Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.
தமிழ் மற்றும் பல மொழி படங்களில் நடிக்கும் பிரபல நடிகை தமன்னா அவர்கள் நேற்று சாய்ரா நரசிம்ம ரெட்டியின் திரைப்பட டீஸர் வெளியிட்டு விழாவில் பாரம்பரிய அலங்காரத்தில் உடையணிந்து வந்து இருந்தார். தமன்னா பல
தமிழ் மற்றும் பல மொழி படங்களில் நடிக்கும் பிரபல நடிகை தமன்னா அவர்கள் நேற்று சாய் ரா நரசிம்ம ரெட்டியின் திரைப்பட டீஸர் வெளியிட்டு விழாவில் பாரம்பரிய அலங்காரத்தில் உடையணிந்து வந்து இருந்தார். மற்றும் படத்தின் தயாரிப்பாளர்களும் நட்சத்திரங்களும் நேற்று மும்பையில் நடந்த பிரமாண்ட பட டீஸர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டனர். மேலும் டீஸர் வெளியீட்டு விழாவில் திரைப்பட நட்சத்திரங்கள், சிரஞ்சீவி, ராம் சரண், ரித்தேஷ் சித்வானி, ஃபர்ஹான் அக்தர் மற்றும் முன்னணி நடிகை தமன்னா பாட்டியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒரு பாரம்பரிய அலங்காரத்தில் உடையணிந்த இருந்த தமன்னா பாட்டியா டீஸர் வெளியீட்டு விழாவில் முற்றிலும் அழகாக இருந்தார். தமன்னா பல வண்ண துப்பட்டாவுடன் அழகான வண்ண மயமான நீள அனார்க்கலியைத் அணிந்து இருந்தார். அந்த அனார்க்கலியில் மெஜந்தா, மரகத பச்சை, சிவப்பு, கருப்பு, ஊதா மற்றும் தங்க நிறங்களின் பல்வேறு நிறங்களால் இணைக்கப்பட்டு இருந்தது.

ஆடை
தமன்னா அணிந்து இருந்த அனார்க்கலியில் கோடு கோடாக வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் தமன்னாவின் ஸ்லீவ்ஸ் கருப்பு மற்றும் தங்க நிறத்தில் நேர்த்தியான கோடிட்ட கோடுகளுடன் உருவாக்கப்பட்டிருந்தது. அதே போல் அவரது பாவாடையின் கீழ் பகுதி பல நிறங்கள் கலந்து கோடுகளுடன் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அத்துடன் தமன்னா அணிந்து இருந்த துப்பட்டாஅவரின் அலங்காரத்தை உயர்த்தியது.

அணிகலன்கள்
வெள்ளை முத்துக்கள் கொண்ட சோக்கர் நெக்லஸு தமன்னாவின் ஆடைக்கு மிக பொருத்தமாக இருந்தது. மற்றும் கண்களைக் கவரும் ஸ்டேட்மென்ட் மோதிரமும், பாகுபலி நடிகையின் திறந்த அலைஅலையான கூந்தலும் அவரின் அழகை மெருகேற்றியது.

மேக்கப்
தமன்னா பாட்டியா பலருக்கும் இல்லாத மேக்கப் மற்றும் அலங்கார உணர்வைக் கொண்டுள்ளார். தமன்னா எப்போதும் தனது புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்தால் நம்மை ஈர்க்கத் தவறியதேயில்லை. தமன்னாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தினை நீங்கள் பார்க்கும் போது உணருவீர்கள். இந்த டீஸர் வெளியிட்டு விழாவில் தமன்னா பாட்டியாவின் மேக்கப் மிக எளிமையானதாக தோற்றமளித்தது. அதாவது பிரவுன் அண்ட் தங்க நிற மேக்கப் பணியை போட்டு இருந்தார்.

தேவையான மேக்கப் சாதனங்கள்
ப்ரைமர், பவுண்டேஷன், கன்சீலர், பிரவுன் மேட் ஐ ஷேடோ, மெட்டாலிக் கோல்டன் ஐ ஷேடோ, ஊதா ஐலைனர், கருப்பு ஐலைனர், மஸ்காரா, கோல்டன் ஹைலைட்டர், கண்டியூர், ப்ளஷ் மோச்சா பிரவுன் லிப்ஸ்டிக், செட்டிங் பவுடர், செட்டிங் ஸ்ப்ரே, ஐ ப்ரோவ் பென்சில், பியூட்டி ப்ளெண்டர், ஐ ஷேடோ பிரஷ், மற்றும் பிளாட் ஐ ஷேடோ பிரஷ்.

எப்படி மேக்கப் போடுவது
முதலில் ப்ரைமர் எடுத்து முகத்தில் டி-வடிவத்தில் போட்டுக் கொண்டு துளைகளை மறைத்து, சருமத்தை மென்மையாக்குங்கள். இப்போது உங்கள் முகத்தில் பவுண்டேஷன் அப்ளை செய்து பியூட்டி ப்ளெண்டர் பயன்படுத்துங்கள். பின்னர் கண்களின் கீழ் பகுதியில் கன்சீலர் பயன்படுத்தி கருவளையங்களை மறைத்திடுங்கள். செட்டிங் பவுடர் எடுத்து கன்சீலர் மேல் அப்ளை செய்யுங்கள். கண்டியூர்பிரஷ் எடுத்து கண்டியூர் ப்ளென்டில் நனைத்து அதிகப்படியானவற்றைத் தட்டி, உங்கள் கன்னத்து எலும்புகள் மற்றும் தாடை ஆகியவற்றைப் பயன்படுத்தவும். உங்கள் புருவங்களை அழகாக வரைந்துக் கொள்ளுங்கள். கண்களை சுற்றி நன்றாக கன்சீலர் அப்ளை செய்து கொள்ளுங்கள். இப்போது கோல்டன் ஐ ஷேடோ மற்றும் ஊதா ஐலைனர் பின்னர் ப்ளாக் ஐலைனர் அப்ளை செய்யுங்கள். இதனை வரிசையாக போட்டுக் கொண்ட பிறகு மஸ்காரா போட்டு காயவிடுங்கள். காய்ந்த பிறகு இன்னொரு கோட்டிங் கொடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கன்னங்களில் கொஞ்சம் ப்ளஷ் செய்து விட்டு லிப்ஸ்டிக் போட்டு முடித்து விடுங்கள். நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க செட்டிங் ஸ்ப்ரே செய்து தமன்னா போல் பிரதிபளிங்கள்.



Click it and Unblock the Notifications
