Latest Updates
-
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
சுகர் வந்தா புடிச்சத சாப்பிட முடியாதுன்னு யார் சொன்னா?... இதோ உங்களுக்காகவே 10 ஸ்பெஷல் ரெசிபி
சுகர் வந்துட்டாலே போதும் நமக்கு பிடிச்ச விருப்பமான உணவுகளை ஸ்வீட்களை சாப்பிட முடியாமல் போய் விடும். சாக்லேட், கேக், டிசர்ட் இப்படி எல்லாத்துக்கும் நோ நோ என்பது தான் நம்முடைய பதிலாகவே இருக்கும்.
சுகர் வந்துட்டாலே போதும் நமக்கு பிடிச்ச விருப்பமான உணவுகளை ஸ்வீட்களை சாப்பிட முடியாமல் போய் விடும். சாக்லேட், கேக், டிசர்ட் இப்படி எல்லாத்துக்கும் நோ நோ என்பது தான் நம்முடைய பதிலாகவே இருக்கும். இப்படி நமக்கு விருப்பமானவற்றில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஒரு சமயத்தில் நமக்கு சலிப்பை ஏற்படுத்தி விடும்.

சில பேர்கள் விரக்தி அடைந்து விடுகிறார்கள் என்று டாக்டர் ஏ.கே. ஜிங்ஹன், ப்ரிமுஸ் மருத்துவ மனையிலிருந்து நீரிழிவு நிபுணர் மற்றும் டில்லி நீரிழிவு ஆய்வு மையத்தின் தலைவருமான அவர் கூறுகிறார்.

விரக்தி தேவையில்லை
அவர் என்ன சொல்லுகிறார் என்றால் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது உண்மை, ஆனால் அதற்காக விரக்தி அடைய வேண்டிய அவசியமில்லை. உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க கொஞ்சமாக மற்றும் அடிக்கடி உணவு சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றவும்.

ஆரோக்கியமான உணவுகள்
உங்களுக்கு சாக்லெட் சாப்பிடும் எண்ணம் ஏற்பட்டால் ஹாட் சாக்லெட், பட்டை கலந்த சாக்லெட் போன்றவற்றை கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளலாம். பழங்கள் சாப்பிட விருப்பம் என்றால் இயற்கையிலேயே சர்க்கரை சத்து குறைவான பழங்களை எடுத்துக் கொள்ளலாம். பெர்ரி, முலாம் பழம், ஆப்பிள் போன்ற பழங்கள் சிறந்தது. சில நேரம் உங்களுக்கு நொறுக்கு தீனிகள் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் பாதாம் பருப்பு, நட்ஸ், இனிப்பு இல்லாத உலர்ந்த திராட்சை பழங்கள் போன்றவற்றை கூட சேர்த்துக் கொள்ளலாம்.

ரத்த சர்க்கரை
பாதாம் பருப்பு போன்றவை உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். திராட்சை, காட்டேஜ் சீஸ் போன்ற புரோட்டீன் நிறைந்த உணவுகளும் இரத்த சர்க்கரையை சமநிலையாக்கி பசியை போக்கும். காய்கறிகள் என்று எடுத்துக் கொண்டால் கேரட், செலரி, பிரக்கோலி போன்றவற்றை தயிரில் தொட்டு சாப்பிடலாம். ஹம்மஸ் போன்ற உணவுகள் உங்களுக்கு நார்ச்சத்து மற்றும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களையும் அள்ளி வழங்குகிறது.

பரிந்துரை உணவுகள்
நீரிழிவு நோயாளிகளுக்கு ஃபோர்டிஸ்-எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையின் முக்கிய மருத்துவ ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் ரூபலி தத்தா சர்க்கரை நோயாளிகளுக்கான சில ரெசிபிகளை பரிந்துரை செய்கிறார். இந்த உணவுகள் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ள உணவுகள் என்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்றும் அவர் கூறியுள்ளார்.
சரி வாங்க டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கான உணவு ரெசிபிகளை இப்பொழுது பார்க்கலாம்.

