Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்!
இணையத்தைக் கலக்கும் தமன்னாவின் அனல் பறக்கும் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோசூட்!
நடிகை தமன்னா தீபாவளி பண்டிகைக்கு முன் புடவையில் கவர்ச்சிகரமான ஒரு ஃபோட்டோசூட்டை எடுத்து, அதை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் தமன்னா பாட்டியா. இவர் தமிழை விட தெலுங்கில் மிகவும் பிஸியான நடிகையாவார். தற்போது இவருக்கு தமிழில் அவ்வளவாக பெரிய வாய்ப்புக்கள் கிடைக்காததால், நடிகையை மையமாக கொண்ட திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் இவர் தனது சமூக வலைத்தள பக்கத்திலும் அடிக்கடி தனது போட்டோக்களையும் பகிர்ந்து வருவார். இத்தகையவர் சமீபத்தில் இவர் உலகெங்கிலும் பரவியுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வெற்றிகரமாக அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு முன் புடவையில் கவர்ச்சிகரமான ஒரு ஃபோட்டோசூட்டை எடுத்து, அதை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். கீழே அவர் வெளியிட்ட போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஊதா நிற புடவை
இது தான் நடிகை தமன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஊதா மற்றும் அடர் நீல நிறங்கள் கலந்த புடவையில் எடுத்து வெளியிட்ட போட்டோ. தமன்னா அணிந்துள்ள இந்த மின்னும் புடவையானது பிரபல டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்தது.

செக்ஸி ஜாக்கெட்
தமன்னா இந்த இரட்டை நிற மின்னும் புடவைக்கு அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், அந்த புடவைக்கு அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது. அதிலும் இந்த புடவையை தமன்னா அணிந்திருந்த விதம் அவரது கவர்ச்சியை அதிகரித்துக் காட்டியது.

தமன்னாவின் மேக்கப்
தமன்னா இந்த புடவைக்கு பொருத்தமாக கண்களுக்கு மேல் பிங்க் நிற ஐ-ஷேடோ மற்றும் கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் போட்டிருந்தார். மேலும் இவர் உதட்டிற்கு லைட் பிங்க் லிப் ஷேடு மற்றும் கண்களுக்கு காஜல் போட்டிருந்தார்.

ஹேர் ஸ்டைல்
தமன்னா இந்த புடவைக்கு சைடு ஸ்வெப்ட் எடுத்து, முடியின் முனைகளில் லேசாக கர்ல்ஸ் செய்து, ப்ரீ ஹேர் விட்டிருந்தது, அவரது அழகை மேலும் சிறப்பாக காட்டியது.

ஆபரணங்கள்
தமன்னா இந்த மின்னும் புடவைக்கு ஆபரணங்களை அதிகம் அணியவில்லை. முக்கியமாக காதுகளில் எதுவும் அணியாமல், கழுத்தில் மட்டும் டிசைனர் மனீஷ் மல்ஹொத்ராவின் ஜூவல்லரி கலெக்ஷன்களில் இருந்து முத்து மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட நெக்லேஸ் அணிந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
