Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை நீக்கணுமா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க..
Detoxifying Foods In Tamil: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் ஒவ்வொருவரும் பல்வேறு பழக்கவழக்கங்களை தினந்தோறும் பின்பற்றி வருகிறோம். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் முதலில் உடலில் உள்ள நச்சுக்களை அவ்வப்போது வெளியேற்றிவிட வேண்டும்.
இந்த நச்சுக்களானது நாம் உண்ணும் உணவுகள், சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர் ஆகியவற்றின் மூலம் நமது உடலில் நுழைகின்றன. இவ்வாறு உடலில் சேரும் நச்சுக்களை அவ்வப்போது வெளியேற்றாமல் இருந்தால், அதுவே ஒருகட்டத்தில் பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும்.

எனவே உடலில் உள்ள நச்சுக்களை சீரான இடைவெளியில் வெளியேற்ற வேண்டும். என்ன தான் இயற்கையாகவே நமது உடலில் நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறை நடந்தாலும், ஒருசில உணவுகளும் உடலை சுத்தம் செய்ய பெரிதும் உதவி புரியும். அந்த உணவுகளை அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் சேரும் நச்சுக்களை அவ்வப்போது வெளியேற்றிவிடலாம். கீழே உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
1. சியா விதைகள்
உருவத்தில் மிகச்சிறிய விதைகளான சியா விதைகளில் சக்தி வாய்ந்த சத்துக்கள் பல நிறைந்துள்ளன. முக்கியமாக இந்த விதைகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளன. அதுவும் இவற்றில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன.
எனவே அவற்றை உட்கொள்ளும் போது, அது செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்களை உறிஞ்சி, அதிகப்படியான கழிவுகளை வெளியேற்றி, செரிமான செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ளும் மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எனவே குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், சியா விதைகளை முடிந்தால் தினமும் சிறிது ஊற வைத்து, உட்கொண்டு வாருங்கள்.
2. பார்ஸ்லி
பார்ஸ்லி என்பது ஒரு சக்தி வாய்ந்த நச்சு நீக்கும் ஒரு மூலிகை. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. குறிப்பாக இதில் குளோரோபில் அதிகம் உள்ளன. இந்த பார்ஸ்லியை உணவில் சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள மெட்டல் மற்றும் பிற நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. கூடுதலாக, இதில் டையூரிக் பண்புகள் உள்ளன. இது சிறுநீர் உற்பத்தியை தூண்டி, நச்சுக்கள் மற்றும் அதிகப்படியான நீரை வெளியேற்ற உதவுகின்றன. அதற்கு நற்பதமான பார்ஸ்லி இலைகளை ஸ்மூத்திகள் அல்லது சாலட்டுகளில் தூவி உட்கொள்ளலாம்.
3. மஞ்சள்
தினசரி சமையலில் சேர்க்கப்படும் ஒரு மருத்துவ பண்புகள் அதிகம் நிறைந்த பொருள் தான் மஞ்சள் தூள். இதில் உள்ள சக்தி வாய்ந்த குர்குமின் என்னும் பொருள் தான் இதற்கு மஞ்சள் நிறத்தை தருகின்றன. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன.
இப்படிப்பட்ட மஞ்சளை தினசரி உணவில் சேர்த்து வந்தால், அது கல்லீரலை நச்சு நீக்கவும், ஜீரணிக்கவும், மாசுகளை அகற்றவும் உதவுகிறது. இன்னும் சிறப்பான பலனைப் பெற, மஞ்சள் தூளை சமையலில் சேர்ப்பதைத் தவிர, வெதுவெதுப்பான நீரில் கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்.
4. பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களான ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்றவற்றில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை வளமான அளவில் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியை குறைக்க உதவுகின்றன.
மேலும் பெர்ரி பழங்களில் நார்ச்சத்துக்களும் இருப்பதால், இது செரிமான மண்டலத்தில் இருந்து கழிவுகள் மற்றும் நச்சுக்களை எளிதில் நீக்க உதவுகின்றன. எனவே உடலை சுத்தம் செய்ய நினைத்தால், பெர்ரி பழங்களை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.
5. எலுமிச்சை
எலுமிச்சையின் மகிமையை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, கல்லீரலுக்கு அத்தியாவசிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான குளுதாதயோனை உற்பத்தி செய்ய உதவுகிறது. இந்த குளுதாதயோன் கல்லீரலின் நச்சுநீக்கும் செயல்முறையை ஆதரிக்கிறது. அதற்கு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications