Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
முகப்பரு அதிகமா வருதா? இதோ அதை மாயமாய் மறைய வைக்கும் அற்புத வழிகள்!
கோடையில் பெரும்பாலானோர் அவதிப்படும் ஓர் சரும பிரச்சனை என்றால் அது முகப்பருக்கள் தான். உங்கள் முகத்தில் பருக்கள் அதிகமாக வந்து உங்கள் முக அழகை பாழாக்கிக் கொண்டிருக்கிறதா? அதைத் தடுப்பது எப்படி என்று யோசிக்கிறீர்களா?
கோடைக்காலம் வந்துவிட்டது. வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. பலரும் கொளுத்தும் வெயிலால் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்தித்தும் வருகிறார்கள். அதில் கோடையில் பெரும்பாலானோர் அவதிப்படும் ஓர் சரும பிரச்சனை என்றால் அது முகப்பருக்கள் தான். உங்கள் முகத்தில் பருக்கள் அதிகமாக வந்து உங்கள் முக அழகை பாழாக்கிக் கொண்டிருக்கிறதா? அதைத் தடுப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

முகப்பருக்களைப் போக்க பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன. அதில் நாம் இப்போது பார்க்கப் போவது உணவுகளைப் பற்றியோ அல்லது ஃபேஸ் மாஸ்க்குகளைப் பற்றியோ அல்ல. மருத்துவ குணங்கள் நிறைந்த இலைகளைப் பற்றி தான். அதுவும் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய இலைகளைக் கொண்டே எளிதில் முகப்பருக்களை மாயமாய் மறைய வைக்கலாம். இப்போது முகப்பருக்களைப் போக்க உதவும் அந்த இலைகள் எவையென்பதையும், அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் பார்ப்போம்.

லெமன் கிராஸ்/எலுமிச்சை புல்
லெமன் கிராஸ் என்னும் எலுமிச்சை புல்லில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. அதிலும் லெமன் கிராஸ் எண்ணெயில் உள்ள சிட்ரல் என்னும் உட்பொருள், சருமத்தை சுத்தம் செய்வதோடு மட்டுமின்றி, சரும தொற்றுக்களைத் தடுக்கவும் செய்யும். அதற்கு அந்த எண்ணெயை இரவு தூங்கும் முன் பஞ்சுருண்டையில் நனைத்து முகப்பருக்களின் மீது தடவ வேண்டும்.

வேப்பிலை
வேப்பிலை ஒரு பாரம்பரிய நிவாரணப் பொருள். இது சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் அழுக்குகள் சருமத் துளைகளை அடைப்பதைத் தடுக்கிறது. முக்கியமாக சரும தொற்றுகள் மற்றும் முகப்பருக்களைப் போக்குகிறது. அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து பருக்களின் மீது தடவலாம் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் கொண்டு முகத்தைத் துடைத்து எடுக்கலாம்.

கொய்யா இலை
கொய்யா இலையில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை முகத்தில் உள்ள பிம்பிளின் தோற்றத்தைக் குறைப்பதோடு மட்டுமின்றி, பருக்களைத் தடுக்கவும் செய்யும். அதற்கு கொய்யா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் தினமும் முகத்தைக் கழுவ வேண்டும்.

வெந்தய கீரை
வெந்தயக் கீரையில் ஆன்டி-செப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது சருமத்தில் முகப்பருக்களின் தழும்புகளைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. அதற்கு சிறிது வெந்தய கீரை அல்லது வெந்தய விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை தினமும் ஒரு வாரத்திற்கு முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போய்விடும்.

புதினா
புதினா இலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது. இது சருமத்தை சுத்தம் செய்வது மட்டுமின்றி, சிறந்த டோனர் போன்றும் செயல்படுகிறது. இதில் உள்ள சாலிசிலிக் அமிலம், பிம்பிளைத் தடுக்க உதவுகிறது. அதற்கு புதினா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து அல்லது சாறு எடுத்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், நீரால் நன்கு கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.



Click it and Unblock the Notifications
