For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருப்பாக இருக்கும் உங்க அந்தரங்க பகுதியை வெண்மையாக்க இந்த ஈஸியான வீட்டு வைத்தியங்களே போதும்...!

அந்தரங்க பகுதிக்கு அருகில் இருக்கும் தொடைப்பகுதி கருப்பாக இருப்பது பெண்கள் மற்றும் ஆண்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான அழகு பிரச்சினைகளில் ஒன்றாகும்.

|

அந்தரங்க பகுதிக்கு அருகில் இருக்கும் தொடைப்பகுதி கருப்பாக இருப்பது பெண்கள் மற்றும் ஆண்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான அழகு பிரச்சினைகளில் ஒன்றாகும். தோல் உராய்வு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு முதல் உடல் பருமன் வரை உள் தொடைப்பகுதி கருப்பாக காட்சியளிப்பதற்கு பல காரணிகள் உள்ளன. இருக்காமான உள்ளாடைகளால் அந்த பகுதியில் எரிச்சலையும் சேர்த்து பெறுகிறார்கள். மார்டன் ஆடைகளை அணியும் நபர்களுக்கு இது மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தும்.

home remedies to lighten dark inner thighs

நீங்கள் இந்த சிக்கலை எதிர்கொண்டு சில தீர்வுகளைத் தேடுகிறீர்களானால், கருப்பாக இருக்கும் அந்த பகுதியை ஒளிரச் செய்ய உதவும் அழகு குறிப்புகள் பட்டியலை நாங்கள் இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம். உங்கள் அந்தரங்க உள் தொடைகளை ஒளிரச் செய்ய நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் இங்கே காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

நிறமியைக் கையாள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று எலுமிச்சை சாறு ஆகும். ஏனெனில் இதில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. இது சேதமடைந்த தோல் செல்களை சரிசெய்ய உதவுகிறது. தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றை கலந்து 10-15 நிமிடங்கள் இந்த கலவையை உங்கள் உள் தொடைகளில் தடவவும்.

MOST READ: நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்களை வேறு உலகத்திற்கு கடத்திச் செல்லுமாம்...!

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

தோல்கள் ஒன்றோடொன்று உராய்வதன் மூலம், உள் தொடை கருமையாக மாறுகிறது. நீங்கள் சமையல் சோடா மற்றும் தண்ணீரின் கலவையை முயற்சி செய்யலாம். இது சருமத்தில் உள்ள கருமையை வெளியேற்ற உதவும். இதை தொடையில் தடவி 10-15 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவவும். இருப்பினும், பேக்கிங் சோடா சில தோல் வகைகளில் கடுமையானதாக இருப்பதால் எச்சரிக்கையாக இதை கையாள வேண்டும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை ஜெல் உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யலாம். கற்றாழை உங்களுக்கு அதிக சரும பாதுகாப்பை அளிக்கிறது. கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி அதை ஊற விடவும். ஜெல் அலோயினுடன் ஏற்றப்படுகிறது. இது சருமத்தை ஒளிரச் செய்ய உதவுகிறது. அதிகபட்ச நன்மைகளுக்கு, கற்றாழையை தவறாமல் பயன்படுத்தவும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்னர் வெட்டிய ஒரு சிறு உருளைக்கிழங்கு துண்டை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி மசாஜ் செய்யவும். நீங்கள் அதை 10 நிமிடங்கள் தேய்க்கலாம். உருளைக்கிழங்கில் கேடகோலேஸ் உள்ளது. இது தோல் அமைப்பில் இருக்கும் கருமையை வெளியேற்ற உதவுகிறது.

MOST READ: வேகமாக பரவி வரும் இந்த காய்ச்சலிருந்து உங்களை எப்படி பாதுகாத்துக்கணும்னு தெரியுமா?

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா

உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகரில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பின்னர் 10-15 நிமிடம் நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், கருமையை போக்கும்.

மசூர் பருப்பு

மசூர் பருப்பு

ஒரு பேக் தயாரிக்க, மசூர் பருப்பை முதல் நாள் இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர், அதை ஒரு தடிமனான பேஸ்டில் பாலுடன் அரைக்கவும். இந்த பேக்கை 15-20 நிமிடங்கள் உள் தொடையில் தடவவும். சிவப்பு பயறு வகைகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் ஏற்றப்படுகின்றன. இது சரும தோலை பராமரிக்க உதவுகிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பிறப்புறுப்பைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி 15-20 நாட்கள் தினமும் செய்து வர அப்பகுதியில் உள்ள கருமை நீங்கியிருப்பதைக் காணலாம்.

MOST READ: உங்க மார்பக காம்பில் அடிக்கடி இந்த பிரச்சனை ஏற்படுகிறதா? அப்ப இத யூஸ் பண்ணுங்க போதும்...!

பால்

பால்

சிறிய காட்டனை எடுத்து பாலில் நனைத்து, கருமையாக உள்ள பிறப்புறுப்பு பகுதியில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் 10-15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை என 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், பாலின் கிளின்சர் தன்மையால், கருமை விரைவில் நீங்கும்.

தக்காளி

தக்காளி

சருமத்திற்குப் பளபளப்பைக் கொடுப்பதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் எண்ணெய்களையும் முற்றிலுமாக நீக்க உதவுகிறது. தக்காளியை பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் நன்றாகத் தேய்து, பின்னர் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். இது சருமத்திலுள்ள கருமையை நீக்கி பளபளப்பை தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

home remedies to lighten dark inner thighs

Here we discussing about the home remedies to lighten dark inner thighs.
Desktop Bottom Promotion