Latest Updates
-
மணமணக்கும் செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி - எப்படி செய்யணும் தெரியுமா? -
சங்கரா மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
3 ஸ்பூன் வேர்க்கடலை இருந்தா பீர்க்கங்காயோட சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - தாறுமாறா இருக்கும -
ஹிமாலயன் வயகரா என்று அழைக்கப்படும் இந்த காளானின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா மயக்கமே வந்துரும்... -
சிம்ம ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 2 நாட்கள் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
1 கப் முருங்கைக்கீரையும், 1/2 கப் பொட்டுக்கடலையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 04, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் உதயமாகும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது! -
சனிபகவானின் வக்ர இயக்கம் முடிவுக்கு வருவதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/2 கப் ரவை இருந்தா போதும்.. தீபாவளிக்கு சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.. என்னன்னு பாருங்க..
முகத்துல அசிங்கமா இருக்க முகப்பருவை போக்கி... தக்காளி மாறி உங்க சருமம் மின்ன நீங்க என்ன பண்ணும் தெரியுமா?
உங்கள் அழகான சருமத்தில் அசிங்கமாக முகப்பரு இருக்கிறதா? முகப்பருவினால் உங்க முகம் அழகாக தோற்றமளிக்க வில்லையா? கவலையை விடுங்க. உங்கள் சமையலறையில் இருக்கும் ஒரு பொருள் முகப்பருவை போக்க உதவுமாம். அதோடு, உங்கள் சருமத்தையும் ஜொலிக்க வைக்க உதவுமாம்.
தக்காளி அதன் சக்திவாய்ந்த பண்புகள் காரணமாக தோல் பராமரிப்புக்கான ஒரு அதிசய மூலப்பொருளாக செயல்படுகிறது. அவை லைகோபீனைக் கொண்டிருக்கின்றன, இது வீக்கத்தைக் குறைக்கவும் முகப்பரு வெடிப்பதைத் தடுக்கவும் உதவும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும்.
ஆனால், தக்காளி சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்த உதவும் அமிலத் தன்மையையும் கொண்டுள்ளன. இக்கட்டுரையில், முகப்பரு புள்ளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் மூன்று தக்காளி தோல் பராமரிப்பு ஃபேஸ் பேக்குகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

முகப்பருவுக்கான தக்காளி தோல் பராமரிப்பு பேக்குகள்
தக்காளியில் லைகோபீன் உள்ளது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது சரும வீக்கத்தைக் குறைக்கவும் முகப்பரு வெடிப்பதைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், தக்காளியில் உள்ள கலவைகள் உங்கள் சருமத்தை பளபளப்பாக்கவும் பிரகாசமாகவும் ஜொலிக்க வைக்க உதவுகிறது.
தக்காளி மற்றும் தேன் பேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
- 1 பழுத்த தக்காளி
- 1 தேக்கரண்டி மூல தேன்
செய்முறை
நல்ல பழுத்த தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி, மிருதுவான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த தக்காளி பேஸ்ட்வுடன் ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை தேன் சேர்த்து நன்கு கலக்கவும். கலவையை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும் மற்றும் உலர வைக்கவும்.
தக்காளி மற்றும் அலோ வேரா ஜெல் ஃபேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்
- 1 பழுத்த தக்காளி
- 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்
செய்முறை
தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி, மிருதுவான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதில், ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர், உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி, உலர வையுங்கள். இதற்கான பலனை நீங்களே காணலாம்.
தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு ஃபேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
- 1 பழுத்த தக்காளி
- எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
செய்முறை
தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி, மிருதுவான பேஸ்ட்டாக அரைக்கவும். அதில், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இறுதிக் குறிப்பு
முகப்பரு புள்ளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு தக்காளி ஒரு சிறந்த மூலப்பொருள். மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று தக்காளி தோல் பராமரிப்பு பேஸ் பேக்குகள் செய்ய எளிதானவை. இவை முகப்பருவை போக்கி, உங்கள் சருமத்தை ஒளிர வைக்கிறது.
இருப்பினும், இந்த பேஸ் பேக்குகள் அனைவருக்கும் வேலை செய்யாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் முகப்பரு/பருக்கள் மிகவும் கடுமையாக இருந்தால் தோல் மருத்துவரை அணுகுவது எப்போதும் சிறந்தது.



Click it and Unblock the Notifications

