Latest Updates
-
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா?
குளிர்காலத்தில் சந்திக்கும் சரும வறட்சிக்கு குட்-பை சொல்லணுமா? அப்ப இத செய்யுங்க...
மற்ற பருவ காலங்களை விட குளிர்காலத்தில் சருமத்திற்கு இருமடங்கு பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். கீழே குளிர்காலத்தில் சந்திக்கும் சரும வறட்சிப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
Dry Skin During Winter: குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் நிறைய பேர் சரும வறட்சி பிரச்சனையை சந்திக்கின்றனர். குளிர்காலத்தில் ஒரு மோசமான விஷயம் என்றால் அது இந்த சரும வறட்சி பிரச்சனை தான். வறட்சிடையும் சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களை கொடுக்காமல் விட்டுவிட்டால், சருமத்தில் வெடிப்புகள் வர ஆரம்பிப்பதுடன், சருமத்தின் மென்மைத்தன்மையும் போய்விடும். எனவே மற்ற பருவ காலங்களை விட குளிர்காலத்தில் சருமத்திற்கு இருமடங்கு பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம்.

சரும வறட்சியைப் போக்க ஏராளமான பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அனைவருக்குமே கெமிக்கல் கலந்த பொருட்கள் நற்பலனைத் தரும் என்று கூற முடியாது. சொல்லப்போனால் கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்பதை விட, இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்தால், சரும செல்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது குளிர்காலத்தில் சந்திக்கும் சரும வறட்சிப் போக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில்
சரும வறட்சியைப் போக்கும் ஒரு சிறந்த நேச்சுரல் மாய்ஸ்சுரைசர் தான் சர்க்கரை சிரப். இதில் ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை சேர்ந்திருப்பதால், இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சரும வறட்சியையும் போக்கும். அதற்கு 1/2 கப் சர்க்கரையில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி குளிர்காலத்தில் தினமும் இரவு நேரத்தில் செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சி தடுக்கப்படும்.

பால்
பால் வறண்ட சருமத்தைப் போக்க உதவுவதோடு மட்டுமின்றி, பருக்கள் பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. அதற்கு குளிர்ந்த பாலை பஞ்சுருண்டையில் நனைத்து, சருமம் அதிகம் வறட்சியாகும் பகுதிகளில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, சருமம் பொலிவோடும், வறட்சியின்றியும் இருக்கும்.

குளிக்கும் நீரில் எண்ணெய் சேர்க்கவும்
எண்ணெய்கள் மிகச்சிறந்த மாய்ஸ்சுரைசர்களாகும். இந்த எண்ணெய்களை நேரடியாக சருமத்தில் தடவினால் பிசுபிசுப்பாக இருக்கும். ஆனால் குளிக்கும் நீரில் சில துளிகள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிவை ஊற்றி, அந்நீரால் குளித்தால், குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியைத் தடுக்கலாம். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

வேப்பிலைகள்
சரும வறட்சியைத் தடுக்கும் மற்றொரு அற்புதமான பொருள் தான் வேப்பிலை. உங்களுக்கு சருமம் அதிகமாக வறட்சியடைந்தால், 2 டீஸ்பூன் வேப்பிலை பொடியுடன் 1 டீஸ்பூன் மில்க் க்ரீம் மற்றும் 2 டீஸ்பூன் நீர் சேர்த்து கலந்து, அதை சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் வேப்பிலை சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ஊட்டமளிக்கும்.

அவகேடோ
அவகேடோ என்னும் வெண்ணெய் பழம் அதன் பெயருக்கு ஏற்ப எண்ணெய்ப்பசையைக் கொண்டது. இந்த அவகேடோ பழத்தின் தசைப்பகுதியை சிறிது எடுத்து மசித்து, அத்துடன் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் அதிக வறட்சியடையும் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுவதன் மூலம், குளிர்கால சரும வறட்சிக்கு குட்-பை சொல்லலாம்.



Click it and Unblock the Notifications