Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
பிறந்த குழந்தைகளுக்கான பல் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு குறித்து விளக்குகிறார் பல் மருத்துவர் ஆர்.பி.கமல்ராஜ்
பொதுவாகவே குழந்தைகள் பிறந்த 6 மாதங்களுக்குள் அல்லது சில குழந்தைகளுக்கு 9 மாதங்களில் அவர்களின் முதல் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். இரண்டரை முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இருபது பற்கள் தோன்றும். குழந்தைகளில் முதல் பற்கள் தோன்றிய பிறகு, பல் பராமரிப்பு அவசியம். எனவே தங்களது குழந்தைகளுக்கு பற்களை எவ்வாறு பராமரிப்பது? அவற்றின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது என்று பலவிதமான கேள்விகள் அனைத்து தாய்மார்களுக்கும் எழும்..
இது சாதாரண விஷயம்தான்.. காரணம் ஒவ்வொரு அம்மாக்களுக்கும் தங்களது குழந்தையின் வளர்ச்சியில் எப்போதுமே கவலையும் கவனமும் இருந்துக் கொண்டேதான் இருக்கும்.. அதிலும் பற்களின் வளர்ச்சி குறித்தும் அதனை பராமரிப்பது குறித்தும் அதிகமாக மெனக்கெடுவார்கள்.. அதனால் பிறந்த குழந்தைகளுக்கான பல் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு குறித்து பலவிதமான கேள்விகள் பல் மருத்துவர் ஆர்.பி.கமல்ராஜிடம் கேட்கப்பட்டது.. அதற்கு அவர் அளித்த பதில்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

எந்த மாதத்தில் பல் முளைக்கும்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பல் மருத்துவர் கமல்ராஜ், “ பிறந்த குழந்தைகளுக்கு பொதுவாக 6 முதல் 12 மாதங்களில் பால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். அரிதாக சில குழந்தைகள் பால் பற்களுடன் பிறப்பதும் உண்டு. 6-7 வயதிற்குள் பால் பற்கள் விழுந்து, நிலையான பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். பிறப்பு முதல் ஒரு வருடம் வரை ஒரு குழந்தையின் ஈறுகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை மென்மையான, சுத்தமான, ஈரமான துணியால் துடைக்க வேண்டும். 6வது மாதத்தில் முதல் பற்கள் தோன்றியவுடன், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது, குறைந்தபட்சம் தூங்கும் நேரத்திலாவது மென்மையான துணிகள் கொண்டு குழந்தைக்கு பல் துலக்கினால் சிறப்பு " என்கிறார் மருத்துவர்.
குழந்தைகளின் பற்களை எதனை கொண்டு எவ்வாறு பராமரிப்பது? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மருத்துவர், “ பிறந்த நாளில் இருந்தே குழந்தையின் பல் பராமரிப்பில், பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பால் பற்கள் முளைத்திராத குழந்தைகள் பால் குடித்து முடித்த ஒவ்வொரு முறையுமே, நம் விரலில் தூய்மையான துணியை சுற்றி குழந்தையின் ஈறுகளை நன்றாக சுத்தம் செய்துவிட வேண்டும். பால் பற்கள் முளைத்ததும் அவர்களுக்கென இருக்கும் பிரத்தியேக டூத் பிரஷ், பேஸ்ட் கொண்டு தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல் துலக்கி விடவும், பின்னர் தூய்மையான துணியாலோ அல்லது மிருதுவான பிரஷ் கொண்டோ நாக்கினை சுத்தம் செய்து விடலாம். முடிந்தால், குழந்தையை ஒரு தட்டையான மேற்பரப்பில் படுக்க வைத்து, உங்கள் மடியில் தலையை மெதுவாக சாய்த்து பல் துலக்கவும். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பல் துலக்குவதற்கான சிலிகான் பிரஷ்கள் ஆன்லைனிலும் மருத்துவக் கடைகளிலும் இப்போது கிடைக்கிறது... ஆனால் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு குழந்தையின் பிரெஷை கிருமி நீக்கம் செய்ய மறக்காதீர்கள். அல்லது உங்கள் விரலில் வைத்தும் கூட உங்கள் குழந்தையின் பற்களை துலக்கலாம்” என்றார்..
