Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஏன் பட்டை நீர் உட்கொள்ள வேண்டும் என உங்களுக்கு தெரியுமா?
தேவையான அளவு இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத (அ) உற்பத்தி செய்த இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இது ஏற்படுகிறது.
நமது வாழ்க்கை முறை மாற்றம்,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன மற்றும் உடல் ரீதியான உடற்பயிற்சியின்மை,அதிக மன அழுத்தம் ஆகிய காரணங்களால் இந்த நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
தேவையான அளவு இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத (அ) உற்பத்தி செய்த இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இது ஏற்படுகிறது.

நீரிழிவு அறிகுறிகள்:
அதிகமான தாகம் மற்றும் பசி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மங்கலான பார்வை, எடை இழப்பு, அளவுக்கதிகமான களைப்பு, நோய் தொற்றுகள், கை மற்றும் கால்களில் உணர்வுகள் குறைதல்.
நீரிழிவு நோய் சிகிச்சையில் உணவுக் கட்டுப்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது.உணவு முறையில் சில சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம்.

நாவல் விதைகள்:
1 தேக்கரண்டி நாவல் விதை பவுடரை மிதமான சூடான நீரில் கலந்து தினமும் குடித்து வர வேண்டும்.

லவங்கபத்திரி இலை தூள்,கற்றாழை ஜெல் :
கற்றாழை ஜெல் ரத்த க்ளுகோஸ் அளவை மேம்படுத்த உதவுகிறது.எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயனுள்ளதாக இருக்கிறது.மேலும் இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது,மலச்சிக்கலை போக்குகிறது,வலி மற்றும் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்கிறது.அறுவை சிகிச்சைக்கு பிறகு வடு ஏற்படுவதைத் தடுக்கிறது.
1/2 டீஸ்பூன் லவங்கபத்திரி இலை தூள்,1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்,1 டீஸ்பூன் அலோ வேரா ஜெல் இவற்றை ஒன்றாக கலந்து மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு முன்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.இது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

மஞ்சள்,நெல்லி பவுடர்,வெந்தய பவுடர்:
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1 தேக்கரண்டி பெரிய நெல்லிக்காய் பவுடர் மற்றும் 1/2 டீஸ்பூன் வெந்தய பவுடர் ஒன்றாக கலந்து 1/2 கப் நீரில் நன்றாக கலக்க வேண்டும்.இந்த நீரை தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

லவங்கப்பட்டை:
1 லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும்.20 நிமிடம் மிதமான வெப்பத்தில் தண்ணீரைக் கொதிக்க விட வேண்டும்.3 தேக்கரண்டி பட்டை தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.இந்த நீரை வடிகட்டி தினமும் குடிக்க வேண்டும்.

ஆல மர பட்டை நீர் :
ஆல மரப் பட்டைபொடியை ( கடைகளில் கிடைக்கும்) எடுத்து 3 கப் நீரில் போட்டு 1 கப் ஆகும் வரை கொதிக்க வையுன் கள். பின்னர் இந்த டிகாஷனை வடிகட்டி, தினமும் 50 மி.லி குடிக்க வேண்டும்.

வெண்டைக்காய்:
இது ரத்தத்தில் க்ளுகோஸின் அளவைக் குறைக்க உதவும் ஒரு சிறந்த உணவு.
இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும்.காலையில் வெறும் வயிற்றில் வெண்டைக்காயை சாப்பிட வேண்டும்.

ப்ளூ பெர்ரி:
ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.இதன் சாறு நீரிழிவுக்கான சிகிச்சையாக அங்கீகரிக்கப் படவில்லை ஆனால் நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது என்றுக் கண்டறிந்துள்ளனர்.
ப்ளூ பெர்ரியை பழமாகவோ (அ) சாறு பிழிந்தோ எடுத்துக் கொள்ளலாம்.

திரிப்புலா:
திரிப்புலா மற்றும் இதன் மூலம் பெறப்படும் இதர பொருட்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.இவற்றை மஞ்சளுடன் சேர்த்து ஒரு நாளுக்கு ஒரு முறை எடுக்கலாம்.

பெரிய நெல்லிக்காய்
ஒரு நாளைக்கு 2 முறை நெல்லிக்காய் சாறை பருக வேண்டும் (அ) ஒரு நாளைக்கு 2 நெல்லிக்காய் சாப்பிட வேண்டும்.

வெந்தயம்:
வெந்தயம் நீரிழவு 2-வது வகைக்கு நல்ல மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க கணைய செல்களை ஊக்குவிக்கும் திறன் கொண்டது.
-4 டீஸ்பூன் வெந்தயத்தை 300 மில்லி லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும்.காலையில் நீரை வடித்து வெந்தயத்தை அரைத்து நீருடன் குடிக்க வேண்டும்.இவ்வாறு 3 மாதங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
வெந்தயத்தை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் நீரையும் வெந்தயத்தையும் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
வெந்தயத்தை வெறும் வாணலியில் வருத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை தினமும் நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

பாகற்காய்:
பாகற்காய் ஆல்பா குளுகோசிடேஸ் என்சைமின் செயல்பாட்டைக் குறைக்கும் திறன் கொண்டது.இது சர்க்கரை அளவைக் குறைக்கிறது. 4 முதல் 5 பாகற்காயை எடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கவும்.பாகற்காயை அரைத்து அதன் சாறை பிழிய வேண்டும்.இந்த சாறை தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

நீரிழிவு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
சர்க்கரை, கரும்புச் சாறு, நெய், எண்ணெய், கேக், வெல்லம், புளிப்பு பானங்கள், ஆல்கஹால், கார்போஹைட்ரெட் நிறைந்த உணவு, தயிர், குப்பை உணவுகள், வெண்ணெய், குளிர் பானங்கள், பிஸ்கட் போன்றவை. இவை அனைத்தையும் பின்பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள்.
நிறைய நார்சத்து நிறைந்த உணவுகள் எப்போதும் உங்களை கட்டுக்குள் வைத்திருக்கும்



Click it and Unblock the Notifications