Latest Updates
-
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்..
எச்சரிக்கை! இந்த 4 உணவுகள தெரியாம கூட காலை உணவா சாப்பிட்டுறாதீங்க... இல்லனா வாய் புற்றுநோய் வருமாம்!
Mouth Cancer Risk In Tamil: இன்றைய பிஸியான வாழ்க்கை முறையில் பெரும்பலான மக்கள் தங்கள் உணவு முறையையும் வாழ்க்கை முறையையும் மாற்றி வருகிறார்கள். துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மோகம் அதிகரித்து வருகிறது. இந்த உணவுகள் உயிருக்கு ஆபத்தான சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் (UPFs) சுவையானவை, மலிவானவை மற்றும் எளிதில் கிடைக்கக்கூடியவை. இந்த காரணிகளால், அதிகமான மக்கள் இந்த தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தேர்ந்தெடுத்து அதிகளவில் உட்கொள்கின்றனர். இது உங்கள் கலோரி உட்கொள்ளலை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால் மற்றும் வாய் புற்றுநோய் ஆபத்து உட்பட பல நோய்களுக்கும் பங்களிக்கும்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் பிரிட்டிஷ் ஆய்வில், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், 34 வகையான வெவ்வேறு புற்றுநோய்கள் ஏற்படுவதற்கு தொடர்புள்ளதாக கூறப்பட்டது. மேலும், தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கு இடையிலான தொடர்புகள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டது. வாய் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் பொதுவான காலை உணவுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆய்வின் கண்டுபிடிப்புகள்
பல ஆண்டுகளுக்கு மேலாக ஏறக்குறைய அரை மில்லியன் மக்களை உள்ளடக்கிய ஆராய்ச்சியில், அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை (UPFs) உட்கொள்பவர்களுக்கு உணவுக்குழாய் உட்பட மேல் ஏரோடைஜெஸ்டிவ் பாதையில் புற்றுநோய்கள் உருவாகும் ஆபத்து அதிகம் என்று கண்டறியப்பட்டது.
10 சதவிகிதம் அதிகமான பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது, தலை மற்றும் கழுத்து புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து 23 சதவிகிதம் இருப்பதாகக் கூறப்படுகிறது. உணவுக்குழாய் புற்றுநோய் 24 சதவிகிதம் அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சில காலை உணவுகள் உங்கள் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. அவை என்னென்ன காலை உணவுகள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
தொத்திறைச்சிகள்
நியூ சவுத் வேல்ஸ் கேன்சர் கவுன்சில் ஆய்வின் படி, அதிக சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வது 18% குடல் புற்றுநோய் வளர்வதற்கு காரணமாகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகை 1 புற்றுநோயாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் உள்ள சில இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும்.
காலை உணவு தானியங்கள்
அக்ரிலாமைடு என்பது ஒரு இரசாயனமாகும். இது உணவுகளை நீங்கள் உயர் வெப்பநிலையில் சமைக்கும்போது தொகுக்கப்பட்ட காலை உணவு தானியங்கள் உட்பட சில உணவுகளில் உருவாகலாம். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளின் வெப்பச் செயலாக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படும் அக்ரிலாமைடு, புற்றுநோயை உருவாக்கலாம்.
ரொட்டி உணவுகள்
இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆய்வில், 38 பிரபலமான பிராண்டுகளில் 84% ரொட்டிகளில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. பாவ் பன், பர்கர் மற்றும் பீட்சா உள்ளிட்ட ரொட்டிகளில் பொட்டாசியம் புரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் இருப்பது கண்டறியப்பட்டது.
பொட்டாசியம் ப்ரோமேட் என்பது 2B வகை புற்றுநோயாகும். இது புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் பொட்டாசியம் அயோடேட் தைராய்டு கோளாறுகளைத் தூண்டுவதாக அறியப்படுகிறது. இந்த உணவுகளை நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளும்போது, அவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
பழ சுவை கொண்ட யோகர்ட்ஸ்
சில சுவையூட்டப்பட்ட தயிர்களில் அஸ்பார்டேம் இனிப்பானதாக இருக்கலாம். அஸ்பார்டேம் என்பது ஒரு செயற்கை இனிப்பு ஆகும், இது உலக சுகாதார அமைப்பால், மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மனிதர்களில் அதன் புற்றுநோய்க்கான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












