சைனஸ் பிரச்சினை இருக்கா? அப்ப இந்த உணவுகளை எடுத்தா பிரச்சினை உடனே நீங்கிடும்...

Sinus In Tamil: சுவாச பிரச்சினை என்பது அனைவரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனையாக இருந்து வருகிறது. அதிலும் சைனஸ் பிரச்சினை இருப்பவர்களுக்கு அடிக்கடி மூக்கு ஒழுகுதல், தும்மல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்த சைனஸ் பிரச்சினைக்கு நீங்கள் மருத்துவர் கூறும் மருந்துகளை எடுத்துக் கொண்டால் கூட இதைத் தடுக்க சில வகை உணவுகள் நமக்கு உதவுகின்றன.நாம் எடுத்துக் கொள்ளும் சில வகை உணவுகள் நம் சைனஸ் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது.

Best Foods For Sinus Health In Tamil

எனவே ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் எடுத்துக் கொண்டு வரும் போது சைனஸ் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இந்த உணவுகள் நம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரித்து சைனஸ் பிரச்சினையை தீர்க்க உதவுகிறது. அந்த வகையில் சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிந்து கொள்வோம்.

நிறைய தண்ணீர் குடிக்கவும்

நல்ல சுத்தமான வடிகட்டிய தண்ணீரை குடிப்பது சைனஸ் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது. தண்ணீர் குடிப்பது பாக்டீரியா தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது. எனவே தண்ணீரை சுட வைத்து ஆற வைத்து குடித்து வரலாம். இது சுவாச பாதையில் தொற்று நோய்களின் வளர்ச்சியை கட்டுபடுத்த உதவுகிறது.

அன்னாசிபழம்

அன்னாசிபழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகிறது. இது மென்மையான சளி சவ்வுகளில் ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது. அன்னாசிபழத்தில் உள்ள நொதிகள் சைனஸால் ஏற்படும் அழற்சியை போக்கி வீக்கத்தைக் குறைக்கிறது. எனவே சுவாச பாதை அழற்சி இருப்பவர்கள் அன்னாசிபழத்தை எடுத்துக் கொண்டு வரலாம்.

மிளகு

மிளகில் உள்ள மருத்துவ குணங்கள் சைனஸ் பிரச்சினையை தடுக்க உதவுகிறது. நல்ல காரமான மிளகை எடுத்துக் கொள்ளும் போது உடம்பு சூடாகி சளியை இளகச் செய்து மூக்கில் இருந்து வெளியேற்றும். இதற்கு முக்கிய காரணம் மிளகில் உள்ள கேப்சைசின் உடம்பிற்கு சூட்டை தருகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது, வலியை குறைக்கிறது. வீக்கத்தையும் குறைக்கிறது.

குதிரைவாலி

குதிரைவாலியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, ஃபோலேட், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் மற்றும் துத்தநாகம், மாங்கனீசு மற்றும் என்சைம்கள் போன்றவை நிறைய காணப்படுகிறது. இது வீக்கத்தைக் குறைத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. இதில் ஆன்டி பயாடிக் பண்புகள் உள்ளன.

பூண்டு

பூண்டில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சுவாச தொற்றுக்கு காரணமான வைரஸை போக்க உதவுகிறது. பூண்டு இதய நோய்களை எதிர்த்து போராடவும், சல தோஷத்திற்கு எதிராக செயல்படவும் உதவுகிறது. எனவே பூண்டை உணவில் சேர்த்து வரலாம்.

புரோபயாடிக் உணவுகள்

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க குடல் ஆரோக்கியம் மிக முக்கியம். எனவே குடலில் நட்பு பாக்டீரியாக்களை அதிகரிக்க புரோபயாடிக் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். தயிர், பழைய சாதம், சீஸ் போன்ற புரோபயாடிக் உணவுகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மன நிலையை மேம்படுத்தவும் மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த உணவுகள்

நம் உடலில் ஏற்படும் ஆக்ஸினேற்ற சேதமும் சைனஸ் பிரச்சினைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. ஆன்டி ஆக்ஸிடன்கள் சளி சவ்வுகளை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.சிட்ரஸ், கிவி, கீரை, பெர்ரி, பூசணி, இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் பழங்கள், காய்கறிகள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சி

இஞ்சியில் ஆன்டி ஹிஸ்டமைன்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. இது உடல் முழுவதும் ஏற்படும் அழற்சி மற்றும் சுவாச தொற்றுக்களை போக்க உதவுகிறது. ஒவ்வாமை, சைனஸ், சளித் தொல்லை, குமட்டல், வாந்தி மற்றும் வலி இவற்றை போக்க உதவுகிறது. இஞ்சி சீரணத்திற்கும் உதவுகிறது.

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் சுவாச பாதை தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது. இது காய்ச்சல், மனச்சோர்வு மற்றும் சலதோஷம் போன்றவற்றிற்கு எதிராக செயல்படுகிறது. சிறுதளவு வெந்நீருடன் மஞ்சள் தூள் கலந்து தொண்டையில் படும் படி கொப்பளிக்க வேண்டும். இதனால் சைனஸ் பிரச்சினை விரைவில் குணமாகும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சைனஸ் பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கிறது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை கொண்டு ஆயில் புல்லிங் செய்து வரலாம். இது பருவ கால ஒவ்வாமை மற்றும் நோய்த்தொற்றுகளை போக்க உதவுகிறது.

சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும், மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். நல்ல வெதுவெதுப்பாக மூலிகை டீ குடித்து வரலாம். அத்தியாவசிய எண்ணெய்யை கொண்டு ஆவி பிடித்து வரலாம். ஆவி பிடிப்பது மூக்கடைப்பு மற்றும் தலைவலி பிரச்சினைக்கு தீர்வளிக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, April 25, 2023, 19:20 [IST]
Desktop Bottom Promotion