Latest Updates
-
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது..
பவன முக்தாசனம் செய்வது எப்படி? அதன் நன்மைகள் என்ன? யாரெல்லாம் இதை செய்யக்கூடாது?
Pavana Mukthasana Benefits: மனித ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகாசனங்கள் பெரிதும் உதவி புரிகின்றன. யோகாசனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான நன்மைகள் வழங்கக்கூடியவை. அதில் இன்று நாம் பார்க்கவிருப்பது பவன முக்தாசனம். சமஸ்கிருதத்தில் பவன என்றால் காற்று, முக்த என்றால் விடுவிப்பது, ஆசனம் என்றால் நிலை. எனவே பவன முக்தாசனம் என்பது காற்றை விடுவிக்கும் நிலையாகும்.
பவன முக்தாசனமானது உடலின் நடுப்பகுதியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் அற்புதமான மற்றும் எளிய ஆசனமாகும். இந்த ஆசனத்தில் இரண்டு வகைக்கள் உள்ளன. அதில் ஒன்று இரண்டு கால்களையும் மடித்து செய்வது மற்றொன்று ஒரு காலை மட்டும் மடித்து செய்வது.

இப்போது இவற்றில் இரண்டு கால்களையும் மடித்து செய்யும் பவன முக்தாசனத்தை எப்படி செய்வது, அந்த ஆசனத்தை செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் மற்றும் யாரெல்லம் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது என்பனவற்றைக் காண்போம்.
பவன முக்தாசனம் செய்முறை
* முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் இரண்டு கால்களையும் மடித்து, முழங்கால்கள் மார்பு பகுதியை தொடும் வகையில் உடலை ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு இரண்டு கால்களையும் கைகளால் இறுக்கமாக கட்டிப்பிடிக்க வேண்டும்.
* பிறகு மூச்சை வெளிவிட்டுக் கொண்டே தலையை மேலே உயர்த்தி, தாடைப்பகுதியால் முழங்கால்களைத் தொட வேண்டும்.
* இந்நிலையில் 5 மூச்சுகள் விட்ட பின், பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
* சிறப்பான பலன்களைப் பெற, இந்த ஆசனத்தை குறைந்தது 10 முறை செய்ய வேண்டும்.
குறிப்பு - இந்த ஆசனத்தை முதன்முதலாக செய்பவர்கள், ஆரம்பத்தில் கால்கள், தண்டுவடம், தொடை மற்றும் கைகளில் வலியை சந்திக்கக்கூடும். ஆனால் தினமும் செய்து வந்தால், இந்த ஆசனம் எளிமையாக இருக்கும்.
பவன முக்தாசனத்தின் நன்மைகள்
* முதுகு மற்றும் தொடை தசைகள் வலுபெறும்.
* செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
* உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
* தொப்பை குறையும்.
* கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதி வலுபெறும்.
* பாலியல் ஆரோக்கியம் மேம்படும்.
* மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
* பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் நீங்கும்.
* குடலிறக்கம் வராமல் தடுக்கும்.
* உள்ளுறுப்புகள் வலுபெறும்.
பவன முக்தாசனம் செய்புவர்கள் நினைவில் கொள்ள வேண்டியவைகள்
* பவன முக்தாசனத்தை உங்கள் திறனுக்கு ஏற்ப செய்ய வேண்டும்.
* கழுத்துப் பகுதியில் ஏதேனும் சிரமத்தை உணர்ந்தால், தாடையால் முழங்காலைத் தொடாமல் செய்யுங்கள்.
* வயிறு நிறைய சாப்பிட்டதும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
* அடிவயிற்றில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்திருந்தால், இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.
* பவன முக்தாசனத்தை காலையில் எழுந்ததும் செய்வது இரட்டிப்பு பலனைத் தரும்.
யாரெல்லாம் பவன முக்தாசனத்தை செய்யக்கூடாது?
* உயர் இரத்த அழுத்தம்
* இதய பிரச்சனைகள்
* ஹைப்பர் அசிடிட்டி
* ஹெர்னியா
* ஸ்லிப் டிஸ்க்
* டெஸ்டிகுலார் கோளாறு
* மாதவிடாய் காலம்
* கர்ப்ப காலம்
* கழுத்து மற்றும் முதுகு பிரச்சனைகளைக் கொண்டவர்கள் பவனமுக்தாசனத்தை செய்யக்கூடாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications