Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
5 நாட்களில் கருவளையம் போகணுமா? அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...
கண்களைச் சுற்றியுள்ள கருமையான வளையங்கள் பலருக்கும் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். ஏனெனில் இது ஒருவரது தோற்றத்தையே பாழாக்கும். உங்களால் ஐந்து நாட்களில் கருவளையங்களை நீக்க முடியுமா?
உங்களால் ஐந்து நாட்களில் கருவளையங்களை நீக்க முடியுமா? நிச்சயம் பலரும் இது சாத்தியம் இல்லை என்று நினைப்பீர்கள். ஆனால் அது தான் இல்லை. இந்த கட்டுரையில் கருவளையங்களை 5 நாட்களில் எப்படி நீக்குவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. கண்களைச் சுற்றியுள்ள கருமையான வளையங்கள் பலருக்கும் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். ஏனெனில் இது ஒருவரது தோற்றத்தையே பாழாக்கும். ஒருவருக்கு கருவளையங்கள் இருந்தால், அது அவரை சோம்பேறியாக மற்றவருக்கு வெளிக்காட்டும்.

கருவளையங்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதுமை, பரம்பரை, வறட்சியான சருமம், தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற டயட், நீண்ட நேர அழுகை, கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை செய்வது, கண்களுக்கு அழுத்தம் கொடுக்கும் செயல்களை அதிகமாக செய்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்போது கருவளையங்களை 5 நாட்களில் போக்க உதவும் சில எளிய வழிகளைக் காண்போம்.

வழி #1
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை கண்களைச் சுற்றி தடவ வேண்டும். வேண்டுமானால், இத்துடன் 1 டீஸ்பூன் ப்ளாக் டீ சேர்த்து கொள்ளலாம். 20 நிமிடம் நன்கு ஊறியதும், நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் கண்களைச் சுற்றி துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், 5 நாட்களில் கருவளையங்கள் காணாமல் போகும்.

வழி #2
தினமும் இரவு தூங்கும் முன் பாதாம் எண்ணெயைக் கொண்டு கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினந்தோறும் செய்யும் போது, நாளுக்கு நாள் கருவளையங்கள் மெதுவாக மறைய ஆரம்பிப்பதை நீங்களே காண்பீர்கள்.

வழி #3
ரோஸ் வாட்டரில் உள்ள குளிர்ச்சி பண்புகள், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கி, கண்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். அதற்கு ரோஸ் வாட்டரை பஞ்சுருண்டையில் நனைத்து, கண்களை மூடி கண்களின் மேல் வைத்து, 15 நிமிடம் அப்படியே உட்கார வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் மாயமாய் மறையும்.

வழி #4
சில டீ பேக்குகளை ஃப்ரிட்ஜில் வைத்து, சிறிது நேரம் கழித்து அவற்றை வெளியே எடுத்து, கண்களின் மேல் 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், கருவளையங்கள் குறைவதோடு, அதில் உள்ள குளிர்ச்சி பண்புகள் மற்றும் காப்ஃபைன், கண்களைச் சுற்றியுள்ள சருமத் துளைகளுக்கு இதத்தை அளிக்கும்.

வழி #5
எலுமிச்சையில் ப்ளீச்சிங் பண்புகள் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இத்தகைய எலுமிச்சையின் சாற்றுடன் சிறிது நீர் சேர்த்து, அதை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, கண்களை மூடி கண்களின் மேல் வைத்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை என ஓரிரு நாட்கள் செய்தால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை மறைவதைக் காணலாம்.

வழி #6
ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு கண்களைச் சுற்றி மசாஜ் செய்தால், அதில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் நொதிகள், கண்களைச் சுற்றி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கருவளையங்களை மறையச் செய்யும். சிறப்பான பலன் கிடைக்க, தினமும் இரண்டு முறை செய்யுங்கள்.

வழி #7
தேனில் ஆன்டி-ஏஜிங் பண்புகள் உள்ளது. இது சருமத்திற்கு பொலிவையும், இளமைத் தோற்றத்தையும் கொடுக்கும். அதற்கு தேனை தினமும் கண்களைச் சுற்றி சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை மசாஜ் செய்யுங்கள். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க வேண்டுமானால், இரவு தூங்கும் முன் தேனை கண்களைச் சுற்றி தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுங்கள்.



Click it and Unblock the Notifications
