Latest Updates
-
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது..
அடிக்கடி இந்த இடத்துல வலிக்குதா? அப்ப மூளையில் கட்டி இருக்கு-ன்னு அர்த்தம்.. ஜாக்கிரதை!
Symptoms Of Brain Tumour In Tamil: தற்போது உலகெங்கிலும் மூளைக்கட்டியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் இந்த மூளைக்கட்டியானது குழ்ந்தைகள் மற்றும் இளம் பருவனத்தினரிடையே அதிகம் காணப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதுவும் அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் தலைமையிலான மத்திய மூளைக்கட்டி பதிவேட்டின் புள்ளிவிவரங்களின் படி, கடந்த 5 ஆண்டுகளில் மூளைக்கட்டி வழக்குகளானது 0.5 முதல் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுவும் இந்த மூளைக்கட்டி வயதானவர்களிடையே குறைவாகவும், இளம் பருவனத்தினரிடையே அதிகமாகவும் காணப்படுவது தெரிய வந்துள்ளது.

இந்த மூளைக்கட்டியின் அறிகுறிகள் குறித்து நிறைய பேருக்கு இன்னும் சரியாக தெரியவில்லை. இப்படி தெரியாமல் இருப்பதால், முற்றிய நிலையில் மூளைக்கட்டியை கண்டுபிடித்து, சில சமயங்களில் அதை சரிசெய்ய முடியாமல் உயிரை இழக்க நேரிடுகிறது. எனவே மூளைக்கட்டியால் ஏற்படும் மரணத்தைத் தவிர்க்க, அதன் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். கீழே மூளைக்கட்டி இருந்தால் வெளிப்படும் சில எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.
மூளைக்கட்டி என்றால் என்ன?
மூளைக்கட்டி என்பது மூளையில் உள்ள செல்களின் அசாதாரண வளர்ச்சியால் ஏற்படும் கட்டிகளை குறிக்கிறது. இந்த கட்டிகளானது தீங்கு விளைவிக்கும் புற்றுநோய் கட்டிகளாகவோ அல்லது தீங்கற்ற கட்டிகளாகவோ இருக்கலாம். இருப்பினும் மூளைப் பகுதியில் எந்த வடிவில் கட்டி இருந்தாலும், அது ஆபத்தானவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் மூளையைச் சுற்றியுள்ள மண்டை ஓடு மிகவும் கடினமானது மற்றும் இந்த பகுதி ஒரு தடைசெய்யப்பட்ட பகுதியும் கூட. இந்த பகுதியில் எந்த ஒரு செல்கள் அசாதாரண வளர்ச்சியை அடைந்தாலும், அது மூளையில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதுவும் மூளையில் கட்டிகள் வளரும் போது, அது மிகுந்த அழுத்தத்தைக் கொடுத்து, மூளையின் செயல்பாட்டை பாதிப்பதோடு, ஒரு கட்டத்தில் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
இந்த மூளைக்கட்டிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், எளிதில் அகற்றி உயிர்சேதத்தைத் தடுக்கலாம். மூளைக்கட்டிகளின் அறிகுறிகளானது கட்டி இருக்கும் இடம் மற்றும் அளவைப் பொறுத்தது. இப்போது மூளையில் கட்டிகள் இருந்தால் வெளிப்படும் சில ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.
தலைவலி
மூளையில் கட்டிகள் இருந்தால் வெளிப்படும் மிகவும் பொதுவான அறிகுறி தலைவலி. அதுவும் இந்த தலைவலியானது அடிக்கடி வருவதோடு, தீவிரமாகவும், தொடர்ச்சியாகவும் நீடித்திருக்கும். தற்போது தலைவலி ஒரு பொதுவான பிரச்சனையாக இருப்பதால், நிறைய பேர் அதை புறக்கணித்துவிடுகிறார்கள். ஆனால் மூளையில் கட்டி இருந்தால் சந்திக்கும் தலைவலியானது, காலையில் எழுந்ததும் மோசமாக இருக்கும் மற்றும் தூங்கும் போது ஏற்படும். இது தவிர இருமல், தும்மல் அல்லது உடற்பயிற்சியின் போது மோசமாக இருக்கும்.
பார்வையில் மாற்றம்
உங்களுக்கு திடீரென்று பார்வையில் மாற்றம் தெரிகிறதா? அதாவது உங்கள் பார்வை சற்று மங்கலாகவோ அல்லது உருவங்கள் இரண்டாகவோ தெரிவது போன்று உள்ளதா? அப்படியானால் உங்களுக்கு மூளையில் கட்டி இருக்க வாய்ப்புள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, சில மூளைக்கட்டிகள் பார்வை பிரச்சனைகளை அல்லது பார்வை இழப்பைக் கூட ஏற்படுத்தும். எனவே இந்த அறிகுறியிலும் கவனமாக இருங்கள்.
குமட்டல் மற்றும் வாந்தி
குமட்டல், வாந்தி போன்றவை பல காரணங்களால் ஒருவருக்கு ஏற்படலாம். இருப்பினும் அரிதான நேரங்களில், இவ்விரண்டும் மூளையில் உள்ள கட்டிகளின் அழுத்தத்தினால் கூட ஏற்படலாம். எனவே தலைவலியுடன், இவ்விரண்டு அறிகுறிகளையும் ஒருவர் அடிக்கடி சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
வலிப்பு
மூளையில் கட்டிகள் வளர்ந்தால், அது மூளையின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைத்து, வலிப்பு ஏற்பட வழிவகுக்கும். ஒருவருக்கு வலிப்பு தாக்கங்கள் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் என்றாலும், இளைஞர்களுக்கு இப்டி அடிக்கடி ஏற்பட்டால், நரம்பியல் சோதனையை மேற்கொள்வதோடு, மூளையையும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
பலவீனம் அல்லது உணர்வின்மை
மூளையில் வளரும் அசாதாரண கட்டிகளானது மோட்டால் நரம்பியல் பாதைகளை பாதிக்கின்றன. இதனால் உடலின் சில பகுதிகள் பலவீனமாவதோடு, சில சமயங்களில் உணர்ச்சியின்றியும் இருக்கக் செய்கின்றன. எனவே உங்களுக்கு அடிக்கடி உடலின் சில பகுதிகள் உணர்வின்மையுடன் இருப்பதை அனுபவித்தால், உடனே மருத்துவரிடம் இதுக்குறித்து தெரிவியுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications