Latest Updates
-
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்...
சீபம் என்றால் என்ன? அது ஏன் தோல் மற்றும் கூந்தலில் உற்பத்தி செய்யப்படுகிறது தெரியுமா?
சீபம் என்பது நம் உடலில் உள்ள செபாசியஸ் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் மற்றும் மெழுகு போன்ற பொருளாகும். இது உங்கள் சருமத்திற்கு போதிய ஈரப்பதத்தை அளிக்கக்கூடியது. இது உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. நம் உடலில் சுரக்கக் கூடிய இயற்கையான எண்ணெய்யாகும்.
சீபம் என்பது கொழுப்பு அமிலங்கள், சர்க்கரைகள், மெழுகுகள் மற்றும் பிற இயற்கை இராசயனங்கள் சேர்ந்தது. இது நம்முடைய சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நம் உடலில் ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் (57%), மெழுகு எஸ்டர்கள் (26%), ஸ்குவாலீன் (12%) மற்றும் கொலஸ்ட்ரால் (4.5%) என்ற அளவி காணப்படுகிறது.

உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால் உடலில் அதிகப்படியான கொழுப்புச் சத்து உருவாக்கப்படுகிறது என்று அர்த்தம். சரி வாங்க இந்த சீப எண்ணெயை பற்றி விரிவாக காண்போம், இதனால் நம் சருமத்திற்கும் கூந்தலுக்கும் என்ன பயன் என்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.
செபாசியஸ் சுரப்பிகள் உடலில் எங்கெல்லாம் காணப்படுகிறது?
செபாசியஸ் சுரப்பிகள் உடலின் பெரும்பகுதிகளில் எல்லாம் காணப்படுகிறது. இது மயிர்க்கால்களை சுற்றி குழுவாக காணப்படுகிறது. நம் சருமத்தில் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 900 செபாசியஸ் சுரப்பிகள் வரை காணப்படுகிறது.
உங்கள் தாடைகள் மற்றும் பிற மென்மையான மேற்பரப்புகள் பொதுவாக குறைவான சுரப்பிகளைக் கொண்டிருக்கும். ஆனால் உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் எந்த வித சுரப்பிகளும் காணப்படுவதில்லை. இந்த செபாசியஸ் சுரப்பிகள் கண்ணீர் குழாய்களை விட மிக சிறியதாக இருக்கும்.
சீப எண்ணெய் எதற்கு உதவுகிறது?
நம் உடலில் சுரக்கும் சீப எண்ணெய் உற்பத்தி என்பது ஒரு சிக்கலான செயல்முறை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த எண்ணெயின் முக்கிய வேலையே உங்கள் சருமம் மற்றும் கூந்தலின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. சில விஞ்ஞானிகள் இது பெரோமோன்களை வெளியிடுவதற்கும் உதவலாம் என்று கூறுகின்றனர் இது குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.
சீப எண்ணெய் மற்றும் ஹார்மோன்களுக்கு இடையே உள்ள தொடர்பு
உங்கள் உடலில் உள்ள ஆண்ட்ரோஜன்கள் தான் ஒட்டுமொத்த சீப உற்பத்தியை கட்டுப்படுத்த உதவுகிறது. டெஸ்டோஸ்டிரோன் போன்ற மிகவும் சுறுசுறுப்பான ஆண்ட்ரோஜன்கள் உங்கள் அட்ரீனல் சுரப்பிகள் மற்றும் உங்கள் கருப்பைகள் அல்லது ஆணுறுப்பால் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அதே மாதிரி பெண்களுக்கு சுரக்கும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் சீப உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது புரோஜெஸ்ட்டிரோன் 5 ஆல்பா-ரிடக்டேஸ் என்ற நொதியின் விளைவை பலவீனப்படுத்துகிறது. இந்த 5 ஆல்பா ரிடக்டேஸ் தான் சீப உற்பத்தியை செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிக்கும் போது சீப எண்ணெய் உற்பத்தியும் அதிகரிக்கிறது.
சீப எண்ணெய் மற்றும் வயது
நாம் பிறப்பதற்கு முன்பே செபாசியஸ் சுரப்பிகளின் பயன்பாடு ஆரம்பிக்க தொடங்கி விடுகிறது. நாம் கருப்பையில் இருக்கும் போதே , இந்த செபாசியஸ் சுரப்பிகள் வெர்னிக்ஸ் கேசோசாவை உருவாக்குகின்றன. இந்த வெள்ளை பேஸ்ட் போன்ற பூச்சு பிறப்பு வரை உங்கள் தோலைப் பாதுகாத்து ஈரப்பதமாக்குகிறது.
