Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2 முறை போடுங்க...
Anti-ageing Face Masks In Tamil: பொதுவாக வயது அதிகாரிக்கும் போது, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை குறைந்து, சருமத்தில் சுருக்கங்களும், முதுமை கோடுகளும் தெரியத் தொடங்கும். அதோடு சருமத்தின் பொலிவும் குறையத் தொடங்கி, வயதான தோற்றத்தைக் கொடுக்கத் தொடங்கிவிடும்.
இந்நிலையில் வயது அதிகரிக்கும் போது, முதுமை தோற்றத்தை பெறாமல் இருக்க வேண்டுமானால், சருமத்திற்கு முறையான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுக்கும் போது, சரும செல்கள் ஆரோக்கியமாகவும், நெகிழ்வுத்தன்மையுடனும் இருக்கும்.

உங்களுக்கு வயது அதிகரித்துக் கொண்டிருக்கிறதா? உங்கள் சருமம் எப்போதும் இளமையாக காட்சியளிக்க வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒருசில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி பயன்படுத்தி வாருங்கள். இதனால் வயது அதிகரித்தாலும், உங்கள் சருமம் இளமையாகவே காட்சியளிக்கும்.
1. மஞ்சள், ஓட்ஸ், வைட்டமின் ஈ ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 2 துளிகள் வைட்டமின் ஈ எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் சிறிது ஓட்ஸ் பவுடரை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 25 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2 முறை பயன்படுத்தி வர, சருமம் சுருக்கமின்றி அழகாக காட்சியளிக்கும்.
2. தயிர் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. பப்பாளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த பப்பாளியை மசித்துக் கொள்ள வேண்ம்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, சருமம் எப்போதும் இளமையாக காட்சியளிக்கும்.
4. வெள்ளரிக்காய், முட்டை வெள்ளைக்கரு, எலுமிச்சை மற்றும் ஆப்பிள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு துருவிய வெள்ளரிக்காயை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், சருமம் இளமையாகவே இருக்கும்.
5. வாழைப்பழம், மில்க் க்ரீம் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த சிறு வாழைப்பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தின் இளமைத்தன்மையை தக்க வைத்து, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications