Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வாயில வசம்பு வெச்சு தேய் என்ற பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா? பாட்டி வைத்தியத்தில் அதற்கு பதில் இருக்
இங்கே வசம்பு என்னும் மூலிகையைப் பற்றியும் அது பாட்டி வைத்தியத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்று விவாதிக்கப்பட்டுள்ளது.
வசம்பு பாரம்பரிய பராம்பரியமாக பயன்படுத்தி வரும் மருத்துவ பொருளாகும். இது குழந்தைகளின் வயிற்று வலியை குணப்படுத்தும் சிறந்த பொருளாகும். அதனால் தான் இது "பிள்ளை வளர்ப்பான்" என்றும் அழைக்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு இந்த வசம்பை கையில் காப்பு மாதிரி கட்டுவார்கள்.

இது குழந்தையின் வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லை, வயிற்றில் ஏற்படும் அசெளகரியம், நெஞ்சு சளி போன்றவற்றை குணப்படுத்துகிறது. இந்த கையில் வசம்பு கட்டும் முறையை குழந்தை பிறந்த 12 வது நாட்களில் செய்கின்றனர்.

வசம்பை கடிப்பதால்
பிறந்த குழந்தைகள் தங்கள் கையில் கட்டப்பட்டுள்ள வசம்பை கடிப்பதால் அதன் மருத்துவ சத்து உள்ளே நுழைந்து வயிற்று பிரச்சினைகளை விரைவில் களைகிறது.

வயிறு வீக்கம்
வசம்பை தீயில் சுட்டு பொடியாக்கி அதை தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது வயிறு வீக்கம் அல்லது வயிறு உப்புசம் ஆகியவை சரியாகி விடுகிறது.

பூச்சு நெருங்காமை
வசம்பை சாம்பலாக்கிய பொடியை தண்ணீருடன் குழைத்து குழந்தையின் நெற்றியில் பொட்டு இட்டு வர பால் வாடைக்கு எந்த பூச்சும் பல்லி போன்றவை குழந்தையை அண்டாது. வசம்பு பொடியை குழந்தைக்கு பூசி விடுவதாலும், படுக்கையை சுற்றி தூவி விடுவதாலும் குழந்தையை பூச்சுகள் அண்டாது.

வாய்வு தொல்லை
வசம்பை சாம்பலாக்கிய பொடியை தேங்காய் எண்ணெய்யுடன் குழைத்து குழந்தையின் வயிற்றில் தடவி வந்தால் வாய்வுத் தொல்லை நீங்கும்.

பால் மட்டும் போதும்
வசம்பையும் தேனையும் குழைத்து கொடுக்கும் போது குழந்தைக்கு பால் மட்டுமே உணவாக கொடுத்து வந்தால் விரைவில் வயிறு பிரச்சினை சரியாகி விடும்.

இருமல்
வசம்பு மற்றும் அதிமதுரம் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து இருமல், காய்ச்சல் மற்றும் வயிற்று வலிக்கு உதவுகிறது. நீண்ட நாள் மற்றும் வறட்டு இருமல் இருந்தால், வசம்பு மற்றும் அதிமதுரப் பொடியை சிறிது தேனுடன் கலந்து, இரவில் சாப்பிட்டு வர இருமல் வேகமாக குணமடையும்.

மூளை வளர்ச்சி
இந்த மருந்து குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. மேலும் குழந்தைக்கு நல்ல பேச்சு திறன், நல்ல கண் பார்வை திறன், அழகு, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல் போன்ற எண்ணற்ற பலன்களை அள்ளி வழங்குகிறது

வயிற்று போக்கு
வசம்பு, காயம், அதிவிடயம், சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் கடுக்காய் தோல் இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இதை 1-2 கிராம் அளவு குழந்தைக்கு கொடுத்து வந்தால் சீரணமின்மை, வயிற்று போக்கு மற்றும் வாய்வு போன்றவற்றை குணமாக்கும்.



Click it and Unblock the Notifications