சர்க்கரை நோய் இருக்கா? இரவு தூங்கும் முன் இந்த இலையை மென்று சாப்பிடுங்க.. கண்ட்ரோலா இருக்கும்...

Betel Leaf For High Blood Sugar: இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோய் என்பது இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் நிலையாகும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இரத்த சர்க்கரை அளவானது சட்டென்று அதிகரித்தால், அது உடலுறுப்புக்களின் செயல்பாட்டில் தீவிரமான சேதத்தை ஏற்படுத்திவிடும். நாம் உண்ணும் உணவுகளை உடைத்தெறியும் போது பெறப்படும் க்ளுக்கோஸானது கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் உதவியுடன் உடலில் ஆற்றலாக மாற்றப்படுகிறது.

Betel Leaf For High Blood Sugar: Chew This Leaf Before Bed To Control Diabetes In Tamil

என்ன தான் க்ளுக்கோஸ் ஆற்றலை வழங்கினாலும், அது உடலில் அளவாக இருக்க வேண்டும். அளவுக்க அதிகமானால், அது ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும். ஒருவரது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க காரணம் மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தான்.

இந்த வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும் ஒருசில உணவுகளை தினமும் உட்கொண்டு வந்தால், சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இயற்கை நமக்கு ஒரு அற்புதமான இலைக் கொடுத்துள்ளது. அந்த இலையை தினமும் இரவு தூங்கும் முன் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தலாம். அது வேறொன்றும் இல்லை, வெற்றிலை தான். வெற்றிலை செரிமானத்தை மட்டும் தான் சீராக்க உதவும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. வெற்றிலை ஏராளமான மாயங்களை உடலில் புரியக்கூடியவை. அதில் ஒன்று தான் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது.

பிரபலமான ஆயுர்வேத மூலிகை

வெற்றிலை மிகவும் பிரபலமான ஒரு ஆயுர்வேத மூலிகை. இது பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்திய ஆய்வு ஒன்றில், வெற்றிலையை இரவு தூங்கும் முன் மென்று சாப்பிடும் போது, அது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவி புரிந்து, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி சீராக பராமரிக்க உதவுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்சுலின் உணர்திறன் என்றால் என்ன? அது ஏன் முக்கியம்?

இன்சுலின் என்பது க்ளுக்கோஸை ஆற்றலாக மாற்ற உதவும் ஒரு அத்தியாவசியமான ஹார்மோன். இந்த இன்சுலின் ஹார்மோன் போதுமான அளவில் இல்லாவிட்டால், உடலில் உள்ள செல்கள் இன்சுலினுக்கு பதிலளிக்காமல், இரத்த சர்க்கரை அளவை உயத்தும். இந்த இன்சுலின் கணையத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் நாம் உண்ணும் உணவுகள், உடற்பயிற்சியின்மை மற்றும் பிற விஷயங்களால் இதன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

இம்மாதிரியான சூழ்நிலையில், க்ளுக்கோஸை ஆற்றலாக மாற்றுவதற்கும், சர்க்கரை நோயின் அறிகுறிகள் மோசமடையாமல் இருக்கவும் உதவும் விஷயங்களை மேற்கொள்ள வேண்டியது முக்கியம்.

வெற்றிலை எப்படி இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது?

ஆய்வுகளின் படி, வெற்றிலையில் பாலிஃபீனால்கள், அல்கலாய்டுகள் மற்றம் ப்ளேவோனாய்டுகள் போன்ற ஏராளமான கலவைகள் உள்ளன. இவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருப்பது தெரிய வந்துள்ளன.

மேலும் 2014-ல் ஜர்னல் டயபெட்டீஸ் மற்றும் மெட்டபாலிக் ரிசர்ச் ரிவ்யூ என்னும் இதழில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், வெற்றிலையின் சாறு டைப்-1 சர்க்கரை நோயாளிகளின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த முடியு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த வெற்றிலையை எப்படி பயன்படுத்துவது?

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த சிறந்த வழி வெற்றிலையை இரவு தூங்கும் முன் வாயில் போட்டு மென்று சாப்பிடுவது தான். இப்படி இந்த இலையை மெதுவாக மென்று சாப்பிடும் போது, அதில் உள்ள கலவைகள் மெதுவாக இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு, இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துகின்றன.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, October 18, 2023, 10:45 [IST]
Desktop Bottom Promotion