Latest Updates
-
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
ஆண்களுக்கு பல நன்மைகளை வழங்கும் பத்த கோணாசனம் - எப்படி செய்வது? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கலை தான் யோகா கலை. யோகா என்ற சொல்லுக்கு இணைத்தல் என்று பொருள். யோகா பயிற்சியை தினமும் செய்து வந்தால், அது தசைகள், மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடலின் நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
யோகாவில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் பத்த கோணாசனம். இதில் பத்த என்றால் பிணைக்கப்பட்ட என்றும், கோண என்றால் கோணம் என்றும் பொருள். இந்த ஆசனத்தில் ஒருவர் பட்டாம்பூச்சி சிறகுகளை விரித்து பறப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். இந்த பத்த கோணாசன பயிற்சியை ஒருவர் செய்து வந்தால், குறிப்பாக ஆண்கள் செய்து வந்தால், அது பலவிதமான பிரச்சனைகளைத் தடுப்பதோடு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இப்போது பத்த கோணாசனத்தை செய்வதால் பெறும் நன்மைகள் என்ன மற்றும் அந்த பத்த கோணாசனத்தை எப்படி செய்வது என்பதைக் காண்போம்.
உடல் சோர்வு நீங்கும்
பத்த கோணாசன பயிற்சியை தினமும் செய்தால், அது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடல் சோர்வு மற்றும் களைப்பைக் குறைக்க உதவி புரிகிறது. குறிப்பாக நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பவர்கள் அல்லது நீண்ட தூரம் நடப்பவர்கள், இந்த யோகாவை செய்து வந்தால், உடலின் ஆற்றல் மேம்படும்.
புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும்
பத்த கோணாசன பயிற்சி புரோஸ்டேட் சுரப்பிக்கு நன்மை அளிக்கும் பயிற்சியாகும். எனவே ஆண்கள் இந்த யோகாவை தினமும் செய்து வந்தால், புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்பட்டு, புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கும். மேலும் இந்த ஆசனத்தை செய்வதன் மூலும், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.
முதுகு வலி குறையும்
பத்த கோணாசனத்தை செய்வது, முதுகு வலி தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் இந்த பயிற்சியில் தொடை எலும்புகளில் கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்காமல், கீழ் முதுகு தசைகள் ஈடுபடுத்தப்படுகிறது. இந்த பயிற்சியின் போது குதிகால் இடுப்பு பகுதிக்கு அருகில் இருப்பதால், கீழே முதுகு பகுதியில் உள்ள தசைகளில் இருக்கும் அழுத்தம் விடுவிக்கப்பட்டு, முதுகு வலியில் இருந்து நிவாரணத்தை அளிக்கின்றன.
மன அழுத்தம் மற்றும் தலைவலி குறையும்
பத்த கோணாசன பயிற்சியானது கழுத்து, முகுது மற்றும் தலையில் உள்ள டென்சனை விடுவிக்கிறது. மேலும் இந்த பயிற்சியின் போது ஆக்ஸிஜன் மூளையை எளிதில் சென்றடைவதால், கடுமையான தலைவலியைக் குறைக்க உதவுகிறது. இந்த யோகாசனத்தின் போது வழக்கமாக சுவாசிப்பதால், இது மன அழுத்தம் மற்றும் கவலையை விடுவிக்கிறது.
விறைப்புத்தன்மை பிரச்சனையை போக்கும்
பெரும்பாலான ஆண்கள் தற்போது விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்கிறார்கள். இந்த விறைப்புத்தன்மை பிரச்சனையை போக்க உதவும் ஒரு யோகாசனம் என்றால், அது பத்த கோணாசனம் தான். ஏனெனில் இந்த ஆசனத்தின் போது இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் விளைவாக விறைப்புத்தன்மை பிரச்சனை தடுக்கப்படும்.
உள் தொடையை வலுவாக்கும்
ஆண்கள் நீண்ட நேரம் பைக் ஓட்டுவதால், பல ஆண்கள் தொடை பகுதிகளில் கடுமையான வலியை சந்திப்பதுண்டு. இந்நிலையில் பத்த கோணாசன பயிற்சியை ஆண்கள் செய்யும் போது, அது உள் தொடை, தசைகள், மூட்டுகள் மற்றும் இணைப்புத் திசுக்களை பயிற்சியில் ஈடுபடுத்தி, வலுவாக்குகின்றன.
பத்த கோணாசனம் செய்முறை:
* முதலில் தரையில் கால்களை நீட்டி நேராக அமர்ந்து கொள்ள வேண்டும்.
* பின் இரண்டு கால்களையும் மடக்கி பாதங்களை ஒன்றாக சேர்த்து வைக்கவும். இரண்டு கால் விரல்களையும் கைகளால் இணைக்க வேண்டும். கால் முட்டி வெளிப்புறமாக மடங்கி இருக்க வேண்டும்.
* பின்பு மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும்.
* இந்த நிலையில் 20 நொடிகளுக்கு இருக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications