Latest Updates
-
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
உங்க கல்லீரலில் பிரச்சனை இருக்கா? கொழுப்பு கல்லீரல் நோய் வராமல் தடுக்கணுமா? அப்ப இந்த டீ-யை குடிங்க!
Fatty Liver In Tamil: வளர்ந்து வரும் நவீன உலகிற்கு ஏற்ப பல்வேறு நோய்களும் அதிகமாக பரவி வருகின்றன. இந்நிலையில், மக்கள் அனைவரும் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிக அவசியம். உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் கொழுப்பு கல்லீரல் நோயை வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா?
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், மோசமான தூக்க முறைகள் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறை ஆகியவை உங்கள் ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கின்றன. இந்த நேரத்தில் உங்கள் கல்லீரல் அமைதியாக அனைத்து வலிகளையும் எடுத்துக்கொள்கிறது. நீங்கள் சாப்பிடும் ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் மது குடிப்பது உண்மையில் உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

இது கொழுப்பு கல்லீரல் போன்ற ஆபத்தான பிரச்சனைகளை உங்களுக்கு ஏற்படுத்தலாம். மேலும், நீண்ட காலத்திற்கு கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் ஈரல் அழற்சிக்கு வழிவகுக்கும். கல்லீரலில் ஏற்படும் பாதிப்பை இயற்கையாகவே சரிசெய்து குணப்படுத்தக்கூடிய சில ரகசிய வழிகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. அவை என்னவென்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
கொழுப்பு கல்லீரல் நோய் என்றால் என்ன?
கொழுப்பு கல்லீரல் நோய் என்பது, கல்லீரலில் அதிகப்படியான கொழுப்புகள் சேரும் சுகாதார நிலையை குறிக்கிறது. இது கல்லீரலின் செயல்பாட்டை பாதித்து, படிப்படியாக அதை ஃபைப்ராய்டு கல்லீரலாக மாற்றிவிடும். கொழுப்பு கல்லீரல் நோய் நாள்பட்ட ஆபத்தான சுகாதார நிலைகளையும் ஏற்படுத்தலாம்.
பெரும்பாலும் ஆல்கஹால் அதிகமாக உட்கொள்வதால் அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக கல்லீரலின் மேற்பரப்பில் கொழுப்பு படிதல் ஏற்படுகிறது. இந்த நிலை ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்(NAFLD- Non-alcoholic fatty liver disease) என்று அழைக்கப்படுகிறது.
கொழுப்பு கல்லீரல் நோய் அமைதியாக தோன்றும் நோயாகும். ஏனெனில், இது பல அறிகுறிகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், நீண்ட காலத்திற்கு இது கல்லீரல் ஆரோக்கியத்தை பலவீனப்படுத்துகிறது. வீக்கம், எடை அதிகரிப்பு மற்றும் செரிமான கோளாறுகள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். மேலும், இது நீரிழிவு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றிற்கும் வழிவகுக்கும்.
இல்லினாய்ஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, இந்த நோயை சரிசெய்வதற்கான வழி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதே ஆகும் எனத் தெரிவிக்கிறது. உணவு கட்டுப்பாடுகள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுக்கு மாறுதல் ஆகியவை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
கொழுப்பு கல்லீரல் நோய் உங்களுக்கு ஏற்படாமல் இருக்க, சர்க்கரை உணவுகள், ஜங்க் புட், எண்ணெய் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. அத்துடன் ஓர் எளிய ஆயுர்வேத தீர்வும் உள்ளது. இது இயற்கையாகவே கொழுப்பு கல்லீரல் நிலையை குணப்படுத்தும் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
ஆயுர்வேத தேநீர்
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் தேநீரை தயாரிக்க, உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களே போதும். இந்த இயற்கை பொருட்கள் ஒவ்வொன்றும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கின்றன.
தேவையான பொருட்கள்:
- 1/2 தேக்கரண்டி இஞ்சி தூள்
- 1/2 தேக்கரண்டி வெந்தயம்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள்
- 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
- 2-3 புதினா இலைகள்
செய்முறை:
ஒரு பாத்திரத்தை எடுத்து 1 கிளாஸ் தண்ணீர் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதில், மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து, நன்றாக கொதிக்க வைக்கவும். கலவையை பாதியாக குறைந்து வந்ததும், பானத்தை வடிகட்ட வேண்டும். இந்த தேநீரை காலை அல்லது மாலையில் நீங்கள் குடிக்கலாம்.
கொழுப்பு கல்லீரலை குணப்படுத்த இந்த பானம் எவ்வாறு உதவுகிறது?
இந்த மூலிகை பொருட்களின் கலவை கல்லீரலில் கொழுப்பு திரட்சியைக் குறைப்பதில் உதவுவது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் குணமடையவும், நிலைமையை மாற்றவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள இஞ்சியில் ஜிஞ்சரால் என்னும் கலவை இருப்பதால் இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது செல்லுலார் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் கல்லீரலைப் பாதுகாக்க உதவுகிறது.
வெந்தய விதைகளை பானத்தில் சேர்ப்பதால், கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாலிஃபீனாலிக் கலவைகள் சேர்க்கப்படுகின்றன. கடைசியாக, மஞ்சளில் உள்ள என்சைம்கள் கல்லீரலின் மேற்பரப்பில் இருக்கும் கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் வீக்கத்தையும் குணப்படுத்துகிறது. உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த தேநீரை நீங்கள் தொடர்ந்து குடிக்கலாம்.
இந்த தேநீரை எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறுவதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். மேலும், உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை அல்லது நாள்பட்ட சுகாதார நிலை இருந்தால், மருத்துவர் பரிந்துரையின் பேரில் மட்டுமே இந்த தேநீரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













