Latest Updates
-
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா?
இளநீர் Vs எலுமிச்சை ஜூஸ்: இவற்றில் கோடையில் குடிக்க ஏற்ற சிறந்த பானம் எது?
Coconut Water Vs Lemon Water: கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகிக் கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் இருந்தாலே ஒரு மைக்ரோ ஓவனில் இருப்பது போன்று, காலநிலை மிகவும் வெப்பமாக உள்ளது. இப்படி காலநிலை அளவுக்கு அதிகமாக வெப்பமாக இருப்பதால், உடலில் நீரிழப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.
எனவே கோடையில் தான் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது. உடல் போதுமான நீரேற்றத்துடன் இருந்தால் தான், உடலின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும், உடலின் வெப்பநிலை பராமரிக்கப்படும் மற்றும் உடல் வறண்டு போகாமல் இருக்கும்.

இப்படி உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள போதுமான அளவு நீரை தினமும் பருக வேண்டும். அதுவும் மற்ற பருவ காலங்களை விட, கோடையில் சற்று அதிகமாக நீரை அருந்த வேண்டும். மேலும் வெறும் நீரை மட்டும் குடிக்க அனைவருக்கும் பிடிக்காது. இதனால் பலர் பலவிதமான ஜூஸ்களை வாங்கி குடிப்பார்கள்.
முக்கியமாக கோடையில் பெரும்பாலானோர் அதிகம் குடிக்கும் பானங்கள் என்றால் அது இளநீர் மற்றும் எலுமிச்சை ஜூஸ் தான். இவ்விரண்டுமே கோடையில் அதிக வெப்பத்தால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தடுக்கும் சத்துக்களை உள்ளடக்கிய ஆரோக்கியமான பானங்களாக இருந்தாலும், இவ்விரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கும். இப்போது இவ்விரண்டில் எது சிறந்தது என்பதைக் காண்போம்.
இளநீரின் நன்மைகள்
இளநீரில் எலக்ட்டோலைட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும் மிகச்சிறந்த பானங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இளநீரில் பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், எலக்ட்ரோலைட்டுகள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன.
எனவே இந்த இளநீரை கோடையில் குடித்து வந்தால், அவை உடலில் திரவங்களை சமநிலையில் பராமரிப்பதோடு, தசைகள் மற்றும் நரம்பு சமிக்ஞைகளை பராமரிக்கவும் பெரிதுவும் உதவுகிறது. மேலும் இளநீரில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குளுக்கோஸ், புருக்டோஸ் போன்ற சர்க்கரைகளும் இருப்பதால், இவை உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கின்றன.
கூடுதலாக இளவீரில் வைட்டமின் சி மற்றும் பாலிஃபீனால்கள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை உடலில் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுத்து, உடல் செல்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. அதோடு இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவி புரிகின்றன.
எலுமிச்சை ஜூஸின் நன்மைகள்
எலுமிச்சை ஜூஸ் நல்ல சுவையான, அதே சமயம் தாகத்தைத் தணிக்கும் ஒரு அற்புதமான பானம். இந்த எலுமிச்சை ஜூஸை கோடையில் குடித்து வந்தால், அது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதோடு, வேறு பல நன்மைகளையும் வழங்கும். ஏனெனில் இந்த ஜூஸில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ளேவோனாய்டுகள் போன்றவை உள்ளன. இவை நோயெர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகின்றன.
என்ன எலுமிச்சையில் அமிலத்தன்மை இருந்தாலும், காரப் பண்புகளையும் கொண்டுள்ளதால், இந்த எலுமிச்சை ஜூஸை குடிக்கும் போது, உடலின் pH அளவை சமநிலையில் பராமரிக்கப்படுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி ஏராளமான அளவில் இருப்பதால், இவை கொலாஜனை உற்பத்தி செய்ய உதவி புரிந்து, கோடையிலும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
இவ்விரண்டில் சிறந்தது எது?
கோடையில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள இளநீர், எலுமிச்சை ஜூஸ் ஆகிய இரண்டுமே உதவி புரியும். இதில் இளநீர் வியர்வை மூலம் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை நிரப்புவதில் சிறந்து விளங்குகிறது. எனவே கடுமையான உடற்பயிற்சிக்கு பின் அல்லது வெயிலில் சுற்றிவிட்டு வந்ததும், குடிக்க ஏற்ற சிறந்த பானமாக இளநீர் விளங்கும். அதோடு இளநீரில் பொட்டாசியம் இருப்பதால், இது நீரிழப்பு மற்றும் தசைப்பிடிப்புகள் போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது.
அதே சமயம் எலுமிச்சை ஜூஸில் இளநீரைப் போல் எலக்ட்ரோலைட்டுகள் இல்லாவிட்டாலும், உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள தேவையான சத்துக்கள் உள்ளன. அதுவும் இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும் எலுமிச்சை ஜூஸானது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுவதோடு, அதிக திரவ உட்கொள்ளலை ஊக்குவித்து, உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும்.
எனவே கோடையில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள இளநீர், எலுமிச்சை ஜூஸ் ஆகிய இரண்டுமே உதவி புரிவதால், எவற்றை தேர்வு செய்வதென்பது ஒருவரது விருப்பத்தைப் பொறுத்தது. உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட பின் அல்லது வெளியே சுற்றிய பின் குடிக்க இளநீர் சிறந்ததாக இருக்கும். அதே வேளையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள நினைத்தால், எலுமிச்சை ஜூஸை குடிப்பது சிறந்ததாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications