Latest Updates
-
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் கஜோல், புடவைகளை கட்டி அசத்தி கொண்டிருக்கும் புகைபடங்கள் உள்ளே
பிறந்த நாள் கொண்டாடும் கஜோல் கட்டி அசத்திய புடவைகளை பற்றி தான் நம் இப்போது பார்க்க இருக்கிறோம் பாரம்பரிய ஆடைகளோ அல்லது வெஸ்டர்ன் ஆடைகளோ கஜோல் எப்போதும் தனியாக தெரிவார்.
கஜோல் 1977 ஆம் ஆண்டு பிரபு தேவா உடன் இணைந்து மின்சார கனவு திரைப்படத்தில் நடித்தார். பின்னர் அவர் தமிழ் படங்கள் எதிலும் நடிக்க வில்லையென்றாலும்இன்று வரை வெண்ணிலவே பாடல் பலர் மனதில் நீங்க இடம் பெற்றுயுள்ளது. பல வருடங்களுக்கு பிறகு தற்போது தனுஷ்யுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி 2படத்தில் நடித்தார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் கஜோல் கட்டி அசத்திய புடவைகளை பற்றி தான் நம் இப்போது பார்க்க இருக்கிறோம். பாரம்பரிய ஆடைகளோ அல்லது வெஸ்டர்ன் ஆடைகளோ கஜோல் எப்போதும் தனியாக தெரிவார். கஜோல் தற்போது பாரம்பரிய மற்றும் கைத்தறி ஆடைகளுக்கு மாறிக் கொண்டு வருகிறார். கஜோல் தனதுபுடவைகளினால் அனைவரும் கவர்ந்து வருகிறார்.

பெங்காலி புடவை
இந்த புடவையானது பெங்காலி மக்களின் கலாச்சார புடவையாகும். இந்த புடவையை துர்கா பூஜை அன்று அணிந்து ஈர்த்தார். இந்த பனராசி பட்டு புடவை வெள்ளை நிறம் மற்றும் சிவப்பு எல்லைகளை கொண்டு இருந்தது. மேலும் அதற்கு ஈடாக கஜோல் அணிந்து இருந்த சிவப்பு நிற ரவிக்கை புடவைக்கு ஈடாக இருந்தது. மேலும் அழகை மெருகேற்றுவதற்கு அவர் அணிந்து இருந்த காதணிகளும், வளையல்களும் பொருத்தமாக இருந்தன. கஜோல் வைத்து இருந்த பொட்டும் அவரது புடவையின் அழகை உயர்த்தியது.

கோல்டன் புடவை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோகா மேத்தாவின் திருமண வரவேற்புக்காக கிளிட்டரி கோல்டன் நிற புடவையை அணிந்து இருந்தார். இந்த புடவையை வடிவமைத்தவர் ராதிகா மெஹரா ஆவார். மேலும் கஜோல் தனது புடவையை ஒரு ஸ்லீவ்லெஸ் ரவிக்கையுடன் சேர்த்து அணிந்து இருந்தார். மேலும் மலர்கள் போன்ற காதணி மற்றும் நெக்லெஸ் அணிந்து தனது அழகை மெருகேற்றினர். ஓரளவு கட்டப்பட்ட முடியும், ஒப்பனையும் கஜோல் தோற்றத்தை நிறைவு செய்தது.

வெல்வெட் புடவை
இது கஜோலின் சமீபத்திய புடவை தொகுப்புகளில் இருந்து மிகவும் கவர்ந்த புடவைகளில் ஒன்றாகும். இந்த புடவையை வடிவமைத்தவர் மனீஷ் மல்ஹோத்ரா. கஜோல், இந்த புடவையை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவிற்கு அணிந்து இருந்தார். மலர் எம்பிராய்டரி மெரூன் பல்லு மற்றும் நீல நிற வீழ்ச்சி புடவை வண்ணத்தை ரசிக்க வைத்தது. புடவையை பேக்லெஸ் ரவிக்கைகளுடன் இணைத்து அணிந்து இருந்தார். மேலும் கஜோல் புடவை முத்து மற்றும் சர்தோஜி வேலைபாடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.



Click it and Unblock the Notifications
