Latest Updates
-
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்?
சர்க்கரை நோய் இருப்பவர்கள் வெயில் காலத்தில் பாதுகாப்பாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
கடுமையான வானிலை மாற்றங்களுடன், கோடைகாலம் தொடங்கிவிட்டது, வெயில்காலம் எப்போதும் வியர்வையாகவும், சோர்வாகவும் இருக்கும், மேலும் நமது திரவத் தேவைகள், உணவுப்பழக்கம் போன்றவற்றில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும், ஏனெனில் வெப்பநிலை அதிகரிப்பு, சில நீரிழிவு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
வெயில்காலம் வியர்வை சுரப்பிகளை பாதிக்கலாம், இரத்த நாளங்கள் அல்லது நரம்புகளை சேதப்படுத்தலாம். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் விரைவாக நீரிழப்புக்கு ஆளாகலாம் மற்றும் இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டால், அது உடலின் குளிர்ச்சியை குறைக்கும் மற்றும் உடல் இன்சுலின் கையாளும் விதத்தை மாற்றலாம்.

சர்க்கரை நோயாளிகள் வெயில்காலத்தில் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நீரேற்றம்
அதிகளவு திரவங்களை எடுத்துக்கொள்வது கோடைகாலத்தில் குறிப்பாக அனைவரும் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் அவசியமானது.
உடல் செயல்பாடுகள்
தீவிரமான உடற்பயிற்சி இல்லை என்றாலும் சிறிய உடல் செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சி இரத்த சர்க்கரையை நிர்வகிக்க ஒரு நல்ல வழி. இருப்பினும்,வெயில் அதிகமாக இருக்கும் போது அல்லது வெப்பநிலை உயரும் போது வெளியே செல்லக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
காஃபினை தவிர்க்கவும்
கோடைகாலத்தில் காபி/டீ அல்லது வேறு ஏதேனும் ஆற்றல் பானங்கள் வடிவத்தில் காஃபின் உட்கொள்வது இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். இது உடலில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்கும் வழிவகுக்கிறது.
சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும்
இரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவை சரியான நேரத்தில் பரிசோதிப்பதைத் தவிர்க்கக்கூடாது. நீங்கள் ஏதேனும் புதிய அறிகுறியைக் கண்டாலோஅல்லது பருவத்தின் காரணமாக மருந்தின் அளவை மாற்ற வேண்டியிருந்தாலோ மருத்துவரை ஆலோசிக்க வேண்டியது அவசியம்.
கோடைக்கால ஆடைகள்
உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க ஒரு வழி வெளிர் நிற லூசான உடைகளை அணிவது. இது உடலுக்குள் போதுமான அளவு காற்று புகுவதை உறுதிசெய்கிறது, அது உள் இரத்த நாளங்களைத் தடுக்கிறது.
பழச்சாறுகளில் இனிப்புக் கூடாது
கோடையில் நமக்குத் தேவையான புத்துணர்ச்சியூட்டும் பானமே ஃப்ரெஷ் ஜூஸ் தான். ஆனால், அவற்றில் இனிப்புச் சத்து இருப்பதால் மீண்டும் உங்கள் உடலில் சர்க்கரையை அதிகரிக்கும். எனவே அவற்றை மிதமாக சாப்பிடுங்கள் அல்லது இன்னும் சிறப்பாக, வீட்டிலேயே புதிய பழச்சாறுகளை தயாரிக்கவும்.
நார்ச்சத்து உணவுகள்
நார்ச்சத்து நிறைந்த உணவு செரிமானத்திற்கு சிறந்தது, உங்களை முழுதாக வைத்திருக்கும், மேலும் இரத்தத்தில் சர்க்கரை திடீரென அதிகரிப்பதைத் தடுக்கிறது.
வெளியே செல்லும் நேரம்
நீங்கள் எப்போதுவெளியே செல்ல வேண்டும் என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சூரியன் மேல்நோக்கி இருக்கும் போது மற்றும் வெப்பநிலை உயரும் போது அதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு தேவைப்பட்டால், சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


