Latest Updates
-
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
முதுகு வலியால் கஷ்டப்படுறீங்களா? அப்ப இந்த ஆசனத்தை தினமும் காலையில செய்யுங்க...
Ardha Pawanmuktasana Benefits In Tamil: தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக முதுகு வலியால் தினந்தோறும் ஏராளமானோர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். நாம் தினமும் ஒரு யோகாசனம் குறித்து காண்கிறோம். அந்த வகையில் இன்று நாம் காணவிருப்பது முதுகு வலியைக் குறைக்க உதவும் அர்த்தபவன முக்தாசனம் குறித்து தான்.
யோகாசனங்கள் முதுகு வலியில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதுவும் அர்த்தபவன முக்தாசனம் முதுகு வலியைக் குறைப்பதோடு, வயிறு தொடர்பான பல பிரச்சனைகளைக் குறைக்கவும் உதவும். உங்களுக்கு அர்த்தபவன முக்தாசனம் எப்படி செய்வது, அதன் நன்மைகள் என்ன, யாரெல்லாம் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது என்பனவற்றை குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

அர்த்தபவன முக்தாசனம் செய்யும் முறை
* முதலில் தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
* இரண்டு கைகளையும் உடலை ஒட்டியவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு வலது முழங்காலை மடித்து, கைகளால் கோர்த்து இழுத்துப் பிடிக்க வேண்டும். பின் தலையை முன்னோக்கி உயர்த்தி தாடையால் முழங்காலை தொடும் நிலையில் இருக்க வேண்டும்.
* காலை மடக்கி வயிற்றோடு வைக்கும் போது மூச்சை வெளியேற்ற வேண்டும். இந்நிலையில் இடது காலானது தரையில் நீட்டியபடி இருக்க வேண்டும். இப்படி 30 நொடிகள் அல்லது ஒரு நிமிடம் இருக்க வேண்டும்.
* பின் பழைய நிலைக்கு திரும்பி, இடது காலில் இதே முறையை செய்ய வேண்டும்.
* இப்படி ஒவ்வொரு காலில் செய்யும் போதும் ஒரு நிமிடம் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை 3-4 முறை செய்ய வேண்டும்.
அர்த்தபவன முக்தாசனம் நன்மைகள்
அர்த்தபவன முக்தாசனத்தை தினமும் செய்து வந்தால், நாம் தினந்தோறும் சந்திக்கும் ஒருசில பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அவை:
* இந்த ஆசனமானது கீழே முதுகு பகுதிக்கு மசாஜ் செய்வது போன்ற உணர்வை அளித்து, கீழ் முதுகு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
* செரிமான பிரச்சனைகளை சந்திப்பவர்கள், இந்த ஆசனத்தை செய்யும் போது வயிற்றில் உள்ள அதிகப்படியான வாயு வெளியேற்றப்படும். மேலும் அடிவயிற்றில் அழுத்தம் கொடுக்கப்படுவதால் மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்தும் விடுபட உதவும்.
* பெண்கள் இந்த ஆசனத்தை செய்யும் போது, அது இடுப்பு தசைகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளுக்கு மசாஜ் அளிப்பது போன்று இருக்கும் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளைக் குறைக்கும்.
* முக்கியமாக இந்த ஆசனத்தை தினமும் செய்யும் போது, அடிவயிற்றுப் பகுதி, தொடை மற்றும் பிட்டப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் குறையும்.
யாரெல்லாம் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது?
* கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
* பைல்ஸ் அல்லது ஹெர்னியா பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், இந்த ஆசனத்தை யோகா நிபுணரின் மேற்பார்வையில் மட்டுமே செய்ய வேண்டும்.
* முக்கியமாக இந்த ஆசனத்தை சமீபத்தில் அடிவயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்யக்கூடாது. ஏனெனில் இந்த ஆசனமானது அடிவயிற்றுப் பகுதியில் அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
