Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
உங்க அக்குள் ரொம்ப கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... சீக்கிரம் வெள்ளையாயிடும்...
Dark Underarms Remedies In Tamil: நாம் ஒவ்வொருவருமே வெள்ளையான சருமத்தையே பெற விரும்புவோம். அதற்காக பல முயற்சிகளையும் எடுப்போம். ஆனால் நிறைய பேரின் அக்குள் பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். அதுவும் தற்போது ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிவது ஃபேஷனாக இருப்பதால், பெண்கள் பலர் இந்த மாதிரியான ஆடைகளை அணிய அதிகம் விரும்புவார்கள்.
ஆனால் அக்குள் கருமையாக இருப்பதன் காரணமாக நிறைய பெண்கள் இப்படியான ஆடைகளை அணிய முடியாமல் வருத்தப்படுகிறார்கள். நீங்களும் அப்படி அக்குள் கருமையால் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இந்த அக்குளில் இருக்கும் கருமையைப் போக்க நிறைய க்ரீம்களை வாங்கி பயன்படுத்தி வருகிறீர்களா? இருப்பினும் எந்த பலனும் கிடைத்தபாடில்லையா?

அப்படியானால் நம் வீட்டு சமையலறையில் உள்ள சக்தி வாய்ந்த சில பொருட்களைக் கொண்டு அக்குளுக்கு பராமரிப்பைக் கொடுங்கள். இதனால் நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். இப்போது அக்குள் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
1. டீ-ட்ரீ ஆயில்
* ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 5 டேபிள் ஸ்பூன் டீ-ட்ரீ ஆயிலை எடுத்து, அத்துடன் 1/4 கப் நீரை ஊற்றி நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் தினமும் இந்த கலவையை அக்குளில் ஸ்ப்ரே செய்து காய வைக்க வேண்டும்.
* இப்படி தினமும் ஸ்ப்ரே செய்து காய வைத்து வர, அக்குள் கருமை விரைவில் நீங்கும்.
2. பேக்கிங் சோடா
* ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பஞ்சுருண்டையை எடுத்து, இந்த பேஸ்ட்டில் தொட்டு, அக்குளில் தடவ வேண்டும்.
* பின்பு 10 நிமிடம் அப்படியே ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் பயன்படுத்தி வர அக்குள் கருமை மறையும்.
3. உருளைக்கிழங்கு
* உருளைக்கிழங்கை எடுத்து அதன் தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின் அந்த உருளைக்கிழங்கை துருவ வேண்டும். பின்பு துருவிய உருளைக்கிழங்கை கைகளால் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு பஞ்சுருண்டையை எடுத்து உருளைக்கிழங்கு சாற்றில் நனைத்து, அக்குளில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் அக்குளை கழுவ வேண்டும்.
4. ஆப்பிள் சீடர் வினிகர்
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அப்படி பேக்கிங் சோடாவை சேர்க்கும் போது, முதலில் பொங்கி வரும். அதன் பின் அந்த பேஸ்ட்டை அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும்.
5. கற்றாழை ஜெல்
* நல்ல நற்பதமான கற்றாழையின் ஜெல்லை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை ஃப்ரிட்ஜ்ஜில் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் அந்த கற்றாழை ஜெல்லை அக்குளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
6. மஞ்சள் தூள்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 துளி தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை அக்குளில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
7. வெள்ளரிக்காய்
* வெள்ளரிக்காயை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி ஃப்ரிட்ஜ்ஜில் 1 மணிநேரம் வைக்க வேண்டும்.
* பின் அந்த வெள்ளரிக்காயை எடுத்து அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் அக்குளைக் கழுவ வேண்டும்.
8. முல்தானி மெட்டி
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை அக்குளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மைல்டு கிளின்சர் பயன்படுத்தி அக்குளைக் கழுவ வேண்டும்.
9. எலுமிச்சை சாறு
* ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் பாலை எடுத்து, அத்துடன் எலுமிச்சை துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அந்த எலுமிச்சை துண்டை எடுத்து, அதை அக்குளில் தடவி 3 நிமிடம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பின்பு 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் அக்குளைக் கழுவ வேண்டும்.
10. தயிர்
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் அக்குளைக் கழுவ வேண்டும்.
11. படிகாரம்
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் படிகார பொடியை எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை அக்குளில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும்.
12. கடலை மாவு
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும்.
13. ஆரஞ்சு தோல்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் அக்குளை கழுவ வேண்டும்.
14. ரோஸ் வாட்டர்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 துளி தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
15. சந்தனம்
* ஒரு பௌலில் சந்தனப் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை அக்குளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் அக்குளைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications