Latest Updates
-
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
சர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் முருங்கை டீ... ட்ரை பண்ணிப் பாருங்க...
முருங்கை இலையினால் உண்டாகும் நன்மைகள் மற்றும் அது ரத்த சர்க்கரையை எப்படிக் குறைக்கிறது என்பதைப் பார்ப்போம்.
முருங்கைக் காயைத் தவிர்த்து முருங்கை இலை, பூ என எதைப் பார்த்தாலும் அதனுடைய லேசான கசப்புத் தன்மையால் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுகிறோம். ஆனால் அதில் நிறைந்திருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் வேறு எந்த உணவிலுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக, முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் எந்தவித நோயுமே அண்டாமல் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வாழ முடியும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

முருங்கை மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்று. இதை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. முருங்கை இலைகளைப் பார்த்தாலே அலறி ஓடுகின்றவர்கள் கூட, சமீப காலங்களில் உணவில் மிக அதிகமாக முருங்கைக் கீரை மற்றும் காய்களைச் சேர்த்து வருகின்றனர். இதற்குக் காரணம் இப்போது தான் நாம் முருங்கையின் அருமைகளைப் பற்றி, புரிந்து கொண்டிருக்கிறோம்.

நன்மைகள்
முருங்கையில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. முருங்கையில் மிக அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட் நிறைந்திருக்கின்றன. இது நம் உடலில் உண்டாகின்ற ஏராளமான நோய்களைத் தீர்க்கும் சக்தி கொண்டது. குறிப்பாக, உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், ஜீரணக் கோளாறு ஆகியவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் முருங்கை இலைக்கு உண்டு. கால்சியம், பொட்டாசியம் ஆகியவையும் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை நிறைந்திருக்கின்றன.

மரத்தின் பாகங்கள்
முருங்கை மரத்தில் உள்ள காய்கள், இலை, பூ மட்டும் தான் நமக்குப் பயன்படுகிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் முருங்கை மரத்தினுடைய பட்டைகள், வேர்கள், விதை, முருங்கை பிசின் ஆகிய எல்லாமே மருந்தாகப் பயன்படுகின்றன. நாட்டு மருத்துவத்தில் இவை எல்லாமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ரத்த சர்க்கரை
முருங்கை உடலுக்குள் இருக்கின்ற கொழுப்புகள் மற்றும் குளுக்குாஸின் அளவினைக் குறைக்கின்றது. இது உடலுக்குள் இருக்கின்ற ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
இது உடலுக்குள் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைத்து சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளில் இருந்து முருங்கை முற்றிலும் உங்களைக் காப்பாற்றும். ஆரம்ப காலத்திலேயே சர்க்கரை நோயை உங்களை அடியோடு காப்பாற்றும்.

புண்களை ஆற்றும்
முருங்கை இலையினுடைய இலைகள், விதைகள் மற்றும் வேர்ப்பகுதிகளுக்கு நம்முடைய உடலில் காயங்களை ஆற்றுவதற்கான தன்மைகள் அதிகமாக உள்ளது. இது காயங்களில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறாமல் தடுக்கிறது.

செல்கள் பாதிப்பு
முருங்கை இலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்டுகள் உங்கள் செல்களில் சேதம் உண்டாகாமல் தடுக்கிறது. மன அழுத்தம், வீக்கங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. உடலுக்குள் இருக்கும் உயிர் அணுக்கள் சேதமாவதைத் தடுக்கவும் இது உங்களுக்கு உதவுகிறது.

அழற்சி
முருங்கை இலையின் பொடியில் பல்வேறு வகையான அழற்சி எதிர்ப்புப் பொருள்கள் இருக்கின்றன. குறிப்பாக, நீரிழிவு, கார்டிவாஸ்குலர் சம்பந்தமான இதய நோய்கள்ஈ ஆர்த்தரிட்டிஸ், எடை அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் அழற்சி எதிர்ப்பு பொருள்கள் நிறைந்திருக்கின்றன.

மூளை வளம்
முருங்கை இலையினுடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக்ப பெரிய அளவில் உதவுகின்றது. இது அல்சைமர் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள வைட்டமின் இ மற்றும் வைட்டமின் சி ஆகியவை மன வளம், நியாபக சக்தி ஆகியவற்றைப் பாதுகாக்க உதவுகிறது.

கல்லீரல்
முருங்கை இலையினுடைய பொடியானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. இது மிக முக்கியமாக ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றது.

கார்டிவாஸ்குலர்
முருங்கை இலையினுடைய பொடியானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. இது மிக முக்கியமாக ரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க உதவுகின்றது.

பாக்டீரியா எதிர்ப்பு
முருங்கை இலையில் உள்ள பாக்டீரீயா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியானது, உங்களுடைய சருமத்தில் உண்டாகின்ற தொற்றுக்கள், பாக்டீரியாவினால் உண்டாகும் பிரச்சினைகள் போன்றவற்றில் இருந்து உங்களைக் காப்பாற்ற உதவுகிறது. இது சிறுநீர்ப் பாதையில் ஏற்படுகின்ற தொற்றுக்களைப் போக்கவும் உதவுகிறது.

முருங்கை டீ
முருங்கை இலையினுடைய இலையை உலர்த்தி, பொடி செய்து அதை கிரீன் டீ போல, டீ போட்டுக் குடித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த பவுடரை ஒரு நாளைக்கு அரை அல்லது ஒரு ஸ்பூன் அளவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications