Latest Updates
-
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது! -
Navratri 2026: நவராத்திரியில் துர்கா தேவியை கனவில் கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
இதய நோய் ஏற்படாமல் இருக்கவும் உங்க உடல் எடையை வேகமாக குறைக்கவும் இந்த ஒன்ன சாப்பிட்டா போதுமாம்!
நீங்கள் இளநீர் பிரியர்களா? இளநீரை குடித்துவிட்டு வழுக்கை தேங்காயை சாப்பிட உங்களுக்கு அதிக ஆர்வம் உள்ளதா? அப்படியென்றால், இந்த தகவல் உங்களுக்கானது. ஆம் வெயில் காலத்தில் நாம் தேடிதேடிப்போயி சாப்பிடும் ஒரு உணவுகளில் வழுக்கை தேங்காயும் ஒன்று.
தேங்காய் ஓட்டுக்குள் இருக்கும் இனிப்பான வெண்மையான கொழகொழப்பான சதை மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது, இளநீர் பாயாசம், இளநீர் ஜூஸ், இளநீர் ஐஸ்கீரிம் மற்றும் வழுக்கை தேங்காய் இனிப்புகள் என பல உணவுகளாக சமைக்கப்பட்டு அனைவராலும் ருசிக்கப்படுகிறது.

சுவையான ருசி மட்டுமல்லாது, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் இது கொண்டுள்ளது. இளநீர் தேங்காய்களின் சதையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வழுக்கை தேங்காயில் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் (MCTகள்), லாரிக் அமிலம் மற்றும் பிற நன்மை பயக்கும் கலவைகள் நிறைந்துள்ளன.
உங்க உடல் எடையை குறைப்பது முதல் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது வரை என்னென்ன நன்மைகளை வழுக்கை தேங்காய் உங்களுக்கு வழங்குகிறது என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமாக இருந்தாலும், வழுக்கை தேங்காய் இதய ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இதய நோய்க்கான ஆபத்து காரணிகளை அதிகரிக்கின்றன.
வழுக்கை தேங்காயில் உள்ள நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள்(எம்சிடி) கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகின்றன. கூடுதலாக, வழுக்கை தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் இரத்த அழுத்த அளவை மேம்படுத்துவதாகவும், இருதய நோய் அபாயத்தைக் குறைப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எடை இழப்புக்கு நல்லது
வழுக்கை தேங்காயிலுள்ள எம்சிடிகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும், அவை ஆற்றல் செலவை அதிகரிக்கலாம் மற்றும் பசி உணர்வை குறைக்கலாம். மற்ற வகை கொழுப்புகளுடன் ஒப்பிடும்போது வழுக்கை தேங்காயை உணவில் சேர்ப்பது விரைவாக உடல் எடையை குறைக்கவும் மற்றும் இடுப்பு சுற்றளவு குறைவதற்கும் வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கும்
100 கிராம் புதிய வழுக்கை தேங்காயை தினமும் 80 நபர்களுக்கு கொடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. தினமும் வழுக்கை தேங்காயை சாப்பிட்ட இந்த 80 நபர்களுக்கும் இரத்த குளுக்கோஸ் அளவு குறைவதாக காட்டியது. இதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோயைத் தடுக்க வழுக்கை தேங்காய் உதவும் என்று ஜர்னல் ஆஃப் காம்ப்ளிமெண்டரி அண்ட் இன்டகிரேடிவ் மெடிசின் இதழில் வெளிவந்த ஒரு ஆய்வில் கூறப்பட்டிருந்தது.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது
வழுக்கை தேங்காயில் உணவு நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்வது மேம்பட்ட செரிமானத்தை ஊக்குவிக்க உதவும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். இதிலுள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது. கூடுதலாக, தேங்காய் மலாய் குடல் பாக்டீரியாவில் நேர்மறையான விளைவைக் கொண்ட கலவைகளைக் கொண்டுள்ளது. இது ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை ஊக்குவிக்கிறது.
கர்ப்பிணிகளுக்கு நன்மை பயக்கும்
குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு உதவும் வழுக்கை தேங்காயின் ஊட்டச்சத்துக் கலவை கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும். குமட்டல் மற்றும் காலை சோம்பலை குறைக்க உதவும் வழுக்கை தேங்காய், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
நீங்கள் வழுக்கை தேங்கயை உங்கள் சமையலில் சேர்த்தாலும் அல்லது சருமத்தில் சிகிச்சையாகப் பயன்படுத்தினாலும், தேங்காய் மலாய் என்பது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான இயற்கையான வழியாகும். மேலும், கோடை காலத்தில் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் இது உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



