Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
நீரிழிவு நோயாளிகளே! தீபாவளி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...
இந்து பண்டிகைகளில் நன்கு விமரிசையாக அனைத்து வயதினரும் சந்தோஷமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் தீபாவளி. பட்டாசு, அலங்காரம் போன்றவை மட்டுமின்றி, பலவிதமான பலகாரங்களை வீட்டில் செய்து சாப்பிடுவோம். குறிப்பாக இனிப்புக்களை அதிகம் செய்வோம். இந்த இனிப்புக்களை நீரிழிவு நோய் இருப்பவர்கள் சாப்பிட்டால், பின் இப்பண்டிகை பெரும் ஆபத்தில் முடிந்துவிடும்.
மேலும் எவ்வளவு தான் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும், வாயை கட்டிப் போட முடியாமல் போகும். சில நேரங்களில் சந்தோஷத்தில் எடுத்து சாப்பிட நேரிடும். இனிப்புக்கள் மட்டும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது, எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களும் ஆபத்தை ஏற்படுத்தும். அதற்காக தீபாவளி அன்று எந்த ஒரு உணவுப் பொருளையும் சாப்பிடக்கூடாது என்று இல்லை. சர்க்கரை சேர்க்கப்படாத உணவுப் பொருட்களை நிச்சயம் சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, தினமும் தவறாமல் செய்து வந்த உடற்பயிற்சிக்கு தீபாவளி அன்று விடுமுறை கொடுத்துவிடுவோம். அப்படி செய்வதால், உடல் ஆரோக்கியம் தான் கெட்டுப் போகும்.
எனவே இந்த தீபாவளி இனிமையாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டுமெனில் என்னவெல்லாம் பின்பற்ற வேண்டுமென்று ஒருசிலவற்றை குறிப்பிட்டுள்ளோம். அதைப் படித்து அதன் படி நடந்து கொண்டால், நிச்சயம் இந்த தீபாவளி ஆரோக்கியமானதாக இருக்கும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு தீபாவளி ஆரோக்கியமானதாக இருக்க சில டிப்ஸ்...

கலோரிகளில் கட்டுப்பாடு வேண்டும்
அதிக கலோரி உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, இதய நோயாளிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். அதிலும் பண்டிகை நாட்களில், அதிகப்படியான எண்ணெய் பலகாரங்களை தயாரிப்போம். ஆனால் இந்த உணவுப் பொருட்களை நீரிழிவு இருப்பவர்கள் அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் கலோரி குறைவாக இருந்தால் தான், இனிப்புக்களை எளிதில் செரிமானமடையும்.

செயற்கை இனிப்புக்களை தவிர்க்கவும்
நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிய எதிரியே செயற்கை இனிப்புகள் தான். எனவே தீபாவளி அன்று எந்த ஒரு சூழ்நிலையிலும் மறந்தும் கூட, செயற்கை இனிப்புகள் கலந்த உணவுப் பொருட்களைத் தொடவேக் கூடாது. மாறாக இயற்கை இனிப்புகளான தேன் கலந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம்.

ஆரோக்கியமான கொழுப்புக்கள்
மோனோ-அன்-சாச்சுரேட்டட், பாலி-அன்-சாச்சுரேட்டட் மற்றும் ஒமேகா-3 கொழுப்புக்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். ஆகவே ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த ஆளி விதை, சால்மன், டூனா, சாலட், ஆலிவ் ஆயில் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாகற்காய் அல்லது வேப்பிலை ஜூஸ்
ஒருவேளை தவறாமல் இனிப்புக்களை சற்று அதிகமாக சாப்பிட்டு விட்டால், தவறாமல் பாகற்காய் அல்லது வேப்பிலை ஜூஸ் குடித்துவிடுங்கள். இதனால் அவை உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

சர்க்கரை சேர்க்காத இனிப்புகளை சாப்பிடவும்
நிச்சயம் தீபாவளி அன்று இனிப்புக்களை முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆகவே அப்போது சர்க்கரை சேர்க்காத இனிப்புக்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். இதனால் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாது.

உடற்பயிற்சி
தீபாவளி தானே என்று தினமும் செய்யக்கூடிய உடற்பயிற்சியை செய்யாமல் இருக்க வேண்டாம். ஏனெனில் தினமும் உடற்பயிற்சி செய்வதால் தான், இதுவரை ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடிகிறது என்பதை முதலில் உணருங்கள்.

இரத்த பரிசோதனை செய்யுங்கள்
தீபாவளி ஆரோக்கியமானதாக இருக்க செய்ய வேண்டிய செயல்களில் ஒன்று தான் இரத்த பரிசோதனை செய்வது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள முடியும்.

உணவில் கட்டுப்பாடு
பண்டிகையன்று வீட்டில் வகை வகையாக உணவுகளை சமைப்பார்கள். உணவுகள் சூப்பராக உள்ளது என்று அதிகமாக உட்கொள்ளாமல், அளவாக உட்கொண்டால், நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications
