Latest Updates
-
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம்
பிரியங்கா சோப்ரா, நிக் ஜான்ஸ் என்ன டிரஸ் போட்டு இருக்காங்க பார்த்திங்களா?
பிரியங்கா சோப்ரா சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் பிரபல பாடகர் மற்றும் நடிகரான நிக் ஜோனாஸ்யை திருமணம் செய்தார். இப்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியான தம்பதிகளாக வலம் வருகின்றனர். மே மாதம் நடந்த
பிரியங்கா சோப்ரா சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் பிரபல பாடகர் மற்றும் நடிகரான நிக் ஜோனாஸ்யை திருமணம் செய்தார். இப்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியான தம்பதிகளாக வலம் வருகின்றனர். நிக் ஜோனாஸ் மற்றும் பிரியங்கா மியான்மரில் சில விடுமுறை நாட்களை கழித்து விட்டு நியூயார்க் நகரத்திற்கு தற்போது வந்து விட்டனர். அவர்கள் இருவருடன் சேர்த்து பிரியங்கா சோப்ராவின் செல்ல பிராணியான டயானா சேர்த்து நியூயார்க்கில் உள்ள உணவகத்திற்கு உணவு அருந்த சென்றுள்ளனர்.

அப்போது பிரியங்கா கருப்பு நிற பிகினி உடை அணிந்து அத்துடன் மேலே புள்ளி இடப்பட்ட மேக்ஸி ஆடையை அணிந்து இருந்தார். அதற்கு நிகராக அவர் உதடுகளில் ரெட் லிப்ஸ்டிக் போட்டு கருப்பு நிற காலணிகளை அணிந்து பேஷன்னை வெளிப்படுத்தினர். மேலும் அனைவராலும் பேசப்படுவது நிக் ஜோனாஸ் ஆடையை பற்றி தான். நிக் ஜோனாஸ் அணிந்து இருந்த சட்டை நீலம், மஞ்சள், மற்றும் கருப்பு ஆகிய கலர்கள் கலந்து புலி வடிவம் போன்று பதிக்க பட்டு இருந்தது. மேலும் அவர் நீல நிற பேண்ட் அணிந்து இருந்தார். அன்று சர்வதேச புலிகள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தனது பேஷன் ஈர்ப்பை வெளிக்காட்டும் விதமாக சர்வதேச புலிகள் தினத்து அன்று புலி அச்சுப்பதிக்க பட்ட ஆடையை அணிந்து வெளிப்படுத்தினர்.

நிக் ஜோனாஸ்
நிக் மியான்மரில் விடுமுறையை கழித்து விட்டத்தில் தனது இசையமைப்பு வேலைகளை மீண்டும் ஆரமிக்க போகிறார். நிக் தனது சகோதரர்களான ஜோ ஜோனாஸ் மற்றும் கெவின் ஜோனாஸ் ஆகியோருடன் வரவிருக்கும் மியூசிக் வீடியோ படப்பிடிப்பில் ஈடுபட போவதாக தெரிய வந்துள்ளது.

பிரியங்கா சோப்ரா
மே மாதம் நடந்த உலகின் மிக பெரிய பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரியங்கா சோப்ரா அனைவர் மனதையும் வென்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்து இருந்த உடையை பற்றி பேசதவர்களே இல்லை. அந்த அளவிற்கு பிரியங்காவின் மேக்கப் மற்றும் உடை அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஷன்
பிரியங்கா மற்றும் நிக் ஜோனாஸ் ஆகிய இருவருமே பேஷன் உலகில் மிக பெரிய முத்திரை பதித்து இருக்கிறார்கள். இவர்கள் அணியும் ஆடைகள் எப்போதும் சற்று வித்தியாசமாக மற்றும் மற்றவர்களால் ஈர்க்க படுவதாகவே உள்ளது. இவர்களின் பேஷன் மற்ற இளம் ஜோடிகளை ஈர்ப்பதாக உள்ளது.



Click it and Unblock the Notifications
