Latest Updates
-
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்! -
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க -
அக்டோபரில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு பணம் சம்பாதிக்க புதிய வழி கிடைக்கும்! -
சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் சிப்ஸை விட காற்று அதிகமாக உள்ளது தெரியுமா? அது சாதாரண காற்றே இல்லையாம் -
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
அக்டோபர் 06 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும்
முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஒரு பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்...!
கற்றாழையை பலவாறு சருமத்திற்கு பயன்படுத்தலாம். குறிப்பாக கற்றாழை ஃபேஸ் பேக் போடுவது மிகவும் நல்ல பலனைத் தரும். கீழே கற்றாழையைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் அனைவருமே நமது முகம் எப்போதும் அழகாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். அதற்காக சருமத்திற்கு பல பராமரிப்புக்களைக் கொடுப்போம். சருமத்தின் அழகை மெருகேற்ற பல பொருட்கள் இருந்தாலும், அதில் மிகவும் பிரபலமானது கற்றாழை. ஏனெனில் கற்றாழை பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது. முக்கியாக இதில் சாலிசிலிக் அமிலம், சாப்போனின்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நொதிகள் மற்றும் அமினா அமிலங்கள் அதிகளவில் உள்ளன. ஆகவே தான் இது பல சரும பராமரிப்பு பொருட்களில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

உங்களுக்கு கெமிக்கல் கலந்த சரும பராமரிப்பு பொருட்கள் சேராது என்றால், கற்றாழையைக் கொண்டு சருமத்தை பராமரியுங்கள். கற்றாழையை பலவாறு சருமத்திற்கு பயன்படுத்தலாம். குறிப்பாக கற்றாழை ஃபேஸ் பேக் போடுவது மிகவும் நல்ல பலனைத் தரும். கீழே கற்றாழையைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

கற்றாழை மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை கலவை சருமத்தில் நல்ல மாற்றத்தைத் தரும். குறிப்பாக இது நேச்சுரல் டேன் ரிமூவராக செயல்படும். அதற்கு 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 முதல் 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை, மஞ்சள் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
தேன் மிகச்சிறந்த சரும பராமரிப்பு பொருள். இந்த தேனுடன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
தயிர் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டது. தயிருடன் கற்றாழை ஜெல் சேர்த்து அற்புதமான ஃபேஸ் பேக் போடலாம். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு கற்றாழை ஜெல்லுடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் சருமம் மென்மையாகவும், பொலிவோடும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
