For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயாளிகளே! உங்களுக்கு பிபி மற்றும் இதய நோய் பிரச்சனை வராமல் தடுக்க என்ன செய்யணும் தெரியுமா?

நீங்கள் உண்ணும் உணவு உங்கள் குளுக்கோஸ் அளவை பாதிக்கும் என்பதால், நீரிழிவு நோயாளியாக நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய முதல் விஷயம் உணவுமுறையாகும்.

|

நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு பல்வேறு உடல்நல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. உங்கள் உணவு பழக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உடல் பருமனால் உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இன்னும் பிற காரணங்களாலும் சர்க்கரை நோய் வரலாம். ஆனால், சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும், உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்கள் உணவில் மாற்றங்களை செய்ய வேண்டும். சர்க்கரை தொடர்பான எதையும் உங்கள் உணவில் இருந்து நீக்கிவிடுங்கள்.

Diabetes can increase high blood pressure, heart disease risk in tamil

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இதயம், சிறுநீரகம் மற்றும் சுழற்சி பிரச்சினைகள் போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகள் இறுதியில் ஏற்படும் என ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த ஆபத்துக்களை குறைக்கவும் நீரிழிவு நோயை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை பற்றி அறியவும் இக்கட்டுரையை படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல்நல பிரச்சனைகள்

உடல்நல பிரச்சனைகள்

உங்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் அல்லது பிற உடல்நல பிரச்சனைகள் இருந்தால், அதிர்ச்சியடைய வேண்டாம். உயர் இரத்த சர்க்கரை நோய் உங்களுக்கு கண் நோய் மற்றும் சிறுநீரக நோய் உட்பட பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் அல்லது அவற்றின் நிலமையை மோசமாக்கலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் இறுதியில், உயர் இரத்த அழுத்தம், இதயம், சிறுநீரகம் மற்றும் சுழற்சி பிரச்சனைகளுடன் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மாரடைப்பை ஏற்படுத்தும்

மாரடைப்பை ஏற்படுத்தும்

நீரிழிவு நோய் தமனிகளை சேதப்படுத்துகிறது மற்றும் அவற்றை கடினப்படுத்துதலுக்கான இலக்காக மாற்றுகிறது, இது பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. அதுவே உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். இது சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இரத்த நாள சேதம், சிறுநீரக செயலிழப்பு அல்லது மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொழுப்பு போன்ற பிற நிலைமைகளை நிர்வகிக்க நீரிழிவு மாத்திரைகள் அல்லது மருந்துகளுடன் இன்சுலின் ஊசிகள் தேவைப்பட்டாலும், நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் நிர்வகிக்கலாம்.

ஆரோக்கியமான உணவு தேர்வுகள்

ஆரோக்கியமான உணவு தேர்வுகள்

நீங்கள் உண்ணும் உணவு உங்கள் குளுக்கோஸ் அளவை பாதிக்கும் என்பதால், நீரிழிவு நோயாளியாக நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய முதல் விஷயம் உணவுமுறையாகும். எனவே உங்களுக்கு எது சிறந்தது, எவ்வளவு சாப்பிடலாம், எப்போது சாப்பிடலாம் என்பதைக் கற்றுக்கொள்வது முக்கியம். பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவுகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால், மற்றும் மீன் மற்றும் ஒல்லியான இறைச்சி ஆகியவை நல்ல விருப்பங்களில் சில. நீங்கள் சிவப்பு இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் கடல் உணவுகளை அதிகம் சாப்பிட்டால், அவை யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கலாம்.

சுறுசுறுப்பாக இருங்கள்

சுறுசுறுப்பாக இருங்கள்

உட்கார்ந்த வாழ்க்கை முறை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆனால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், நீங்கள் நிச்சயமாக உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நடைபயிற்சி மற்றும் பிற தினசரி உடற்பயிற்சிகள் குளுக்கோஸ் அளவை மேம்படுத்த உதவும் மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்

மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்

நிறைய பேர் தங்களுக்கு வலி இல்லாவிட்டால் அல்லது நன்றாக உணர்ந்தால், மருந்தைத் தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை. நீங்கள் நன்றாக உணர்ந்தாலும் உங்கள் மருந்துகளை பரிந்துரைக்கப்பட்டபடி எடுத்துக்கொள்ள வேண்டும். எப்போதும், மருத்துவரின் ஆலோசனை பேரிலே நீங்கள் செயல்பட வேண்டும்.

உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால்

உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால்

உங்கள் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க, அது எவ்வளவு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனவே இரத்த அழுத்தத்தை அடிக்கடி பரிசோதிப்பது முக்கியம். அதேபோல, வருடத்திற்கு ஒரு முறையாவது, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரத்தப் பரிசோதனை செய்து கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைச் சரிபார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது அதிகளவு இதயப் பிரச்சனைகளுக்கான ஆபத்தை அதிகரிக்கலாம்.

புகைபிடிப்பதை நிறுத்துங்கள்

புகைபிடிப்பதை நிறுத்துங்கள்

புகைபிடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு முற்றிலும் தீங்கு விளைவிக்கும். ஆதலால், இந்த பழக்கத்திலிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும். புகைபிடித்தல் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மேலும், இது உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

காய்ச்சல் தடுப்பூசிகளைப் பெறுங்கள்

காய்ச்சல் தடுப்பூசிகளைப் பெறுங்கள்

வயதானவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசி உதவும். மேலும் நீங்கள் 65 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், நிமோனியா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.

சருமம் மற்றும் பற்கள்

சருமம் மற்றும் பற்கள்

உங்கள் பல் மற்றும் ஈறு ஆரோக்கியத்தை நன்றாக கவனித்து கொள்ளுங்கள். பல் துலக்குதல், ஃப்ளோஸ் ஆகியவை உங்கள் தினசரி பழக்கத்தின் முக்கியமானவை. உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை வருடத்திற்கு இரண்டு முறை பல் மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும். ஏனெனில், இது கடுமையான பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். மேலும், உங்கள் சருமத்தை சுத்தமாக வைத்திருங்கள். சருமத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்க சிறிய வெட்டுக்கள் மற்றும் காயங்களை கவனித்துக் கொள்ளுங்கள்.

நிறைய தண்ணீர் குடிக்கவும்

நிறைய தண்ணீர் குடிக்கவும்

நீரேற்றமாக இருப்பது உங்க சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்க சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். எனவே ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க முயற்சிக்கவும். நீரேற்றமாக இருப்பது உங்களை பல்வேறு சுகாதார பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diabetes can increase high blood pressure, heart disease risk in tamil

Here we are talking about the Diabetes can increase high blood pressure, heart disease risk in tamil.
Story first published: Wednesday, December 7, 2022, 12:23 [IST]
Desktop Bottom Promotion