Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
உடம்புல இரத்தம் கம்மியா இருந்தா இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்ல நிலைமை மோசமாயிடும்...
Anemia Diet In Tamil: தற்போது இந்தியாவில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இரத்த சோகை என்பது உடலில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையாகும். சுருக்கமாக கூற வேண்டுமானால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையாகும். உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால், அது மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனத்தை உணர வைக்கும்.
ஒருவருக்கு இரத்த சோகை பல காரணங்களால் ஏற்படலாம். அதில் மிகவும் பொதுவான காரணம் போதுமான இரும்புச்சத்து இல்லாதது. உடலில் ஹீமோகுளோபினை தயாரிக்க இரும்புச்சத்து அவசியமாகும். ஹீமோகுளோபின் என்பது இரும்புச்சத்து நிறைந்த புரோட்டீன் ஆகும். இது தான் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. மேலும் இது நுரையீரலில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது.

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்புச்சத்து மற்றம் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் நாம் சாப்பிடும் சில உணவுகள் இந்த சத்துக்களை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்துகின்றன. உங்களுக்கு இரத்த சோகை இருந்து, அதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தால், ஒருசில உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது நிலைமையை மோசமாக்கும். இப்போது அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.
கால்சியம் நிறைந்த உணவுகள்
இரத்த சோகை ஏற்பட முக்கிய காரணம் இரும்புச்சத்து குறைபாடு. ஆனால் இந்த வகையான இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் கால்சியம் இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும். இதன் விளைவாக இரத்த சோகையானது மோசமாகும். எனவே பால் மற்றும் சீஸ், யோகர்ட் போன்ற பால் பொருட்கள், நட்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
டானின்கள் நிறைந்த உணவுகள்
ப்ளாக் டீ, க்ரீன் டீ, காபி போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் பானங்கள் தான். இருப்பினும் இரும்புச்சத்து குறைபாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வகையான பானங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் டானின்கள் உள்ளன. இவை இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும். இந்த டானின்களானது திராட்சை, சோளம் போன்றவற்றிலும் உள்ளன.
க்ளுட்டன் உணவுகள்
இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் க்ளுட்டன் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். க்ளுட்டனானது சிலரது குடல் சுவற்றை சேதப்படுத்தி, இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலத்தை உறிஞ்சுவதில் தடையை ஏற்படுத்தும். எனவே பாஸ்தா, கோதுமை உணவுகள், பார்லி, ஓட்ஸ் போன்ற க்ளுட்டன் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
பைட்டேட் உணவுகள்
பைட்டேட்டுகள் பொதுவாக செரிமான மண்டலத்தில் இரும்புச்சத்துடன் பிணைந்து, இரும்புச்சத்து உறிஞ்சுவதைத் தடுக்கிறது. எனவே இரும்புச்சத்து குறைபாட்டைக் கொண்டவர்கள் பைட்டேட் அல்லது பைட்டிக் அமிலம் நிறைந்த பருப்பு வகைகள், கைக்குத்தல் அரிசி, முழு தானியங்கள், நட்ஸ் போன்றவற்றை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
ஆக்சாலிக் அமில உணவுகள்
சில சமயங்களில் ஆக்சாலிக் அமிலம் நிறைந்த உணவுகள் இரும்புச்சத்து உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும். எனவே இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆக்சாலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அளவாக உட்கொள்ள மற்றும் முடிந்த வரை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த ஆக்சாலிக் அமிலமானது வேர்க்கடலை, பசலைக் கீரை, ஓமம் மற்றும் சாக்லேட் போன்ற உணவுகளில் நிறைந்துள்ளன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications