Latest Updates
-
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
கொலஸ்ட்ராலுக்கு குட்-பை சொல்லணுமா? அப்ப இந்த 7 பழங்களை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க போதும்..
Cholesterol Lowering Fruits In Tamil: கொலஸ்ட்ரால் என்பது வழுவழுப்பான ஒரு மெழுகு போன்ற பொருள். இது உடலுறுப்புக்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாது. ஏனெனில் கொலஸ்ட்ராலானது செல்களை உருவாக்கவும், சரிசெய்யவும் மற்றும் ஹார்மோன்களை உருவாக்கவும் பெரிதும் உதவி புரிகிறது.
ஆனால் இந்த கொலஸ்ட்ரால் உடலில் மிதமான அளவில் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமானால், அது உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும்.

தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால், நிறைய பேர் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால், இதய நோயினாலும் பாதிக்கப்படுகின்றனர்.
எப்படி உணவுகளால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறதோ, அதேப் போல் அந்த கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உணவுகள் உதவி புரிகின்றன. அதுவும் பலரும் விரும்பி சாப்பிடும் பழங்கள் மூலமாகவே கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம். இப்போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் சில பழங்களைக் காண்போம்.
1. ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டசியம் போன்றவை வளமான அளவில் உள்ளன.
அதுவும் சிவப்பு மற்றும் பச்சை ஆப்பிள்களில் அத்தியாவசிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன. அதற்கு ஆப்பிளை காலை உணவின் போதோ அல்லது ஸ்நாக்ஸ் வேளைகளிலோ சாப்பிடலாம்.
2. அவகேடோ
அவகேடோ பழத்தில் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளன. அதுவும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமான அளவில் உள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் அவகேடோ பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்றவைகளும் ஏராளமான அளவில் உள்ளன.
3. பெர்ரிப் பழங்கள்
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் மற்றொரு அற்புதமான பழங்கள் தான் பெர்ரிப் பழங்கள். இந்த பழங்களை தினமும் ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஏனெனில் பெர்ரி பழங்களில் இதயத்தைப் பாதுகாக்க தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. அதுவும் ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன.
4. சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின் சி கொலஸ்ட்ராலைக் குறைக்க தேவையான சத்தாகும். எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், தங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
5. திராட்சை
திராட்சையில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் உள்ளன. கொலஸ்ட்ரால் குறைக்க நினைப்பவர்கள், தங்களின் தினசரி டயட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும்.
இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் திராட்சையில் ஏராளமான அளவில் உள்ளன. முக்கியமாக இதில் ரெஸ்வெரேட்ரால் என்னும் கலவை அதிகமாக உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. எனவே கொலஸ்ட்ரால் அதிகமாகக்கூடாதெனில் திராட்சையை அடிக்கடி சாப்பிடுங்கள்.
6. மாதுளை
மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன. மேலும் இந்த பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் உள்ளன. எனவே உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு மாதுளை மிகச்சிறந்த பழமாகும்.
7. எலுமிச்சை
எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் அதிகளவில் உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ராலை திறம்பட குறைக்க உதவுகின்றன. ஆகவே எளிய முறையில் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க நினைத்தால், எலுமிச்சை ஜூஸை தினமும் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications