Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
காலையில் எழும்போதே முதுகு வலிக்கிறதா? அப்ப இந்த மோசமான பிரச்சினை உங்களுக்கு இருக்க வாய்ப்பிருக்காம்...!
காலையில் எழுந்தவுடன் அனைவருமே சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்றுதான் நினைப்பார்கள். ஆனால் எதார்த்தத்தில் நடப்பது இதற்கு முற்றிலும் எதிர்மறையானதாக இருக்கும். காலையில் எழும்போதே பல இடங்களில் வலியுடன்தான் நாம் எழுகிறோம். காலை எழும்போதே உங்கள் உடலில் சில இடங்களில் வலி இருந்தால் உங்கள் ஆரோக்கியத்தில் சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்.
உங்கள் தசைகளில் வலி, கடுமையான தலைவலி அல்லது உடல் வலி போன்றவற்றை நீங்கள் உணர்ந்தால் எந்த வேலையையும் செய்வது கடினமாக இருக்கும். நீங்கள் தூங்கி எழுந்தவுடன் உடலில் வலிகள் இருப்பது படுக்கை மற்றும் தூக்க நிலை கோளாறுகளால் மட்டுமல்ல உங்கள் ஆரோக்கிய பிரச்சினையும் அதற்கு காரணாமாக இருக்கலாம். காலையில் எழுந்தவுடன் உங்கள் உடலில் பல பாகங்களில் வலி ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வைட்டமின் டி குறைபாடு
ஹைபோகால்சீமியா அல்லது குறைந்த இரத்த கால்சியம் அளவு, உங்கள் உடலில் போதுமான வைட்டமின் டி இல்லாதபோது ஏற்படலாம். உங்கள் சிறுநீரகங்கள் மற்றும் தசைகள் போன்ற உங்கள் உடலின் பல முக்கிய உறுப்புகள் சரியாக வேலை செய்ய கால்சியத்தை நம்பியுள்ளன. உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க கால்சியம் தேவைப்படுகிறது. கால்சியத்தை உறிஞ்சுவதற்கு போதுமான வைட்டமின் டி இல்லாத போது, இந்த உறுப்புகளிலும் உங்கள் எலும்புகளிலும் வலியை உணரலாம்.
அனீமியா
உங்கள் உடலில் போதுமான இரத்த சிவப்பணுக்கள் இல்லாதபோது இரத்த சோகை ஏற்படுகிறது, எனவே உங்கள் உடல் திசுக்கள் போதுமான ஆக்ஸிஜனைப் பெற முடியாது. இரத்த சோகையால், உங்கள் உடலின் பல பாகங்கள் சோர்வாக உணரலாம், ஏனெனில் அவை ஆரோக்கியமாக இருக்க அல்லது சரியாக செயல்பட போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது.
உடல் பருமன்
அதிக எடை உங்கள் முதுகு மற்றும் கழுத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதனால் வலி ஏற்படுகிறது. அதிக எடையுடன் இருப்பது தூக்கத்தில் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும், தூக்கத்திஉங்களுக்கு வலியை ஏற்படுத்தும். உடல் எடையை குறைப்பது உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான எளிதான வழியாகத் தோன்றினாலும், எடை இழப்பை பராமரிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம், குறிப்பாக நீங்கள் உடல் வலிகளுடன் எழுபவராக இருந்தால்.
மோசமான படுக்கை
தரமற்ற மெத்தையில் தூங்குவது உங்கள் உடல் வலிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். தரமற்ற அல்லது மோசமான படுக்கையில் தூங்கும்போது அது உங்கள் உடலில் பல பிரச்சினைகளுக்குக் காரணமாகும்.
தவறான தூக்க நிலைகள்
நீங்கள் தூங்கும் நிலை, எழுந்தவுடன் உங்கள் உடல் வலியை ஏற்படுத்தும். தவறான நிலைகளில் தூங்கும் போது அது காலா நேரத்தில் பல அசௌகரியங்ளை ஏற்படுத்தும். பொதுவாக, பக்கவாட்டுத் தூக்கம் பெரும்பாலானவர்களுக்கு சிறந்தது, குறிப்பாக தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற தூக்கக் கோளாறுகள் உள்ளவர்கள் இந்த நிலையில் தூங்கினால் உடல் வலியைத் தவிர்க்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
