மாதவிலக்கு சமயத்தில் அதிக வலி, மாதவிலக்கு நின்ற பின் உடல் எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகளும் தென்படலாம்.
பரிசோதனை, சிகிச்சை
கருப்பையில் புற்றுநோய் ஏற்பட எச்.பி.வி. வைரசும் காரணம் என கண்டறிப்பட்டுள்ளது. வாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச் சூழல் மாசு, பரம்பரைக் காரணங்களால் கருப்பை, கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்படலாம். கேன்சர் உருவாக 80 சதவீதம் வரை எச்.பி.வி. வைரஸ் முக்கிய காரணமாகிறது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பூசியும் கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் திருமணம் முடிந்து 5 ஆண்டுகளில் இருந்து இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். குறிப்பிட்ட இடைவெளியில் பேப்ஸ்மியர் டெஸ்ட் மூலம் கருப்பை வாயில் புற்றுநோய்க்கான அறிகுறி தென்படுகிறதா என சோதிக்க வேண்டும்.
பயாப்சி மற்றும் பேப்ஸ்மியர் சோதனைகள் மூலம் புற்று நோய் கண்டறியப்படுகிறது. புற்று நோய் ஆரம்பிக்கும் சமயத்தில் கண்டறிந்தால் கருப்பையை அகற்றுவதன் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும். நோய் பரவிய பின்னர் தாமதமாக கண்டறியப்படும் போது ரேடியோ தெரபி மற்றும் ஹீமோ தெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும். வந்த பின் தவிப்பதைவிட வரும் முன்னர் கண்டறிந்து தடுப்பதே சிறந்தது.
புற்றுநோய் தடுப்பூசி
பெண் குழந்தைகள் சிறு வயதில் இருந்தே குறிப்பாக வயதிற்கு வந்த பின்னர் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதே போல் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் மாதவிலக்கு கோளாறுகளை மருத்துவரிடம் காண்பித்து உடனே சரி செய்து கொள்ள வேண்டும். திருமணத்துக்கு பின்னர் சுகாதாரத்தை கடை பிடிக்க வேண்டும். பால்வினை நோய்கள் தாக்காமல் காத்துக் கொள்ள வேண்டும். அதோடு புற்றுநோய் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். சத்தான உணவு மற்றும் டென்ஷன் இல்லாத வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
உடல் எடை கட்டுப்பாடு
உடல்எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை தவிர்த்து, உடற்பயிற்சி மூலம் எடையை பேண வேண்டும். 30 வயதுக்கு பின்னர் கண்டிப்பாக ஆண்டுக்கு ஒரு முறை பெண்கள் தங்களது உடல் நலம் சார்ந்த பரிசோதனை செய்வதை நடை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல் கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக அது சார்ந்த மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
யாருக்கு வரும் புற்றுநோய் ?
பரம்பரையில் யாருக்காவது கருப்பை புற்றுநோய் இருந்திருந்தால் வர வாய்ப்புள்ளது. ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் மூலம் வரலாம், சர்க்கரை அளவு அதிகரித்தல், உடல் எடை அதிகரிப்பு போன்ற காரணங்களாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் குறிப்பிட்ட உணவுமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சத்தான உணவு, காய்கறிகள்
புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்க சாதத்தின் அளவைக் குறைத்து காய்கறிகள் அளவை அதிகரித்து சாப்பிட வேண்டும். பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம். தினமும் பழங்கள் சாப்பிடுவது முக்கியம். ஆவியில் வேக வைத்த உணவுகள் சாப்பிடலாம். அதிகம் புரதம் உள்ள உணவுகளை கூடுமான வரை தவிர்க்கவும். காய்கறிகளில் முட்டைக் கோஸ், காலிபிளவர், முளை கட்டிய பயறு வகை இதில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளவும். இவற்றில் இருக்கும் இன்டோல் திரீ கார்பினால் கேன்சரை உருவாக்கும் கிருமிகளை அழிக்கிறது.
மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள பழங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. ஆப்பிள், எலுமிச்சை, தக்காளி, சாத்துக்குடி ஆகியவற்றில் எதிர்ப்பு சக்தி உள்ளது. சிவப்பு குடைமிளகாயில் உள்ள பைட்டோகெமிக்கலும் புற்றுநோய் வராமல் தடுக்கும். பாதாம், பிஸ்தா உள்ளிட்ட கொட்டை வகைகள் சேர்த்துக் கொள்ளலாம். அசைவ வகைகளில் மீன் மட்டும் ஆவியில் வேக வைத்து அல்லது குழம்பு செய்து சாப்பிடலாம். சத்தான, உடல் நலத்துக்கு ஏற்ற உணவுகளை
சாப்பிடுவதன் மூலம் புற்று நோய் வருவதைத் தடுக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்
கர்ப்பப்பை நோய் தீர்க்கும் மூலிகை
கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்க அசோகமரப் பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். அசோகமரப்பட்டை, மாதுளம் பழத்தை காய வைத்து பொடி செய்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளை, மூன்று சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை கோளாறுகள் குணமாகும்.
ஆலமரப் பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும். அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.
பத்து கிராம் இம்பூறல் வேர்ப்பட்டையுடன் ஒரு கிராம் பெருங்காயம் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மாதவிலக்கு கோளாறு சரியாகும். தினமும் காலையில் கரிசலாங்கண்ணி கீரைச்சாறு 30 மில்லி சாப்பிட ஆரம்ப நிலை புற்றுநோய் குணமாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications