Just In
- 9 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- 19 hrs ago
மைதா போண்டா
- 20 hrs ago
உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 21 hrs ago
திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான பாவங்கள் இவைதான்... இனியாவது திருந்துங்க...!
Don't Miss
- Sports
கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி? என்ன நடக்கிறது?
- News
எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது.. வேளாண் சட்டத்தை திரும்ப பெறுக- ராகுல் காந்தி
- Movies
பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா!
- Finance
வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..!
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தாறுமாறாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த ரம்யா பாண்டியனின் செக்ஸி லுக்ஸ்!
தற்போது பிக் பாக் சீசன் 4-இல் கலக்கிக் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் தமிழில் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களைக் கவர்ந்தார். அதன் பின் அந்த டிவியின் ஒரு காமெடி ஷோவிற்கு தலைவராகவும் இருந்தார். தற்போது பிக் பாஸ் சீசன் 4-இல் கலந்து அசத்தி வருகிறார்.
நடிகை ரம்யா பாண்டியன் சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி தனது போட்டோக்களைப் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்துபவர். பெரும்பாலும் இவர் வெளியிடும் போட்டோக்கள் புடவையில் தான் இருக்கும். ஏனெனில் இவருக்கு புடவை அவ்வளவு அசத்தலாக இருக்கும். அதோடு இவர் புடவைகளில் பல போட்டோசூட்டுகளையும் எடுத்துள்ளார். மேலும் பல நிகழ்ச்சிகளுக்கும் புடவையில் தான் வந்துள்ளார்.
இன்று நாம் காணப்போவது ரம்யா பாண்டியனின் மறக்க முடியாத சில புடவைத் தோற்றங்களைத் தான். அதில் உங்களுக்கு பிடித்தது எதுவென்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீல நிற புடவை
இது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது ரம்யா பாண்டியன் அணிந்து வந்த நீல நிற ப்ளைன் புடவை. இந்த புடவைக்கு இவர் பிரிண்ட்டட் ஜாக்கெட் அணிந்து, கழுத்தில் ஆபரணங்கள் அணியாமல், காதுகளில் மட்டும் காதணியை அணிந்து சிம்பிளாக வந்திருந்தார். இந்த புடவைக்கு ப்ரீ ஹேர் விட்டு வந்தது இவரது தோற்றத்தை இன்னும் அழகாக காட்டியது எனலாம்.

பேபி பிங்க் நிற புடவை
இது சமையல் நிகழ்ச்சிக்கு பேபி பிங்க் நிற சாட்டின் புடவை அணிந்து வந்திருந்த போது எடுத்த போட்டோ. இந்த புடவைக்கும் ரம்யா பாண்டியன் சிம்பிளாக ஆபரணங்கள் அதிகம் அணியாமல் வந்திருந்தார். ஆனால் இந்த புடவைக்கு பொருத்தமாக இவர் போட்டு வந்த ஸ்மோக்கி ஐ மேக்கப் அற்புதமாக அவரைக் காட்டியது.

பச்சை நிற பட்டுப்புடவை
இது பண்டிகையின் போது கோல்டன் பார்டர் கொண்ட பச்சை நிற பட்டுப் புடவை அணிந்து ரம்யா பாண்டியன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட போட்டோ. இந்த பச்சை நிற புடவை ரோஸ் வண்ண எம்பிராய்டரி ஜாக்கெட் அணிந்திருந்தது அட்டகாசமாக இருந்தது. மேலும் இந்த புடவைக்கு மேட்ச்சாக அணிந்திருந்த பச்சை கல் பதிக்கப்பட்ட ஆபரணங்கள், அவரது அழகை மேம்படுத்திக் காட்டியது எனலாம்.

ட்ரான்ஸ்பரண்ட் புடவை
இது போட்டோசூட் ஒன்றிற்கு எலுமிச்சை பச்சை நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்து ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோக்கள். இந்த புடவைக்கும் இவர் எப்போதும் போன்று ஆபரணங்கள் அணியவில்லை. மேலும் சைடு உச்சி எடுத்து, முடியின் முனைகளில் கர்ல்ஸ் செய்து ப்டீ ஹேர் விட்டிருந்தார். மேலும் கண்களுக்கு ஸ்மோக்கி ஐ மேக்கப் போட்டு, உதடுகளுக்கு லேசாக பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டிருந்தார்.

வெள்ளை நிற புடவை
இது வெள்ளை நிற சில்வர் ஜரிகை கொண்ட புடவையில் போட்டோசூட்டில் எடுத்த போட்டோ. இந்த புடவைக்கு இவர் கழுத்து வரையிலான ஜாக்கெட் அணிந்திருந்தது, சற்று வித்தியாசமான தோற்றத்தைக் கொடுத்தது எனலாம். அதோடு காதுகளுக்கு நீளமான காதணி மற்றும் கண்களுக்கு கண் மை போட்டு, ஐ லாஸ் வைத்து, உதடுகளுக்கு வெளிரிய பிங்க் நிற லிப் கிளாஸ் போட்டிருந்தார்.

ஊதா நிற புடவை
இது விஜய் டிவியில் நடைபெற்ற காமெடி நிகழ்ச்சிக்கு தலைவராக வந்த போது அணிந்து வந்த ஊதா நிற புடவை. இந்த புடவைக்கு இவர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். மேலும் ஆபரணங்கள் அணியாமல், கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு, உதட்டிற்கு எப்போதும் போல பிங்க் நிற லிப்ஸ் கிளாஸ் போட்டு வந்திருந்தார்.

பூப்போட்ட புடவை
இது போட்டோசூட் ஒன்றிற்கு பூப்போட்ட புடவை அணிந்து எடுத்தது. இந்த புடவைக்கு குட்டையான கை கொண்ட பச்சை நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். மேலும் ஆபரணங்கள் என்று பார்த்தால், காதுகளில் பெரிய ஜமிக்கி மற்றும் இடுப்பில் ஒரு செயின் என அணிந்திருந்தார். மேக்கப் பற்றி கூற வேண்டுமானால், அதிகமாக மேக்கப் எதுவும் போடவில்லை.

நீல நிற ஷீர் புடவை
இது விழா ஒன்றின் போது நீல நிற ஷீர் புடவைக்கு, முழங்கை அளவிலான வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்து எடுத்த போட்டோ. இந்த புடவைக்கு இவர் இரண்டு அடுக்கு கொண்ட முத்து மாலை அணிந்திருந்தார். மேலும் கண்களுக்கு கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொடுக்குமாறான மேக்கப் போட்டிருந்தார். முக்கியமாக இந்த புடவைக்கு இவர் தனது முடிக்கு பின்னல் போட்டிருந்தார்.

மஞ்சள் நிற புடவை
இது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது ரம்யா பாண்டியன் அணிந்து வந்த அழகான மஞ்சள் நிற புடவை. இந்த புடவைக்கும் இவர் காதுகளுக்கு மட்டும் தான் காதணியை அணிந்து வந்துள்ளார். மொத்தத்தில் இந்த புடவையில் இவர் தேவதை போன்று அழகாக இருக்கிறார் என்று கூறலாம்.

நீல நிற காட்டன் புடவை
இது கோல்டன் பார்டர் கொண்ட நீல நிற காட்டன் புடவையில் எடுத்த போட்டோசூட் படங்கள். இந்த போட்டோசூட்டிற்கு இவர் கவர்ச்சிகரமான போஸ்களைக் கொடுத்துள்ளார். முக்கியமாக இந்த புடவைக்கு இவர் மூக்குத்தி போட்டிருந்தது, இவரது தோற்றத்தையே மாற்றிவிட்டது எனலாம்.