இதுவே நீங்கள் பிறந்த பிறகு இந்த செபாசியஸ் சுரப்பிகள் சீப எண்ணெயை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. முதல் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு, இந்த சுரப்பிகள் ஒரு வயது வரும் வரை சீப எண்ணெயை உற்பத்தி செய்கிறது. அதற்கு பிறகு நீங்கள் பருவமடையும் வயது வரை சீப எண்ணெய் உற்பத்தி குறைகிறது.
பருவமடையும் போது சீப எண்ணெய் உற்பத்தி 500 % வரை அதிகரிக்கிறது. ஆண்கள் பெண்களை விட அதிக சீப எண்ணெய் உற்பத்தியை செய்கின்றனர். இதனால் தான் ஆண்களுக்கு பருவமடையும் வயதில் முகப்பருக்கள் அதிகளவில் தோன்றக் காரணமாக அமைகிறது. பிறகு வயதாக வயதாக இந்த சீப எண்ணெய் உற்பத்தி குறைந்து சருமம் வறண்டு போதல், சரும எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
சீப எண்ணெய் உற்பத்தியை பாதிக்கும் காரணிகள்
* சில வகை மருந்துகள், அடிப்படை நிலைமைகள் மற்றும் பிற வெளிப்புற காரணிகள் போன்றவை செபாசியஸ் சுரப்பிகளை பாதிக்கிறது.
* ஹார்மோன் மருந்துகள் சீப எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதில் டெஸ்டோஸ்டிரான், புரோஜெஸ்டிரோன்கள் மற்றும் பினோதியாசின் போன்றவை அடங்கும்.
* பார்கின்சன் நோயும் சீப எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கிறது.
* பிட்யூட்டரி, அட்ரீனல், கருப்பை மற்றும் டெஸ்டிகுலர் நிலைமைகள் சீப எண்ணெய் உற்பத்தியில் அதிகரிப்பு அல்லது குறைவை ஏற்படுத்தும்.
* சில பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள், ஆன்டிஆன்ட்ரோஜன்கள் மற்றும் ஐசோட்ரெட்டினோயின் ஆகியவை சீப எண்ணெய் உற்பத்தியை குறைக்கின்றன.
* நீண்ட காலம் சாப்பிடாமல் இருப்பது, நீண்ட காலம் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்றவையும் சீப எண்ணெய் உற்பத்தியை குறைக்கின்றன.
எண்ணெய்பசை சருமம் இருப்பவர்கள் சீப எண்ணெய் உற்பத்தியை குறைப்பது எப்படி?
* நீங்கள் பிறப்புக் கட்டுப்பாடு மற்றும் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வந்தால் எண்ணெய் சருமம் குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசலாம்.
* உங்களுக்கு கடுமையான முகப்பருக்கள் பிரச்சினை இருந்தால் ஐசோட்ரெட்டினோயின் மருந்துகளை எடுத்துக் கொண்டு வரலாம். இந்த வாய்வழி மருந்து சீப எண்ணெய் உற்பத்தியை 90 % வரை குறைக்கிறது.
* அதிகப்படியான எண்ணெய் உணவுகள், நிறைவுற்ற கொழுப்பு உணவுகள் இவற்றை தவிர்ப்பது நல்லது.
வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தல் இருந்தால் சீப எண்ணெய் உற்பத்தியை எப்படி அதிகரிக்கலாம்?
* வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புகள் மற்றும் சோப்பு களும் பாதிப்பை உண்டாக்கலாம். எனவே ஆல்கஹால், வாசனை மற்றும் அமிலங்கள் நிறைந்த வாசனை திரவியங்களை தவிருங்கள்.
* சூடான நீரில் குளிப்பதை தவிருங்கள். அது மேலும் உங்கள் சருமத்தை வறண்டு போக வைக்கும்.
* உங்களுக்கு வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தல் இருந்தால் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த மறந்து விடாதீர்கள்.
* அதிகப்படியான தண்ணீர் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