குறைந்த கொழுப்புள்ள பட்டர் சிக்கன்
இந்த ரெசிபி மிகவும் எளிதான மற்றும் வேகமாக செய்யக் கூடிய ஒன்று. இதன் பட்டர் சுவை கண்டிப்பாக உங்களுக்கு விருப்பமான ஒன்றாக இருக்கும். இனி இந்த மாதிரியான ஸ்டைலில் நீங்கள் சிக்கன் எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் சர்க்கரை அளவை அதிகளவில் பாதிக்காது.

சுகர் ப்ரீ ரைஸ் புட்டிங்
லெமன் கிராஸ் தண்டு, ஒரு பட்டை, பொடியாக்கிய சாதிக்காய் சேர்த்து இந்த புட்டிங் ரெசிபியை நீங்கள் செய்யலாம். இதை அப்படியே அன்னாசி பழம் மற்றும் இஞ்சி ப்ளோவர்டுடன் பரிமாறும் போது ரெம்ப டேஸ்டியாகவும் சுவையாகவும் இருக்கும். சுகர் ப்ரீ உணவு என்பதால் உங்கள் சர்க்கரை சத்தும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

குறைந்த கொழுப்புள்ள செலரி சூப்
சில சமயங்களில் எதாவது நொறுக்கு தீணி சாப்பிட வேண்டும் போல் பசிக்கும். அந்த சமயத்தில் இந்த சூப் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். 1 பெரிய செலரி தண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் வெறும் 10 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதனுடன் கலோரி குறைந்த காய்கறிகள் போன்றவற்றை சேர்த்து சூப் தயாரித்து பருகலாம்.

குறைந்த கொழுப்பு பெப்பர் சிக்கன் ப்ரை
மிளகு மற்றும் மஞ்சளும் சேர்த்து சும்மா காரசாரமான ஆந்திரா ஸ்டைலில் சிக்கனை சமைத்து சாப்பிடலாம். ஆனால் அது குறைந்த கலோரியில் கொழுப்பு சத்து குறைவாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

கீர் ரெசிபி
அரிசி, பால், பாதாம் பருப்பு, ஏலக்காய் மற்றும் பிஸ்தா எல்லாம் சேர்த்து கீர் தயாரிக்கலாம். இதனுடன் ரோஸ் எஸன்ஸ் சேர்த்து கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும். அதிக சுகர் இல்லாமல் சாப்பிடுங்கள்.

குறைந்த கொழுப்புள்ள பிரெஞ்ச் வெங்காய சூப்
குறைந்த கொழுப்புள்ள உடலுக்கு ஆரோக்கியமான ப்ரெஞ்ச் ஆனியன் சூப் தயாரித்து பருகலாம்.

குறைந்த கொழுப்புள்ள உடலுக்கு ஆரோக்கியமான ப்ரெஞ்ச் ஆனியன் சூப் தயாரித்து பருகலாம்.
தேங்காய், புளி, லேசான காரம், ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலை மற்றும்மீன் சேர்த்து செய்யும் இந்த கறி உங்களுக்கு நல்ல சுவையை தரும். ஆனால் எண்ணெய் சேர்க்க வேண்டாம்.

குறைந்த கொழுப்புள்ள சிக்கன் ஷ்ஸவர்மா
ப்ரைடு சிக்கன், தக்காளி, வெங்காயம் மற்றும் மிளகாய் எல்லாம் சேர்த்து ஷ்ஸவர்மா தயாரித்து சாப்பிடலாம். யோகார்ட் சாஸ் தொட்டுக்க நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

சுகர் ப்ரீ கிரானுலா
பாதாம் பருப்பு, பழங்கள், யோகார்ட் சேர்த்து சுகர் சேர்க்காமல் தேன் சேர்த்து க்ரானுலா தயாரித்து சாப்பிடுங்கள். சுவையான தும் ஆரோக்கியமானதும் கூட.

குறைந்த கொழுப்புள்ள தகி சிக்கன்
யோகார்ட், கரம் மசாலா, பச்சை மிளகாய், சிக்கன் சேர்த்து கறி செய்து சாப்பிடலாம். இந்த இந்திய ஸ்டைல் சிக்கன் கறி டயாபெட்டிக் ப்ரண்ட்லியான உணவாகும்.



Click it and Unblock the Notifications











