Latest Updates
-
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
மாதவிடாயின் போது முகத்திற்கு சோப்பு பயன்படுத்தக் கூடாதாம், ஏன்?
மாதவிடாய் என்பது மாதம் மாதம் பெண்களுக்கு ஏற்படும் ஒரு சுழற்சியாகும். ஆனால் ஒவ்வொரு மாதத்தின் போதும் பெண்கள் அதனைப் புதிதாக அனுபவிப்பது போலவே உணர்கிறார்கள். மாதவிடாயின் போது உங்கள் சருமத்தினை எவ்வாறு ப
மாதவிடாய் என்பது மாதம் மாதம் பெண்களுக்கு ஏற்படும் ஒரு சுழற்சியாகும். ஆனால் ஒவ்வொரு மாதத்தின் போதும் பெண்கள் அதனைப் புதிதாக அனுபவிப்பது போலவே உணர்கிறார்கள். மாதவிடாயின் போது பெண்களுக்கு வயிற்று வலி, உடல் வலி, எரிச்சல் மற்றும் மனசோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு.

அதேபோல ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களினால் பெண்களின் சருமம் வறண்டு மற்றும் கடினமான ஒன்றாக மாறிவிடுகிறது. எனவே மாதவிடாயின் போது உங்கள் சருமத்தினை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

எண்ணெய் சருமம்
எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்குக் கண்டிப்பாக அவர்களின் மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்மோன்களின் மாற்றத்தினால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தினமும் உங்கள் முகத்தினை இரண்டு முறை சோப்பு பயன்படுத்தாமல் நல்ல பேஷ் வாஷ் பயன்படுத்திக் கழுவுங்கள். சோப்பில் ஒலீயிக் அமிலம் உள்ளது. எனவே பேஷ் வாஷ் பயன்படுத்துவதே சிறந்தது. இதனை நீங்கள் உங்களின் மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்து செய்யத் தொடங்குங்கள். நல்ல டிஸ்யூ கொண்டு முகத்தினை அவ்வப்போது துடைத்துக் கொள்ளுங்கள்.

வறண்ட சருமம்
வறண்ட சருமம் கொண்டவர்கள் அல்லது முகப்பரு உள்ளவர்கள் தேனைப் பயன்படுத்தலாம். தேனில் இயற்கையாக ஆன்டிசெப்டிக் இருப்பது மட்டுமல்லாமல் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கவும் பளபளக்கச் செய்யவும் உதவுகிறது. மேலும் நீங்கள் வீட்டிலேயே வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை பயன்படுத்தி முகத்தில் மாஸ்க் போட்டுக் கொள்ளலாம். இவை உங்கள் முகத்தினை ஈரப்பதத்துடன் வைக்கும். இந்த மாஸ்கினை கழுவிய பின்பு ரோஸ் வாட்டரை முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

மேக்கப்
உங்கள் மாதவிலக்கு நேரத்தில் நீங்கள் மேக்கப் செய்யாமல் இருப்பதே சிறந்து. ஏனெனில் உங்கள் முகத் துளைகளைச் சுவாசிக்க விடுங்கள். முகத்துளைகள் சுவாசிக்க முடியாத காரணத்தினால் தான் முகப்பரு வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகள் வருகின்றன. முகத்திற்கு இயற்கையான பொருட்களாகிய பால் மஞ்சள், பழதோல்கள், தயிர், முட்டை, பப்பாளி போன்றவற்றை பயன்படுத்துங்கள். அப்படி நீங்கள் மேக்கப் அணிய வேண்டிய கட்டாயம் இருந்தால் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு முகத்தினை நன்றாகச் சுத்தப்படுத்தி மாய்சரைசர் பயன்படுத்துங்கள். வெயில் செல்லும் போது கண்டிப்பாக சன்ஸ்கிரீம் பயன்படுத்துங்கள்.

ஆரோக்கியமான உணவு
மாதவிடாயின் போது நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தான் தேர்வு செய்ய வேண்டும். உங்களுடைய விருப்பமான ஜங்க் புட்க்கு பை பை சொல்லுங்கள். சோயா, வான்கோழி, மீன், பீன்ஸ் மற்றும் பயறு வகைகள் போன்ற சத்தான உணவுகளை உண்பதால் உங்களின் இரத்த சர்க்கரை அளவினை அதிகரிக்கும். ஆனால் நீங்கள் உண்ணும் ஜங்க் புட் உங்களின் வாய்க்கு ருசியாக இருந்தாலும் உங்களின் உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்காது. கீரைகள், காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் போன்ற ஆரோக்கியமான உணவுகள் உங்கள் உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும்.

மசாஜ்
மாதவிடாயின் போது உடலுக்கு மசாஜ் செய்வதினால் உடல் வலி மற்றும் சோர்வுகளிலிருந்து விடுதலை பெறலாம். மசாஜ் செய்யும் போது நரம்புகள் மற்றும் தசைகள் மென்மையாக்கப்பட்டு இரத்த ஓட்டத்தைச் சீராக வைக்கின்றன.

தூக்கம்
எவ்வளவு வேலைகள் இருந்தாலும் மாதவிடாயின் போது கண்டிப்பாக நீங்கள் 8 மணி நேரம் தூக்கத்தினை மேற்கொள்ள வேண்டும். உங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது உடல் மற்றும் மனதளவில் சில மாற்றங்கள் நிகழும் அவற்றை எல்லாம் கட்டுப்படுத்த கண்டிப்பாகத் தூக்கம் அவசியம். அப்படியில்லையெனில் மனதளவில் அல்லது உடலில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே கண்டிப்பாக 8 மணிநேர அமைதியான தூக்கத்தை கடைப்பிடிங்கள்.



Click it and Unblock the Notifications