Latest Updates
-
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
இந்த பழங்கள் இருந்தா போதும் கருவளையங்கள் காணாமல் போய்விடும்
கண்கள் என்பது மிகவும் அழகான மற்றும் வெளிப்படையான ஒரு பகுதியாகும். நம்மிடம் பேசும் அனைவரும் நாம் கண்களை பார்த்து தான் பேசுவார்கள். அப்படிப்பட்ட கண்களை நாம் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியது நாம் கடம
கண்கள் என்பது மிகவும் அழகான மற்றும் வெளிப்படையான ஒரு பகுதியாகும். நம்மிடம் பேசும் அனைவரும் நாம் கண்களை பார்த்து தான் பேசுவார்கள். அப்படிப்பட்ட கண்களை நாம் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமையாகும். கண்களுக்கு கீழ் கருவளையம், கண்களைச் சுற்றி வறட்சி, வயதான ஆரம்ப அறிகுறிகள் போன்றவை பல பேரின் பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. நீங்களும் இது போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் ஒருவராக இருந்தால் கவலைபடத் தேவையில்லை.

உங்கள் கண்களை சுற்றி உள்ள பகுதியில் உள்ள சருமம் மிகவும் மென்மையான மற்றும் முக்கியமான சருமமாகும். எனவே அந்த பகுதியை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டியது உங்களது கடமையாகும். நீங்கள் பயன்படுத்தும் கிரீம் மற்றும் சீரம் மட்டும் உங்கள் கண்களுக்கு தீர்வளிக்காது. நீங்கள் உண்ணும் ஆரோக்கியமான உணவில் உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்த வைட்டமின் சி, ஏ, பி, இ ஆகிய உணவுகளை உட்கொள்ளுவது உங்கள் சருமத்தில் சேதமடைந்த பகுதியை சரி செய்ய உதவும். மேலும் ஆரோக்கியமான உணவுகள் கண் கருவளையங்கள், வறண்ட பகுதி, வயதான ஆரம்ப அறிகுறிகளை தடுக்கும். உங்கள் கண்களை பாதுகாப்பதற்க்கு சரியான வழி உங்கள் உணவில் பழங்களை சேர்ப்பதுதான்.

கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்து உள்ளது. வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் இவை இரண்டும் வயதான ஆரம்ப அறிகுறிகளை குறைப்பதற்கு உதவுகிறது. ஆரஞ்சு பழங்களை விட கொய்யாப்பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்து உள்ளது. இந்த கொய்யாப்பழம் இளமையான சருமத்தை நீடிக்க வைக்கிறது. வைட்டமின் சி நிறைந்த பழங்களை சாப்பிடுவது உங்கள் கண்களின் கீழ் இருக்கும் சருமத்தை ஒளிர செய்து பளபளக்கச் செய்கிறது.

அவோகேடோஸ்
அவோகேடோஸ் கண்களுக்கு கீழ் உள்ள வறண்ட சருமத்தை நீக்க உதவுகிறது. உங்கள் சருமம் தளர்வடையாமல் இருப்பதை உறுதி செய்கிறது. மேலும் அவோகேடோஸில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கண்ணின் கீழ் பொலிவிழந்து உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்து அளித்து பளபளக்கச் செய்யும்.

தக்காளி
தக்காளியை நீங்கள் நேரடியாக உங்கள் கண்களின் கீழ் பயன்படுத்தினாலே கருவளையங்கள் மறைந்துவிடும். தக்காளி என்பது ஒரு சிறந்த நிறம் நீக்கும் பொருளாக செயல்படுகிறது. மேலும் தக்காளி உங்கள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றுகிறது. ஒரு தேக்கரண்டியளவு தக்காளி சாறு மற்றும் ஒரு தேக்கரண்டியளவு எலுமிச்சை சாறு எடுத்து கலந்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை உங்கள் கண்களின் கீழ் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதனை வாரத்திற்கு இரண்டு முறை என சில வாரங்களுக்கு பயன்படுத்துங்கள். இது உங்கள் கருவளையங்களை விரைவில் அகற்ற உதவும்.

வெள்ளரிக்காய்
சோர்வுற்ற மற்றும் வீங்கிய கண்களின் விளைவே கருவளையம் உருவாகக் காரணம். வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் கே கண்களை சுற்றியுள்ள சருமத்தை ஒளிரச் செய்கிறது. மேலும் கருவளையங்களை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள குளிரூட்டும் பண்புகள் உங்கள் சருமத்தை இளமை நிலையில் வைக்க உதவுகிறது. இதை நீங்கள் பேஷ்பேக்காக பயன்படுத்தலாம் மேலும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.

முல்பெர்ரி
முல்பெர்ரி சாப்பிடுவதன் மூலம் வயதான தோற்றத்தை தாமதப்படுத்தலாம். இதன் வேர்கள் மற்றும் மரப்பட்டைகள் சிறந்த குணப்படுத்தும் பண்புகளையும், தோல் ஒளிரும் பண்புகளையும் கொண்டுள்ளது. மேலும் முல்பெர்ரியில் வைட்டமின் ஏ, பி, சி உள்ளதால் கண்ணின் கீழ் ஓளிர வைக்க உதவுகிறது.

ப்ளூபெர்ரி
ப்ளூபெர்ரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உங்கள் கண்களை பாதுகாக்கவும், கண்களுக்கு இரத்த ஓட்டத்தை அளிக்கவும் உதவுகிறது. மேலும் கண்களுக்கு கீழ் உள்ள பகுதிகளை ஒளிரச் செய்கிறது. ப்ளூபெர்ரியில் உள்ள வைட்டமின் சி கரு வளையங்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

கோஜி பெர்ரி
கோஜி பெர்ரி ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இது உங்கள் கண்களை பாதுகாக்கவும் மற்றும் கருவளையங்களை போக்கவும் பயன்படுகிறது. இதில் விட்டமின் பி, சி, பீட்டா கரோடின், அமினோ அசீட்ஸ், மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது. இது உங்கள் கண்களை சுற்றியுள்ள சருமத்தை மெருகேற்றுகிறது.

தர்பூசணி
நீர்ச்சத்தை வழங்குவது மட்டுமின்றி தர்பூசணியில் அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட்களும் நிறைந்துள்ளது. இது கண் பகுதியை சுற்றியுள்ள கருவளையங்கள் மற்றும் சுருக்கங்களை அகற்ற பயன்படுகிறது. வைட்டமின் பி 1, பி 6 மற்றும் சி ஆகியவற்றின் இருப்பு உங்கள் கண் பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications