Latest Updates
-
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா?
வெள்ளையாக ட்ரை பண்றீங்களா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்குகளை தினமும் போடுங்க...
Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலத்தில் அதிக வெயிலின் தாக்கத்தினால், சருமம் விரைவில் கருமையாகும். வெளியே வெயிலில் தினமும் சுற்றுபவர்கள் கோடைக்காலத்தில் சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களைக் கொடுக்காமல் இருந்தால், சரும செல்கள் அதிகம் சேதமடைந்துவிடும். கோடைக்காலத்தில் நீங்கள் கருப்பாக மாறாமல் இருக்க விரும்பினால், பாலைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளை போடுங்கள்.
பாலில் லாக்டிக் அமிலம், கால்சியம், வைட்டமின் பி12, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் டி2 மற்றும் புரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் சரும செல்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை மற்றும் இவை சரும செல்கள் புத்துணர்ச்சி அடையச் செய்வதோடு, சேதமடைந்த சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கிறது மற்றும் சரும நெகிழ்வுத்தன்மை மற்றும் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இப்போது சரும நிறத்தை அதிகரிக்க உதவும் சில பால் ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.

ஃபேஸ் பேக் #1
* ஒரு பௌலில் கடலை மாவு அல்லது முல்தானி மெட்டி பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தை நீரில் கழுவி, துடைத்துவிட்டு, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.
ஃபேஸ் பேக் #2
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, சருமத்தை பளிச்சென்று மாற்றும்.
ஃபேஸ் பேக் #3
* இரவு தூங்கும் முன் சிறிது பாதாமை காய்ச்சாத பாலில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பின் மறுநாள் காலையில் அதை அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை அதிகரிக்க பெரிதும் உதவி புரியும்.
ஃபேஸ் பேக் #4
* நன்கு கனிந்த அவகேடோ பழத்தை சிறிது ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலை சேர்த்து நன்கு கலந்து, அந்த கலவையை கழுத்து மற்றும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #5
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது காய்ச்சாத பாலை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, சருமத்தை பிரகாசமாக ஜொலிக்க வைக்கும்.



Click it and Unblock the Notifications