Latest Updates
-
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை
தொப்பையை குறைக்க உதவும் பாலாசனம்: செய்வது எப்படி? அதன் நன்மைகள் என்ன? யாரெல்லாம் செய்யக்கூடாது?
Balasana Benefits In Tamil: யோகாசனங்கள் உடலை வலுவாகவும், மனதை அமைதியாகவும் வைத்துக் கொள்ள பெரிதுவும் உதவுகின்றன. அந்த வகையில் தினம் ஒரு யோகாசனத்தில் இன்று நாம் காணவிருப்பது பாலாசனம் குறித்து தான். இந்த ஆசனமானது குழந்தை போன்ற நிலையில் இருப்பதால், இது பாலாசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் செய்வது மிகவும் சுலபம்.
பாலாசனத்தில் கணுக்கால், தொடை, முழங்கால்கள் மற்றும் இடுப்பு போன்ற பகுதிகள் ஸ்ட்ரெட்ச் ஆகின்றன மற்றும் இது உடலுக்கு ஓய்வை அளிக்கும் வகையிலான ஆசனம். பாலாசனமானது முதுகு, தோள்பட்டை மற்றும் கழுத்து போன்ற பகுதிகளை பலப்படுத்துகிறது.

முக்கியமாக இந்த ஆசனத்தின் போது வயிற்றுப்பகுதி அழுத்தப்படுவதால், வயிற்றுப் பகுதியில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படுகின்றன. இந்த பாலாசனத்தை ஒருவர் தினமும் செய்து வந்தால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
இப்போது பாலாசனம் செய்வது எப்படி, பாலாசனத்தை செய்வதால் பெறும் நன்மைகள் என்ன மற்றும் யாரெல்லாம் பாலாசனத்தை செய்யக்கூடாது என்பன போன்றவற்றை இக்கட்டுரையில் காண்போம்.
பாலாசனம் செய்முறை
* முதலில் தரையில் இரண்டு கால்களையும் மடக்கி பிட்டத்தின் மீது உட்கார வேண்டும். அப்போது கால் பெருவிரல்கள் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று இணைந்து இருக்க வேண்டும்.
* பின் மூச்சை உள்ளிழுத்தவாறு இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்க வேண்டும்.
* பின்பு மூச்சை வெளிவிட்டுக் கொண்டே முன்னோக்கி குனிய வேண்டும். அப்போது நெற்றியானது தரையைத் தொட வேண்டும். முக்கியமாக பிட்டத்தை தூக்கக் கூடாது.
* இந்நிலையில் சாதாரணமாக சுவாசித்துக் கொண்டே 2-3 நிமிடங்கள் இருக்க வேண்டும்.
* பின் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
* இப்படி 5-10 முறை செய்யலாம்.
பாலாசனத்தின் நன்மைகள்
பாலாசனத்தை ஒருவர் தினமும் செய்து வந்தால் பின்வரும் நன்மைகளைப் பெறலாம். அவையாவன:
* பாலாசனமானது ஒட்டுமொத்த உடலிலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
* அடிவயிறு மற்றும் மார்பு பகுதியை ரிவாக்ஸ் அடையச் செய்கிறது.
* நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க உதவுகிறது.
* முதுகு வலியைக் குறைக்கிறது.
* தலைச்சுற்றல் அல்லது உடல் சோர்வை போக்குகிறது.
* செரிமானத்தை மேம்படுத்துகிறது.
* மனம் மற்றும் உடலை அமைதியடையச் செய்கிறது.
* மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கிறது.
* கால் முட்டியின் தசைநார்களை வலுவாக்குகிறது.
* தூக்கமின்மையை சரிசெய்கிறது.
* மலச்சிக்கலைப் போக்குகிறது.
* தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
யாரெல்லாம் பாலாசனத்தை செய்யக்கூடாது?
என்ன தான் பாலாசனம் செய்வதற்கு ஒரு சுலபமான ஆசனமாக தெரிந்தாலும், இந்த ஆசனத்தை செய்யும் போதும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் பாலாசனத்தை செய்யக்கூடாது.
* கடுமையான மூட்டு அல்லது முதுகு வலியைக் கொண்டவர்கள் பாலாசனம் செய்யக்கூடாது.
* பாலாசனத்தை வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும்.
* இரத்த அழுத்தம் அதிகமாகவோ, குறைவாகவோ உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
* வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இந்த பாலாசனத்தை செய்யக்கூடாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications