Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
பப்பாளியை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா..?
உடலுக்கு எந்த வியாதி வந்தாலும் நம்மால் சிறிது பொருத்து கொள்ள முடியும். ஆனால் இந்த சர்க்கரை நோய் வந்துவிட்டால் அவ்வளவுதான்...! இதை சாப்பிட கூடாது... அதை சாப்பிட கூடாது... இது சாப்பிட்டால் சர்க்கரையின்
உடலுக்கு எந்த வியாதி வந்தாலும் நம்மால் சிறிது பொருத்து கொள்ள முடியும். ஆனால் இந்த சர்க்கரை நோய் வந்துவிட்டால் அவ்வளவுதான்...! இதை சாப்பிட கூடாது... அதை சாப்பிட கூடாது... இது சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகமாகிடும்... எதார்த்தமாக எதையாவது பார்த்தால்கூட புது புது புரளிகளையெல்லாம் மக்கள் கிளப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

முதலில் புரளிகளை நம்பாமல் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எது வேண்டியவை, எது வேண்டாதவை என மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன்படி செய்தாலே நன்மை கிடைக்கும். சரி... இந்த பப்பாளியை பற்றி ஏதோ சொல்ல வந்திங்களே அது என்னனு கேக்குறீங்களா..? இதோ இதை படித்து தெரிஞ்சிகொள்ளுங்கள்.

#மக்கள் பயப்பட காரணம்
"சர்க்கரை" என்ற பெயரை கேட்டாலே பத்தடி தள்ளி நிற்பார்கள் சர்க்கரை நோயாளிகள். அதிலும் பழங்கள் சாப்பிட இனிப்பாக இருக்கின்றது என்ற காரணத்தாலே பலர் இதனை சாப்பிடாமலே தவிர்த்து வருகின்றனர். இது ஒரு தவறான எண்ணமே. இனிபாக இருக்கும் எல்லா பழங்களும் அதிக சர்க்கரை அளவு கொண்டதல்ல. ஆதலால், குறைந்த சர்க்கரை அளவுள்ள பழங்களை மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடுவது சிறந்தது.

# பப்பாளியின் பயன்கள்
பொதுவாக பப்பாளியில் எண்ணற்ற வைட்டமின்கள் உள்ளது. இது உடலின் செயல்பாட்டை சமநிலையில் வைக்க உதவுகிறது. இதில் அதிகப்படியாக உள்ள வைட்டமின் எ,பி,சி மற்றும் ஈ ஆகியவை உடலுக்கு அதிக வலுவை தர கூடியவை. அதிக நார்ச்சத்துக்கள் இதில் உள்ளதால் செரிமானம் சீராக நடக்கிறது. மலசிக்கல் போன்ற பிரச்சனைகளையும் பப்பாளி குணப்படுத்தும். ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ள இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் உடலின் மெட்டபாலிசம் சரியான முறையில் நடைபெறும்.

#பப்பாளி சர்க்கரையின் அளவை உயர்த்தாது..!
பப்பாளியில் மிக குறைந்த அளவே சர்க்கரை உள்ளதால் இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையே தரும். சர்க்கரை நோயாளிகள் 1 கப் அளவிற்குள் பப்பாளியை சாப்பிடுவதே உகந்தது. மேலும் இது உடலின் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும் துணை புரிகிறது. சிறிதளவு தயிருடன் இதனை கலந்து சாப்பிட்டால் hyperglycemia போன்ற நோய்களை குணப்படுத்தும். எனவே சிறிதளவு பப்பாளி சாப்பிடுவது உங்கள் சர்க்கரை அளவை உயர்த்தாது.

#எதிர்ப்பு சக்தி
பப்பாளியில் உள்ள வைட்டமின் சி, ஒரு மிக சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட். இது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அதிகம் பயன்படுகிறது. உடல் தசைகள் வலு பெறவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் பப்பாளி உதவுகிறது. மேலும் இளமையிலே வயதாவதை தடுக்க, பார்வை சார்ந்த நோய்களை சரி செய்ய ஆற்றல் புரிகிறது..

#பசியை போக்கும்
சர்க்கரை நோயாளிகளுக்கு இயல்பாகவே அதிக பசி எடுக்கும். அந்த நேரத்தில் தேவையற்ற கொழுப்புகள் நிறைந்த தின்பண்டங்களை சாப்பிட்டால் அது நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும். அந்த சமயங்களில் பப்பாளியை நொறுக்குத்தீனி போல சாப்பிட்டால் உங்கள் உடல் ஆரோக்கியம் கெடாமல் சர்க்கரையின் அளவும் உயராமல் இருக்கும். உங்களுக்கு வெறும் பப்பாளியை சாப்பிட பிடிக்கவில்லை என்றால் அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டு சாப்பிட்டால் மேலும் சுவையை தரும்.

#உடல் எடை
உடல் சார்ந்த பிரச்சனைகளில் மிக முக்கிய ஒன்று உடல் எடை கூடுதல். அதிலும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது கடினமான விஷியமாகவே இருக்கும். பப்பாளியை சாப்பிட்டால் அதில் உள்ள மிக குறைந்த கலோரிகள் உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளும். மேலும் வயிற்று பகுதியில் ஏதேனும் வீக்கம் இருந்தால் அதனையும் எளிமையாக சரி செய்துவிடும்.

#இதயத்திற்கு நல்லது
நீங்கள் சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் உங்களுக்கு கூடுதல் பரிசாக இதய நோயும் வருவது இயல்பே. இருப்பினும் இதை சரி செய்ய பலவித மருந்துகளையும் நாம் உபயோகித்து இருப்போம். இதில் பலன் கிடைக்காமலேயே இருக்க கூடும். இவர்களுக்கென்றே இருக்கிறது நம்ம பப்பாளி. flavonoids, வைட்டமின் சி போன்றவை அதிகம் இவற்றில் இருப்பதால் இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். மேலும், triglycerides-சை குறைத்து இதய நோய்கள் வராமல் காக்கும்.



Click it and Unblock the Notifications