பால் பற்களில் சொந்தை எவ்வாறு உருவாகிறது? அதனை எவ்வாறு தவிர்க்கலாம்? என்ற கேள்விக்கு பதிலளித்த பல மருத்துவர் ஆர்பி கமல்ராஜ்,”
பெரும்பாலான தாய்கள், இரவு நேரத்தில் பால் புட்யை வாயில் வைத்தபடியே குழந்தைகளை தூங்க வைப்பார்கள். அதனால் இரவு முழுக்க குழந்தையின்
பற்களில் பாலில் இருக்கும் இனிப்பு, கிருமிகளுடன் வினைபுரிய வாய்ப்பிருக்கிறது. இதனால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சொத்தை உள்ளிட்ட பிரச்சனைகள் வர நேரிடும். இனிப்பு சார்ந்த எந்த பொருட்களை உண்ட பின்பு தண்ணீரால் வாய் கொப்பளிப்பது அல்லது தண்ணீரை அறுந்துவதன் மூலம் இனிப்பானது ஓராளவாவது பற்களில் தங்குவதை தவிர்க்க முடியும்” என்கிறார்
குழந்தைகளின் பழக்க வழக்கதினால் பால்பற்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? அதனை தடுப்பது எப்படி? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,”
பெரும்பாலான குழந்தைகள் வாயில் விரல் வைத்து சூப்புவது, நாக்கினை இரண்டு பற்களுக்கு இடைபட்ட பகுதியில் அடிக்கடி வைத்துக் கொள்ளும் பழக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படலாம்.. இதனால் அவர்கள் பல் வரிசை சீரற்றதாகவும், முக அமைப்பு மாறவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு தவிர்க்க முடியாத சூழலில் பல் மருத்துவரை அணுகி, பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை மேற்க்கொள்ள வேண்டும்” என்கிறார்...
பற்கூழ் அகற்றல் என்றால் என்ன? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர்,” பற்கூழ் அகற்றல் என்பது ஆங்கிலத்தில் POLPOTOMY என்று அழைப்பார்கள். இது 12 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு செய்யும் மருத்துவம். 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செய்யும் 'வேர் சிகிச்சை' போன்றதாகும் இந்த பற்கூழ் அகற்றல். ஆனால் இதில் இரண்டு வகை இருக்கிறது ஒன்று பற்களின் தலை பகுதியில் இருக்கும் பற்சவர் அகற்றல், அதாவது (pulpotorny) மற்றொன்று முழு பற்கூழையும் அகற்றல், அதாவது வேர் பகுதியில் உள்ள பற்கூழையும் அகற்றுவது. இதனை (Polpectomy) என்று அழைப்பார்கள். குழந்தைகளின் பற்கள் என்பது மிகவும் உணர்திறன் கொண்டது. எனவே அவர்களின் பல் நலத்திற்கு ஏற்ப உணவுகளை வழங்குவதும் அதனை பாதுகாப்புடன் மேம்படுத்துவதும் பெற்றோர்களின் கமையாகும்.
குழந்தைகளுக்கு அதிக நேரம் பாலுட்டுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர், “
குழந்தைகளுக்கு பாலூட்டுவதன் நேரம் அதிகரிப்பதால் பற்சிதைவுகள் நேரிடும். இதில் 'குழந்தைகளுக்கான பற்சிதைவு' என்பது பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஜீஸ், பால் பவுடர் போன்று இயற்கையிலேயே சர்க்கரைச் சத்து கொண்ட திரவ உணவுகளால் உண்டாகிறது. நம் பற்களில் பல்வேறு பாக்டீரியாக்கள் உள்ளன. இந்தக் குழந்தைகள் பற்சிதைவை துவக்கத்திலேயே கவனித்து சரி செய்யாவிட்டால், அது மிக அதிகமான வலியையும் தொற்றையும் உருவாக்கி விடும். இவ்வாறு உருவாகும் பாதிப்புகளை பெற்றோர்கள் முன்பு கூறிய பராமரிக்கும் முறைகளை கொண்டு குழந்தைகளின் பற்களை பாதுகாக்க வேண்டும்.
பெற்றோக்கள் கவனத்திற்கு, என மருத்துவர் சில விஷயங்களை நம்மிடையே பகிர்ந்தார். அவைகளாவன;
சிறு வயதிலேயே பல் சொத்தை, இடைவிடாத கூச்சமும், பல் வலியும், சீரற்ற பல்வரிசை என எத்தனை பல் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும் அருகிலுள்ள பல் சாராத பொது மருத்துவர்களை அணுகாமல், பல் மருத்துவரை அணுகி பிரச்சனையை ஆரம்ப கட்டத்திலேயே சரிசெய்து கொள்வது சிறந்தது என்கிறார் மருத்துவர்..
பெற்றோர்களுக்கான முக்கியமான குறிப்புகள் பற்றி மருத்துவர் கூறியதாவது..
1. ஒரு நாளுக்கு இரு முறை பற்களை துலக்க வேண்டும்.
2. எண்ணெயை கொண்டு தினமும் வாயை கொப்பளிப்பதால் ஈறுகள் வலிமையடையும்..
3. பற்களை பிளோசிங் மற்றும் சுத்தம் செய்தல் வேண்டும்.
4. இனிப்பான உணவுகளை அளவுடன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்..
5. அனைத்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பிரஷை மாற்ற வேண்டும்.
இந்த 5 விஷயங்களை கண்டிப்பாக ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளின் முதல் 5 வருடங்கள் செய்து வந்தாலே போதும்.. மேலும் இந்த வழக்கங்களை அவர்களுக்கு பழக்கப்படுத்திவிட வேண்டும் என்கிறார் கூறுகிறார் பல் மருத்துவர் ஆர்பி கமல்ராஜ்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












