Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
சர்க்கரை நோயாளிகள் எந்த பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்?
நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் நீரிழிவு நோயாளிகளுக்கு பயிறு வகைகள் ஆரோக்கியமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு அவருடைய இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து ஏறினாலோ அல்லது குறைந்தாலோ அது பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் தங்கள் வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நோயாளியின் உணவில் இயற்கையாகவே அதிக ஊட்டச்சத்துக்கள், குறைந்த கலோரிகள் இருக்க வேண்டும் மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் இருக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கும் போது நீரிழிவு நோயாளிகளுக்கு பயிறு வகைகள் ஆரோக்கியமானது என்கிறார்கள் மருத்துவர்கள். எந்த வகையான பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளலாம் வாங்க பார்ப்போம்.

பருப்பு வகைகள்
பருப்பு வகைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு இதய பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பருப்பு வகைகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரும் திறன் உள்ளது.

கருப்பு பீன்ஸ்
சர்க்கரை நோயாளிகள் ஒவ்வொரு நாளும் கருப்பு பீன்ஸ் சாப்பிட்டதில் அவர்களின் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஒரு கப் கருப்பு பீன்ஸில் 5 கிராம் அளவிற்கு நார்ச்சத்துகள் காணப்படுகின்றன. இது உடலில் உள்ள கொழுப்பை உறிஞ்சுவதற்கு உதவியாக உள்ளது. இதைத் தவிர கருப்பு பீன்ஸில் புரதம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைந்த கிளைசீமிக் குறியீட்டையும் பெற்றிருப்பது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது.

கடலை பருப்பு
கடலை பருப்பில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த ஒன்று. இதில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம் உள்ளது, இது உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்க நன்மை பயக்கிறது. உங்கள் உடம்பில் புதிய சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குகிறது. இதன் கிளைசீமிக் குறியீடு வெறும் 8 ஆக உள்ளது.

பாசிப்பருப்பு
பாசிப்பருப்பின் கிளைசீமிக் குறியீடு 38 ஆகும். மக்னீசியம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்த பாசிப்பருப்பு, இதய நோயாளிகளுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் சிறந்தது. இதில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் நாள்பட்ட நோய்களை களைகிறது.

கிட்னி பீன்ஸ்
இதன் கிளைசீமிக் குறியீடு வெறும் 19 ஆகும். எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். கிட்னி பீன்ஸ் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும், பெருங்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது. மாலிப்டினம், ஃபோலேட், இரும்பு, தாமிரம், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாக உள்ளது.

கொண்டைக்கடலை
அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகளுக்கு சுண்டல் ஒரு சிறந்த நார்ச்சத்து உணவாகும். ஒரு கப் கொண்டைக்கடலை 164 கிராமில் 12.5 கிராம் நார்ச்சத்துகளை வழங்குகிறது. இது வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து நிறைந்த மூலமாகும். மேலும் பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். கொண்டைக்கடலையின் கிளைசீமிக் குறியீடு 28 ஆக உள்ளது .
மேற்கண்ட பருப்பு வகைகள் நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.



Click it and Unblock the Notifications