Latest Updates
-
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா?
லேக்மீ ஃபேஷன் வீக் 2023: புதுபுது டிசைன்களில் பல வண்ண ஆடைகளில் கவர்ச்சியாக தோற்றமளிக்கும் மாடல்கள்!
இந்த ஃபேஷன் நிகழ்ச்சியில் பெண்களுக்கானது மட்டுமல்ல. பல ஆண்களும் கலந்து கொண்டு சூப்பர் மாடலாக வலம் வந்தனர். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஷேர்ட், பேண்ட் அதற்கேற்ற ஜாக்கெட் அணிந்து மிகவும் ஸ்மார்ட்டாக தோற்றமளித்தனர்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஃபேஷன் நிகழ்வுகளில் ஒன்றான லேக்மீ ஃபேஷன் வீக் நேற்று தொடங்கி மார்ச் 12ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. ஃபேஷன் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த லேக்மீ ஃபேஷன் ஷோவில் பல்வேறு ஆடை வடிவமைப்பாளர்களின் ஆடைகளை திரை பிரபலங்கள் மற்றும் மாடல்கள் அணிந்து ராம்ப் வாக் செய்து வருகிறார்கள். புகழ்பெற்ற பல டிசைனர்களின் ஆடைகள் இந்த நிகழ்ச்சியில் காட்சிபடுத்த இருக்கிறது. பல ஆடை வடிவமைப்பாளர்கள் தங்கள் திறமைகளை இந்த நிகழ்ச்சி மூலம் வெளிக்கொண்டு வருகிறார்கள்.

இன்று இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திரைபிரபலங்கள் மற்றும் மாடல்கள் அணிவந்த ஆடைகள் கவர்ச்சியாகவும் அழகாகவும் அட்டகாசமாகவும் பார்வையாளர்களை கவர்ந்துவருகிறது. இன்று பிரபல பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கை ஷோஸ்டாப்பராக வலம் வந்தார்.
நம் இந்தியாவில் பெரும்பாலும் பெண்கள் புடைவையே அணிந்து வருகிறார்கள். பாரம்பரிய ஆடையான புடவையை தங்கள் கைகளால் வடிவமைத்திருக்கிறார்கள் பல டிசைனர்கள்.மிக தனித்துவமாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்ட புடவைகள் பார்ப்பவர் அனைவரின் கண்களையும் கவரும் வகையில் உள்ளது.
மிகவும் ஸ்டைலாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை கொங்கோனா சென் ஷர்மா, சோனாலி பிந்த்ரே, மந்திரா பேடி, ஷீபா சத்தா, மானசி ஸ்காட், சோனாலி குல்கர்னி, அஷ்வினி ஐயர், ராஜ்ஸ்ரீ தேஸ்பாண்டே, மோனிகா டோக்ரா, சோனா மொஹபத்ரா மற்றும் கௌரி ஷிண்டே ஆகியோர் அணிந்து ராம்ப் வாக் செய்தனர். நம் பாரம்பரிய ஆடை அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தது.
அதைத்தொடர்ந்து பல டிசைனர்கள் வடிவமைத்த ஆடையை பல மாடல்கள் அணிந்து ராம்ப் வாக் செய்தனர். ஒவ்வொரு ஆடையும் அதன் தனித்துவத்தை கொண்டிருந்தது. புதுபுது டிசைனில் வடிவமைக்கப்பட்ட ஆடை மிக அழகாக அனைவரின் கண்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த ஃபேஷன் நிகழ்ச்சியில் பெண்களுக்கானது மட்டுமல்ல. பல ஆண்களும் கலந்து கொண்டு சூப்பர் மாடலாக வலம் வந்தனர். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஷேர்ட், பேண்ட் அதற்கேற்ற ஜாக்கெட் அணிந்து மிகவும் ஸ்மார்ட்டாக தோற்றமளித்தனர்.
நடிகர் அர்ஜுன் கபூர் கருப்பு நிற பேன்ட், சாம்பல் நிற டி-சர்ட் அணிந்திருந்தார். அதன் மீது ஒரு கருப்பு ஜாக்கெட் அணிந்து மிக அழகாக தோற்றமளித்தார். மேலும் கருப்பு நிற கண்ணாடி கிளாஸ் அணிந்து அனைத்து பெண்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
ஜிகுஜிகு என்று கவர்ச்சியாக தோற்றமளிக்க கூடிய ஆடைகளை அணிந்து அனைவரின் பார்வையும் தன்னை நோக்கி இழுத்துள்ளார். ஜிகினா போல ஜொலிக்கும் ஆடை மாடலுக்கு நேர்த்தியாக பொருந்தி இருந்தது.
எங்கும் காணத அற்புதமான வடிவங்களில் வடிமைக்கப்பட்ட ஆடைகளை இந்த லேக்மீ ஃபேஷன் வீக்கில் நீங்கள் காணலாம். மாடல்கள் தங்கள் அணிந்து வந்த ஆடைகளுக்கு ஏற்ப அணிகலன் மற்றும் காலணிகளை நேர்த்தியாக தேர்வு செய்து அணிந்து வந்தனர்.



Click it and Unblock the Notifications







