சர்க்கரை நோயாளிகள் உலர் திராட்சையை சாப்பிடலாமா? கூடாதா?

பொதுவாக சர்க்கரை நோய் இருந்தால் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தி நிலைமையை மோசமாக்கிவிடும். சரி, உலர் திராட்சையை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா?

உலர் பழங்கள் அனைவருக்குமே பிடிக்கும். அந்த உலர் பழங்களில் உலர் திராட்சை மிகவும் சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானது மற்றும் விலை குறைவில் கிடைப்பதும் கூட. இந்த உலர் திராட்சையை சமையலில் கூட சேர்ப்பதுண்டு. மேலும் உலர் திராட்சை ஒரு சிறந்த ஸ்நாக்ஸாகவும் விளங்குகிறது. ஆனால் சத்துக்களை உள்ளடக்கிய உலர் திராட்சையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்ற கேள்வி பலருக்கும் மனதில் எழுவதுண்டு. ஏனெனில் உலர் திராட்சையானது மிகவும் இனிப்பாக இருப்பதால், எங்கு அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தி விடுமோ என்ற ஓர் அச்சம் தான்.

Can Diabetic Patients Consume Raisins?

பொதுவாக சர்க்கரை நோய் இருந்தால் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தி நிலைமையை மோசமாக்கிவிடும். எனவே தான் இனிப்பாக இருக்கும் உலர் திராட்சையை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் உலர் திராட்சையில் உடல் ஆரோக்கியத்தை தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன. இப்போது இக்கட்டுரையில் சர்க்கரை நோயாளிகள் உலர் திராட்சையை சாப்பிடலாமா, கூடாதா என்பது குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலர் திராட்சையை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிலாமா?

உலர் திராட்சையை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிலாமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உலர் திராட்சையை மிதமான அளவில் தங்களின் உணவில் சேர்த்து சாப்பிடலாம். உலர் திராட்சையில் இயற்கை சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. எனவே இவற்றை அன்றாட உணவில் சிறிது சேர்த்துக் கொள்வது நல்லது. இவற்றில் இயற்கை சர்க்கரை இருப்பதைத் தவிர, வளமான அளவில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே சர்க்கரை நோய் இருந்தால், உலர் திராட்சையை சாப்பிடுவது பாதுகாப்பானது தான். இருப்பினும் அளவாக சாப்பிட வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்போது உலர் திராட்சையை தினமும் சிறிது சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்

ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்

உலர் திராட்சையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளன. குறிப்பாக இவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல மிகவும் இன்றியமையாத சத்தாகும். மேலும் உலர் திராட்சையில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் போரான் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

செரிமானத்திற்கு நல்லது

செரிமானத்திற்கு நல்லது

உலர் திராட்சையில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை சீரான குடலியக்கத்திற்கு உதவுகிறது மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. முக்கியமாக இந்த கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் கார்போஹைட்ரேட்டுகள் ஜீரணிப்பதை மெதுவாக்கி, இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.

எடை இழப்பிற்கு உதவும்

எடை இழப்பிற்கு உதவும்

உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது எடை இழப்பிற்கு உதவுகிறது ஆய்வுகளில் கூட நார்ச்சத்து அதிகம் எடுப்பவர்களின் உடல் எடை குறைவதாக தெரிய வந்துள்ளது. எனவே உணவில் அதிக நார்ச்சத்து சேர்க்க சிறந்த வழி உலர் திராட்சையை தினமும் சிறிது உண்பதாகும்.

இதய ஆரோக்கியம் மேம்படும்

இதய ஆரோக்கியம் மேம்படும்

உலர் திராட்சையின் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பிற தாவர வகை கலவைகள் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. சில ஆய்வுகளும் உலர் திராட்சையை உண்பது இரத்த அழுத்தத்தை சீராக்கவும், இதய நோயின் அபாயத்தை குறைக்கவும் உதவுவதாக கூறுகின்றன. எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறிது உலர் திராட்சையை தினமும் சாப்பிடுங்கள்.

எலும்புகளுக்கு நல்லது

எலும்புகளுக்கு நல்லது

உலர் திராட்சையில் போரான் என்னும் கனிமச்சத்து வளமான அளவில் உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான சத்தாகும். போரான் எலும்புகளை வலுப்படுத்த உதவுவதோடு, ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

எனவே, சர்க்கரை நோயாளிகள் தங்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உலர் திராட்சையை தினசரி உணவில் சேத்துக் கொள்ளலாம். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, January 5, 2023, 11:50 [IST]
Desktop Bottom Promotion